Wednesday, August 23, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (24-08-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 24.08.2023.    வியாழக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1."திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?

*விடை* : கால்டுவெல்

2.ஐக்கிய நாடுகளவை தினம்?

*விடை* : அக்டோபர் 24

3. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

*விடை* : பிப்ரவரி 28

4. எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?

*விடை* : ஹீலியம்

5.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?

*விடை* : 2008 அக்டோபர் 22


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Young calf knows not fear
🌹 இளங்கன்று பயமறியாது

🌷 Youthful impression last through life
🌷 இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

உலகம் அதிசயிக்கத்தக்க செயல் புரிந்தவர்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒருவர் இளமையில் மந்தமாகவோ, விளையாட்டுத் தனமாகவோ இருப்பதைக் கண்டு அவர்களுடைய பிற்காலத்தைப் பற்றி எவ்விதமாகவும் முடிவு கட்டமுடியாது. ஏதோ சில சமயங்களில்தான் அப்படிப்பட்டவர்கள் பிற்காலத்திலும்கூட இளமையிலிருந்ததைப் போலவே இருப்பார்களே அல்லாமல் எல்லோரும் அப்படியே இருக்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக ரேடியோவைக் கண்டு பிடித்த பிரபல விஞ்ஞானி மார்கோனியின் வாழ்க்கையை உதாரணமாகச் சொல்லலாம்.

மார்கோனி சிறுவனாக இருந்த சமயம், அவருக்கு உலகத்தில் உள்ள பலவகைப்பட்டவர்களையும் பார்க்க வேண்டும், அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது. ஆனால், பல இடங்களுக்குச் சென்று பலரைப் பார்க்க அவருக்கு வசதிதான் இல்லாமல்

இருந்தது. அதனால் அவர் தாம் இருக்கும் உருக்கு அருகிலிருக்கும் இடங்களுக்கு அடிக்கடி போய் வருவார். இப்படி அவர் வீணே சுற்றி வருவதைக் கண்டு அவருடைய தகப்பனார் மனம்வருந்தினார். பையன் இப்படித் திரிந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் எப்படிப் பிழைக்கப் போகிறான் என்று பெரிதும் கவலைப்பட்டார். அதே சமயம் பையனுடைய மனதிலும் ஒரு யோசனை தோன்றியது. பணவசதி இல்லாததால் வெளி நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அங்குள்ளவர்களின் பேச்சைக் கேட்க முடியவில்லையே. ஆனால் ஆசையோ விட்டபாடில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டுமே என்று கருதினார். தேசங்களைப் பார்க்காவிட்டாலும் ஒரு நாட்டிலிருப்பவன் வேறு நாட்டிலிருப்பவனுடைய பேச்சையாவது கேட்க வழி கண்டுபிடிக்க முயற்சி செய்தார்.

மின்சாரத்தின் மூலம் ஒரு கருவியைச் செய்து அதன் மூலம் எல்லா நாடுகளிலும் பேசுவதைக் கேட்கலாம் என்று அவர் மனதிற்குத் தோன்றியது அதற்கு இணங்க தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆனால், அவர் ஆராய்ச்சியில் வெற்றி கானும் வரை, தம்முடைய எண்ணம் ஈடேறும் என்று நம்பவே இல்லை. அவருடைய தகப்பனாரும் அவருடைய முயற்சி வீண் என்றே கூறிவந்தார். வெகு நாட்களுக்குப்பிறகு, மார்கோனியின் ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்தது. வெற்றியைக் கண்டதும் மார்கோனிக்கு, அதைத் தம் வீட்டின் கூரைமீது ஏறிநின்று உரத்த குரலில் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்குத் தைரியம்தான் வரவில்லை. மக்கள் அவர் சொல்வதை நம்புவார்களா என்று சந்தேகப்பட்டார். அவர் சந்தேகப்பட்டது போலவே, மக்களும் முதலில் நம்பவில்லை, நிதர்சனமாகக் காட்டிய பிறகே நம்பினர். அப்பொழுதும் கூட மார்கோனியின் தகப்பனாருக்கு தம்முடைய பிள்ளையின் ஆராய்ச்சியின் மீது சந்தேகமே இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் மார்கோனி கண்டுபிடித்த ரேடியோ சாதனத்தின் உரிமைகளை 50,000 பவுன்களுக்கு வாங்கிய பிறகே அவருடைய சந்தேகம் தீர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.

மார்கோனி தம்முடைய ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ள ரேடியோ சாதனத்தை கண்டுபிடித்தார். அதன் மூலம் தகப்பனார் கொண்டிருந்த கவலைகளையும் போக்கினார். ஆனால் ரேடியோவை கண்டுபிடித்த பிறகு அவருக்கு பல அபாயங்கள் தோன்றாமல் இல்லை. ரேடியோ இயங்குவதால் தங்களுடைய உடலில் மின்சாரம் பாய்வதாக பலர் குற்றம்சாட்டி, பயமுறுத்திக் கடிதங்கள் எழுதினார்கள். அதில் ஒரு ஜெர்மானியன் இங்கிலாந்துக்கே வந்து அவரைக் கொல்லப் போவதாகவும் கடிதம் எழுதியிருந்தான். ஆனால், அக்கடிதம் ரகசியப் போலீசாரிடம் ஒப்படைத்தல் மூலம் அவன் பிடிக்கப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டான்.


இன்று மார்கோனியால் உலகத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் நாம் கேட்கிறோம். அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். பிற்காலத்தில் மார்கோனி இப்படிப் பிரபலம் அடைவார் என்று அவருடைய தகப்பனாரோ, மற்றும் அவரை இளமையில் கண்டவர்களோ கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஏன், அவரே கூட கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார் அல்லவா?

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 சந்திரயான்-3 இந்தியா உலக சாதனை.நிலவைத் தொட்டது இந்தியாவின் புகழ். வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது சந்திராயன்-3. இந்த சரித்திர சாதனையை படைத்த ISRO விஞ்ஞானிகளை தலைவணங்கி பெருமிதம் கொள்கிறது நம் தேசம் ஜெய்ஹிந்த். பிரதமர் மோடி முதல்வர் மு. க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்.

🎯 மூன்று சந்திரயான் திட்டங்களுக்கும் இயக்குனராக பணியாற்றிய தமிழர்கள். சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திரயான் -2 திட்ட இயக்குனர் வனிதா. சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்.

🎯 இந்தியாவுக்கு நாசா பாராட்டு.

🎯 சந்திரயான் -3  வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் அறிவிப்பு.

🎯 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.

🎯 சாலை ஓரங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் செப்டம்பர் 1 முதல் அகற்றப்படும்.

🎯 நீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்திய மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

🎯 முதுநிலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு என் எம் சி விளக்கம்.

🎯 அண்ணா பல்கலையில் பி. ஆர்க் கலந்தாய்வு 31ஆம் தேதியுடன் முடிகிறது.

🎯11,12 - ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொது தேர்வுகள் . மத்திய அரசு கல்வி வாரியத்தில் புதிய பாடத்திட்டம் தயார்.

🎯 பி. இ. ஓ பதவிக்கு தேர்வு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்.

🎯 எண்ணங்களை அழுக்காக்கும் கருத்தியல்களை புறந்தள்ளுங்கள் என மாணவர்களுக்கு முதல் மு க ஸ்டாலின் அறிவுரை.

🎯 தகவல் பெறும் உரிமை சட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென என தலைமைத் தகவல் ஆணையர் அறிவுறுத்தல்.

🎯 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு பிரிக்ஸ் விவகாரத்திற்கு இந்திய ஆதரவு தெற்கு பகுதி நாடுகளுக்கு முக்கியத்துவம் தருவதற்கு வரவேற்பு.

🎯 மருத்துவத்துறையில் மேம்பட்ட மாநிலம் தமிழகம் என மோரிஸ் சுகாதாரத் துறை அமைச்சர் பாராட்டு.

🎯 காவிரி விவகாரம் பிரதமரை சந்தித்து முறையிட கர்நாடக அனைத்து கட்சி குழு முடிவு.

🎯 செயற்கை நுண்ணறிவு தர அறிவியல் பாடங்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்துவது அவசியம் என குடியரசுத் தலைவர் திரௌபதி தெரிவித்தார்.

🎯 கனவு தேசத்திற்கு ஒவ்வொரு வாக்கும் அவசியம் என தேர்தல் ஆணையத்தின் புதிய தேசிய தூதர் சச்சின் வலியுறுத்தல்.

🎯 கொழும்பு துறைமுகத்தில் ஆராய்ச்சி கப்பலை நிறுத்த அனுமதி கேட்டு இலங்கையிடம் சீனா மனு.

🎯 அஜர் பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் மீண்டும் டிரா டை பிரேக்கில் இறுதி சுற்று.

🎯 அங்கேரியில் நடைபெறும் உலக த் தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவர் நீளம் தாண்டுதலில் இறுதிச்சுற்றில் இந்தியரும் தமிழருமானஜெஸ்வின் ஆல்ட்ரின்.

🎯 ஜெர்மனியில் நடைபெற்ற 4- நாடுகள் ஜூனியர் ஹாக்கி போட்டியில் இங்கிலாந்து வீழ்த்தி இந்திய மகளிர் அணி மூன்றாம் இடம்.

🎯 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

🎯 உலக துப்பாக்கி சுடுதல் அமன் பிரீத்துக்கு தங்கம்.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 India lights up the dark side of the moon. Chandrayan-3's lander touches down precisely at 6.03 p.m. Sparking celebration.. the success belongs to all of humanity. We can aspire for the moon and beyond : PM. Communication link established between lander and mission centre in Bengaluru. Rover will do chemical analysis of the lunar surface in the next 14 days.

🎯 City residents celebrate with gusto as chandrayaan-3 keeps date with moon.

🎯 Moon Now in India's orbit. India becomes the 4th century to demonstrate the soft landing on moon.

🎯 Opposition leaders kankrojulate ISRO for dedication ingenuity.

🎯 It's a truly momentus occasion says president.

🎯 A testament to India's progress in science : Russia

🎯 National curriculum framework proposes board exams twice a year. Students of classes 11th and 12th to study two languages. Including one Indian tongue. While students of classes 9 and 10 to study three; NCF follows the lead of NCP 2020. and will form the basis for formulating new text books from classes 3 to 12.

🎯 Doctors question government order on incentive marks for COVID duty.

🎯 Tamil Nadu realisation of cauvery water crosses 25 TMC.

🎯 All party delegation to meet PM Modi on cauvery issue.

🎯 Governor had sought UGC's response before vetoing common syllabus.

🎯 Provide reservation to transperons in local body polls High court directs state government.

🎯 India welcome's consensus - based approach to expand BRICKS: PM.

🎯 Modi, Xi likely to attend East Asia summit, Asian meetings in Jharkhand.

🎯 Unwell Carlsen, focused pragg play out quick draw.

🎯 Aldrin makes the special bib count, progresses to final.

🎯 Final T20 I washed out men in blue win series 2-0.

🎯 Treesa - Gayatri, Satwik- pairs in pre- quarter finals.

🎯 Gold medal for amanpreet Singh.

🎯 Indian women wallop England.





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலை தமிழாசிரியர் 
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...