Sunday, August 20, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (21-08-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 21.08.2023.    திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கேள்வி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

           செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்
.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.முன்வேதகால முக்கிய கடவுள் எது?

*விடை* : இந்திரன் மற்றும் அக்னி

2.ஐ.நா. சபையின் முதல் பொது செயலாளர் யார்?

*விடை* : திறிகுவே இலீ

3.UNESCO என்பது

*விடை* : ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு

4.சிந்து சமவெளி நாகரிக காலம் ?

*விடை* : கி.மு.3300 முதல் கி.மு.1900 வரை என கருதப்படுகிறது.

5.UNICEF - என்பது?

*விடை* : ஐ.நா. குழந்தைகள் நல முன்னேற்ற நிதி நிறுவனம். (நியூயார்க்)


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 No honest man ever repented of his honesty.
🌹 பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.

🌷 No rains no gains
🌷 மாரி அல்லது காரியம் இல்லை.




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

உழைப்பின் பலன் இனிது
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

மங்கூ என்றொரு குரங்கு இருந்தது. நந்தவனத்தில் வசித்த மங்கூ கூட நாள் முழுவதும் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவி குதித்து விளையாடும். அதனிடம் இருந்த கெட்டப் பழக்கம் மற்ற மிருகங்களிடம் இருந்து உணவை பறித்துத் தின்பது தான். சரியான சோம்பேறி, மற்ற மிருகங்கள் சேமித்த உணவை பறித்துத் தின்று வந்தது. எல்லா மிருகங்களும் கோபப்பட்டன. இருப்பினும் எதுவும் செய்ய முடியவில்லை. யாராலும் அதை பிடிக்க முடியவில்லை.
    
    ஒரு நாள் டிங்கூ யானைத் தோட்டத்திலிருந்து வாழையும் மரத்தைப் பறித்தது. அதன் குழந்தைகளுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும் என்பதால் டிங்கூ அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தது. வழியில் அதைப் பார்த்த மங்கூ வாழைப்பழங்களை பறித்துத் தின்ன ஆரம்பித்தது. டிங்கூ மங்கூவிடம்,"என் குழந்தைகள் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. அவர்களுக்கும் சிறிது விட்டுவை என்றது. ஆனால் மங்கூ , எல்லா பழங்களையும் சாப்பிட்டு விட்டது
டிங்குகூ துயரத்துடன் அழுது கொண்டே சென்றது.

      இதேபோல் சிங்கி குருவியையும் தொல்லைப்படுத்தி வந்தது. மரத்தில் கூடு கட்டி தன் குழந்தைகளை வளர்த்த சிங்கி அவற்றுக்கு தானியத்தை எடுத்து வந்து வைத்து விட்டு செல்லும். மரக்கிளையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் மங்கூ, அந்த தானியங்களை எடுத்து சாப்பிட்டு விடும். பலமுறை சிங்கியின் குழந்தைகளுக்கு காயமும் ஏற்பட்டது.

    நந்தவனத்தில் இருந்த எல்லா மிருகங்களும் காட்டு ராஜா சிம்பூ சிங்கத்திடம் மங்கூவைப் பற்றி புகார் செய்ய எண்ணின.  சிம்பூவிடம் கூறியதும் சிங்கம்,"சரி, நான் ஏதாவது வழி செய்கிறேன்"என்றது.

     சிம்பூ தந்திரமாக மங்கூவைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி, திட்டத்தை எல்லா மிருகங்களுக்கும் கூறியது. எல்லா மிருகங்களும் சம்மதித்தன. சிம்பூ மங்கூவிடம்,"நாளை என் வீட்டில் பெரிய விருந்து; எல்லோரும் வருகிறார்கள். நீயும் வா" என்றது.

      மங்கூவும், 'நாளை நான் அதிக உணவை சாப்பிடுவேன் பிறகு சில நாள் உணவுக்கு அலைய வேண்டாம்' என்று எண்ணியது.

    எல்லா மிருகங்களும் மங்கூவிற்கு பாடம் புகட்ட தயாராகின.

     டிங்கூ  யானை மற்றும் இதர மிருகங்கள் சேர்ந்து ஆழமான பள்ளம் ஒன்றைத் தோண்டியது. பிறகு அதில் தண்ணீர் நிரப்பின. அதன் மேல் சிங்கி குருவி மற்றும் இதர மிருகங்கள் புல்லைப் போட்டு அங்கு பள்ளம் இருப்பது தெரியாதபடி மூடி வைத்தன.

    எல்லா மிருகங்களும் மாலை நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தன. மாலையில் மங்கூ விருந்து சாப்பிட வந்தது. எல்லா மிருகங்களும் அங்கு இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தது."நண்பர்கள் எல்லோரும் வந்து விட்டார்களா? நான் விருந்துக்கு தயார், உணவு எங்கே இருக்கிறது?"என்று சிங்கத்தை கேட்டது.

       "எல்லா மிருகங்களும் முன்பே வந்து சாப்பிட்டு விட்டன. உனக்கு எதிரிலுள்ள தோட்டத்தில் நிறைய உணவு இருக்கிறது. போய் சாப்பிடு"என்றது, சிங்கம்.

       'அப்படியா?' என்ற மங்கூ தோட்டத்தை நோக்கி சென்றது. சிறிது தூரம் சென்றதும் அதன் கால் புள் மற்றும் சேறில் மாட்டிக்கொண்டது. காலை வெளியே இழுக்க முயன்ற போது தடால் என்று தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்தது.

    மங்கூவிற்கு எதுவும் புரியவில்லை. வெளியே வர முயற்சி செய்தபோது மண், தண்ணீரில் விழுந்து சேறாகி அதில் சிக்கிக் கொண்டது மங்கூ. எல்லா மிருகங்களும் அங்கு கூடிவிட்டன. மங்கூ பள்ளத்தில் விழுந்ததைப் பார்த்து தங்கள் திட்டம் பலித்ததை எண்ணி சந்தோஷப்பட்டன.

    மங்கு அழுது கொண்டே, "என்னைப் பள்ளத்திலிருந்து வெளியே எடுங்கள் மிகவும் பசிக்கிறது"  என்றது.

  சிம்பூ சிங்கம் "மங்கூ நீ எல்லா மிருகங்களையும் வருத்தமடையச் செய்தாய் . எல்லோருடைய உணவையும் பறித்து சாப்பிட்டதால் அவை பட்டினியாக இருக்க நேர்ந்தது. அதனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டோம். நீ பசியோடு இருக்க வேண்டியதுதான். நாங்கள் யாரும் உனக்கு உதவ மாட்டோம்"என்றது.

     இரண்டு நாட்கள் மங்கூ பசியோடும் தாகத்தோடும் இருந்த போது மற்ற மிருகங்களின் கஷ்டம் புரிந்தது.

    சிம்பூ சிங்கத்தின் முன்னால் காதை பிடித்துக் கொண்டு இவ்வாறு சத்தியம் செய்தது. "இனிய மற்றவர்கள் உணவை திருட மாட்டேன்" என்று. உடனே மங்குவை வெளியே எடுத்தன மற்ற மிருகங்கள். அதன் பிறகு மங்கூ உழைத்து சாப்பிட ஆரம்பித்தது. உழைப்பின் பலன் இனிமையானது என்பதை அது உணர்ந்தது.

*நீதி* : உழைத்து வாழ வேண்டும்; பிறரை உதைத்து வாழக்கூடாது.

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம்.

🎯 47 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் ஏவப்பட்டது ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது . இந்தியா வரலாறு படைக்க வாய்ப்பு.

🎯 உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி வழக்கில் என்று மீண்டும் முறையீடு அவசரமாக விசாரிக்க கோரி மனு.

🎯 கிராம மக்கள் விவசாயிகளின் இருப்பிடம் தேடி வந்தது மருத்துவ சேவை கால்நடைகளின் காவலன் '1962'. இதுவரை மூன்று 3.25 லட்சம் கால்நடைகளுக்கு மறுவாழ்வு.

🎯 இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விவரம் சரிபார்க்க குழு அமைப்பு என பள்ளி கல்வித்துறை தகவல்.

🎯 வரலாற்று சாதனையை நெருங்கும் சந்திரயான்-3 நிலவில் விக்ரம் லண்டனை தரையிறக்கி சோதனை நடத்த உதவிய நாமக்கல் மண் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்ச்சி.

🎯 நாளை மறுநாள் நிலவில் இறங்கும் நிலையில் லேண்டரின் உயரம் குறைப்பு முயற்சி வெற்றி  இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.

🎯 100 நாள் வேலை திட்டப் பணிகளை டிரோன்கள் மூலம் கண்காணிப்பு என ஒன்றிய அரசு முடிவு.

🎯 மருத்துவ படிப்புக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

🎯 குரூப் 4 பணியில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு இன்று முதல் கலந்தாய்வு  டிஎன்பிசி அலுவலகத்தில் நடக்கிறது

🎯 மதுரையில் அதிமுக மாநாடு 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

🎯 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு முகாம் நிறைவு பெற்றது.


🎯 டி 20 இரண்டாவது போட்டியில் அசத்தல் தொடரை வென்றது இந்தியா.

🎯 ஃபிபா மகளிர் கால்பந்து ஸ்பெயின் உலக சாம்பியன்.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Tamilnadu governor should resign contest poll : udhayanidhi.

🎯 After second de- boost, chandrayaan 3 on glide path to moon.

🎯 DMK will win battle against neet  says Nehru.

🎯 DMK will not rest till Tamil Nadu government gets exemption from neet says CM.

🎯 Karnataka government calls all party meet on cauvery water issue.

🎯 Move to appointment new chief justice for Manipur High court suffers delay.

🎯 1400 tonnes of onions sent to markets, buffers stock raised to 5 lakh tonnes government.

🎯 Luna 25 , Russia's first lunar mission in 47 years crashes into the moon.

🎯 All round show helps men in blue seal series with comfortable win.

🎯 Blood clots fail to stop crouser lyles win 100m.

🎯 Carmana's strike gives Spain maiden World Cup title.





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...