Sunday, August 13, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்(14-08-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 14.08.2023.    திங்கள்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்த சுரப்பியின் பெயர் என்ன?


விடை : அட்ரீனல் சுரப்பி


2. மனித உடலில் தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி எது?


விடை : பிட்யூட்டரி சுரப்பி


3. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன்கள் எவை?


விடை : மெலட்டோனின்


4. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?


விடை : தைராய்டு ஹார்மோன்


5. எந்த திரவத்தில் மூளை மிதந்த நிலையில் உள்ளது?


விடை: தண்டுவடத் திரவம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A good beginning Makes good ending
🌹 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


🌷 A bad day never hath a good night
🌷 முதலில் கோணல் முற்றிலும் கோணல்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

விடாமுயற்சியே வெற்றியைத் தேடித் தரும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?

எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 🎯 77- வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம் தில்லி செங்கோட்டையில் ஏற்பாடுகள் தயார்.

🎯 கோட்டை கொத்தளத்தில் நாளை கொடியேற்றுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

🎯 சென்னையில் பாதுகாப்பு பணியில் 9000 காவலர்கள்.

🎯 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக  1016 பேருக்கு பதவி உயர்வு விரைவில் ஆணை.

🎯 உடல் உறுப்பு தானம் செய்வோம் தமிழக முதல்வர் வேண்டுகோள்.

🎯 திருச்சி, சிதம்பரம் சிறந்த மாநகராட்சிகளாக தேர்வு. ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சிறந்த நகராட்சிகளாகத் தேர்வு.

🎯 கல்வி , ஆய்வுக் கூடங்களை சர்வதேச போட்டிக்கு ஏற்ப தயார்படுத்த வேண்டும் என துணைவேந்தல் பிகே பொன்னுசாமி அறிவிப்பு.

🎯 பி.ஆர்க். படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.

🎯 துணை மருத்துவ படிப்புகள் இன்று முதல் இணைய வழி கலந்தாய்வு.

🎯 யோகா- இயற்கை மருத்துவப் படிப்புகள் விண்ணப்ப அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு.

🎯 சுய உதவி குழுக்களுக்கு ரூ 100 கோடி வங்கி கடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று வழங்குகிறார்.

🎯 காவிரி நீர் பங்கீடு 131 ஆண்டுகளாக தொடரும் சட்ட போராட்டம்.

🎯 சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் இன்று உரை.

🎯 போக ஊடகங்களில் முகப்பு படமாக தேசியக்கொடி வைக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு.

🎯 இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை என பிரிட்டன் இணையமைச்ச தகவல்.

🎯 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

🎯 டி 20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்.

🎯 தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மேலும் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯🎯 77th Independence Day celebrations are ready in Delhi's Red Fort tomorrow.

🎯 Tamil Nadu Chief Minister Stalin will hoist the flag at the Fort Kothalam tomorrow.

🎯 9000 policemen on security duty in Chennai.

🎯 Promotion of 1016 people as head teachers in government schools will soon be ordered.

🎯 Let's donate organs, Tamil Nadu Chief Minister's request.

Trichy, Chidambaram selected as best Municipal Corporations. Rameswaram, Thirutharapoondi and Mannargudi were chosen as the best municipalities.

🎯 Vice-Chancellor PK Ponnusamy announced that education and research institutes should be prepared according to international competition.

🎯 B.Arch. Publication of Study Rank List.

🎯 Paramedical courses online consultation from today.

🎯 Opportunity to extend application period for Yoga- naturopathy courses.

🎯 Minister Udayanidhi Stalin provides Rs.100 crore bank loan to Self Help Groups.

🎯 Cauvery water sharing legal battle going on for 131 years.

🎯 President's speech today on the occasion of Independence Day.

🎯 Prime Minister Modi has called for the national flag to be used as the front page of the media.

🎯 British Cabinet informed that appropriate action should be taken to ensure the security of the Indian Embassy.

🎯 India is ranked third in the Asia Champions Cup hockey tournament.

🎯 West Indies won the T20 series.

🎯 Tamil Nadu Puducherry Karaikal areas are likely to receive rain for another 6 days, Chennai Meteorological Department has announced.




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...