Wednesday, August 16, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (17-08-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 17.08.2023.    வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?

*விடை* : கோமல் சுவாமிநாதன்

2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?

*விடை* : ஒட்டக்கூத்தர்

3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?

*விடை* : அசலாம்பிகையார்

4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?

*விடை* : தாயுமாணவர்

5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?

*விடை* : அயோத்தி தாசர்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 All covt, all loss
🌹பேராசை பெரு நஷ்டம்

🌷 Art is long and life is short
🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

கோடாரி உத்தி


மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.

நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 ஐந்து மாநில சட்டசபை நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக காங்கிரஸ் போட்டி போட்டு ஆலோசனை.

🎯 தேர்தல் நெருங்குவதால் அறிவிப்புகளை வெளியிடும் பாஜக அரசு 32 500 கோடியில் ரயில்வே விரிவாக்க திட்டங்கள்.

🎯 திருச்சியில் சுதந்திர தின விடுமுறை வழங்காத 85 நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அதிரடி.

🎯பத்திரிக்கையாளர்களின் ஓய்வூதியம் 12 ஆயிரம் ஆகும் உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் சாமிநாதன் பேட்டி.

🎯 புதிய பத்தாயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ 15 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎯 ஜனாதிபதி மாளிகை பூங்கா மீண்டும் திறப்பு.

🎯 தட்டச்சர் பணி நியமனத்துக்கு சான்று சரிபார்ப்பு இரண்டாம் தேதி துங்குவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

🎯 முதுநிலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கால அவகாசம்.

🎯 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு சந்திரயான் மூன்று நிலவை நெருங்குகிறது என இஸ்ரோ தகவல்.

🎯 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து பைனலில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஏமாற்றம்.

🎯 இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் டிசம்பர் 9, 10ல் இரவு நேர கால்பந்தயம் அமைச்சர் உதயநிதி முன்னிலையில் ஒப்பந்தம்.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 cabinet nod for 10000 electric buses in 169 cities.

🎯 Special camp for differentially abled to be held on August 19.

🎯 Chandrayan three takes another crucial step closer to moon.

🎯 Expansion of digital India programme gets Rs 14903 crore outlay.

🎯 Cabinet Nod for a 7 rail connectivity projects worth rupees 32500 core.

🎯 UGC to standardise PG courses in study of manuscripts.

🎯 Praggnandhaa strikes back ; gukesh and Vidit eliminated.

🎯 Ruthless England just too good for a fighting Australia.

🎯 Indian compound arches March into the final.

🎯 Anwar alis brace fires bagon past machhindra.






இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...