Tuesday, August 29, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (30-08-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30/08/2023      புதன் கிழைமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  அருள் உடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

 அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.                                                                                                                                                                                
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. மாங்கனியின் அறிவியல் பெயர் என்ன?

விடை : மாஞ்சிஃபெரா இண்டிகா.

2. உலகில் உள்ள மிகவும் பழமையான மத்திய தேசிய ஹெர்பேரியம்(CNH) எங்கு உள்ளது?

விடை : ஹவுராவில் உள்ளது.

3.ஒரு சொல் உயிரினங்கள்  வகைகள் எத்தனை? அவை யாவை?

விடை : இரண்டு வகைப்படும். அவை 1.புரோகேரியோட்டுகள்
2. யூகேரியோட்டுகள்.

4. உயிரினங்களின் இரு பேரரசு வகைப்பாட்டை தோற்றுவித்தவர் யார்?

விடை : லின்னேயஸ்

5. உயிரினங்களின் புதிய ஐந்து பேரரசு வகைப்பாட்டை தோற்றுவித்தவர் யார்?

விடை : விட்டேகர் (1969 ஆம் ஆண்டு)


 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹The greater the ambition the greater the low
🌹பேராசை பெருநட்டம்.

🌷Blood is thicker than water
🌷தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

முயற்சியே வெற்றி தரும்


☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

யானைகள் பயிற்சி செய்யும் இடத்தை சுற்றி பார்க்க ஒருவர் வந்திருந்தார். அந்த இடத்தை பார்த்தவருக்கு ஒரே வியப்பு.

அவ்வளவு பெரிய உருவம் உள்ள அந்த யானைகளை, அதன் ஒரு முன்னங்கால்களில் சுற்றப்பட்டிருந்த சிறு கயிற்றை மட்டும் கொண்டு கட்டிப்போட்டு இருந்தனர்.

சங்கிலிகள், கூண்டுகள் ஹுஹும்ம்ம்ம் எதுவும் இல்லை!

அந்த யானைகள் எப்போது வேண்டுமானாலும் அந்த கயிற்றை அறுத்துக் கொண்டு போய் விடலாம் என்றே தோன்றியது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக எந்த ஒரு யானையும் அப்படி செல்ல முயல்வதாகவே தெரியவில்லை.

இதை பார்த்தவருக்கு வியப்பு தாங்கவில்லை.

அப்போது அந்த பக்கம் ஒரு பயிற்சியாளர் நடந்து செல்லவும், அவரை நிறுத்தி தன் மனதில் இருக்கும் கேள்வியை கேட்டே விட்டார்.

"இந்த யானைங்க குட்டியா இருக்கும்போது இதே சின்ன கயிறுல கட்டி போடுவோம் சார். அப்போ அதுங்க சைசுக்கு அதுவே போதும். அப்போது ஓட முயற்சி செய்தாலும் அதால இந்தக் கயிற்றை அசைக்க முடியாது. இந்த கயிற்றை நம்மால் அறுக்க முடியாது என்று அதுங்க மனதில் ஆழமாக பதிந்திடும். அதுக்கப்புறம் வருஷம் போகப் போக அவங்க பெருசா ஆனாலும் அதையே உண்மை என்று நினைச்சுக்கிட்டு கயிற்றை அறுக்க முயற்சியே செய்யாதுங்க.."

பயிற்சியாளர் சொன்னதை கேட்டவர் அதிசயப்பட்டார்.

அந்த யானைகளுக்கு நல்ல பலம் இருந்தது. சின்னதாக அசைந்தாலே அந்த கயிற்றை அறுத்து விடலாம். ஆனால் மனதினுள் முடியாது என்ற அவநம்பிக்கை இருக்கவே அதை முயற்சி கூட செய்யாமல் இருக்கின்றன.

இந்த யானைகளைப் போல நம்மில் பலரும் ஒரு முறை முயற்சி செய்து தோற்றுப் போனதால் நம்மால் அதை செய்ய இயலாது என நினைத்துக் கொள்கிறோம்.

உண்மையில் தோல்வி என்பது நமக்கு ஏற்படும் பாடம். தோற்றுப் போக பயந்தால் வெற்றியும் நம்மை தேடி வராது.

தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு நமது நம் வாழ்க்கையை தொடர்ந்து போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.




🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.

🎯 தமிழக அரசின் கோரிக்கையின்படி காவிரியில் உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடகம் மறுப்பு.

🎯நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

🎯நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தகவல்

🎯நிலவின் தென்துருவத்தில் கந்தகம்(சல்ஃபர்) இருப்பதை உறுதி செய்த ரோவர்: இஸ்ரோ  தகவல்.

🎯நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன: ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தகவல்.

🎯குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணிகளை துவக்கியது இஸ்ரோ

🎯ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம்: மாநகர போக்குவரத்து கழகம் ஒப்புதல்

🎯 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் செய்ய வாய்ப்பு என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவிப்பு

🎯 அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு .

🎯 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க பள்ளியை கல்வித்துறை ஏற்பாடு.

🎯 பள்ளி மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண். தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை.

🎯 மாணவரின் பட்ட சான்றில் ஆதர் எண் குறிப்பிடக் கூடாது என ஏ ஐ சி டி இ அறிவுறுத்தல்.

🎯 இந்திய தேசிய பொறியியல் அகாடமியில் பொறியியல் கல்லூரிகள் நிறுவன உறுப்பினர் ஆகலாம் என ஏ ஐ சி டி இ ஒப்புதல்.

🎯 கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளி தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

🎯கோவை மாநகரில் இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த மாநகர காவல்துறை.

🎯தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். சேர்க்கை செப். 15 வரை விண்ணப்பிக்கலாம்.

🎯 ஜெயங்கொண்டத்துக்கு கைத்தறி பூங்கா மாற்றம் கும்பகோணம் நெசவாளர்கள் ஏமாற்றம்.

🎯இன்னும் சில மாதங்களில் 3000 மருத்துவப் பணியாளர்களுக்கு பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

🎯எல்லைப் பிரச்சினை | அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா

🎯தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

🎯 எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எப்போதும் உதவுவது ஒரு நாள் போட்டிகளே என்றார் விராட் கோலி.

🎯 உலகக் கோப்பை: உடல் தகுதியை நிரூபிக்க கேன் வில்லியம்சனுக்கு இரண்டு வாரம் அவகாசம்.

🎯 சிறந்த பந்துவீச்சாளர்கள் அடங்கிய இந்திய அணியை விராட் கோலி இடம் ஒப்படைத்தவர் தோனி என இஷாந்த் ஷர்மா தகவல்.

🎯 ஆசிய கோப்பை ஒரு நாள் தொடர். முல்தானில் இன்று கோலாகல தொடக்கம். ஆறு நாடுகள் பங்கேற்பு. முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாளம் பலப்பரீட்சை.

🎯 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வெற்றியுடன் தொடங்கினார் ஜோகோவிச்.4-ம் நிலை வீரரான ஹோல்கர் ரூன் அதிர்ச்சி தோல்வி.

🎯 உலக பாட்மிண்டன் தரவரிசை. ஹெச் எஸ் பிரனோய் 6-வது இடத்திற்கு முன்னேற்றம்.


TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Centre slashes LPG prices by rupees 200 season.

🎯 Kaveri water management authority direct Karnataka to ensure 5000 cusecs for Tamil Nadu.

🎯 Karnataka told to release 5000 cusecs for Tamilnadu.

🎯 Webinar on affordable healthy diet on September 1.

🎯 Udhayanidhi Stalin inspect pace of work on modern footwear making unit at Erariyur.

🎯 Karaikal to focus on institutions to create awareness of drug abuse.

🎯 Delta farmers disappointed with state incentive price for paddy.

🎯 Doctors flag issue of vacant posts after ministers action following inspection.

🎯 India lodges 'strong protest with China over new map; 'absurd claims,' says minister.

🎯 Aksai chin Arunachal are inalienable parts of India, says Congress.

🎯 41.1% NREGS workers out of Aadhaar- based wage system.

🎯 Cyclone frequency may rise over Indian coast from the warming of specific: study.

🎯 Pragyan confirms sulphur near South pole on moon; search on for hydrogen.

🎯 More than 1000 schools destroyed in Ukraine since war began, says UNICEF.

🎯 When injuries happen, we try and rotate a few players: Dravid.

🎯 Rahul to miss group stage matches of Asia Cup.

🎯 Djokovic in cruise mode; Gauff wins tense affair; Wozniacki back in style.

🎯 Indian army in the semi final race.





🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...