Monday, August 28, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (29-08-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 29/08/2023      செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம் :  இன்னாசெய்யாமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்திய புவியியல் ஆய்வு எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

விடை: இந்திய சுரங்க அமைச்சரகம் மூலம் 1851 ஆம் ஆண்டு.

2. தாவரவியல் பெயரிடும் முறையும் சர்வதேச குறியீடு என்ன?

விடை : ICBN

3. விலங்கியல் பெயரிடும் முறையின் சர்வதேச குறியீடு என்ன?

விடை : ICZN

4. வகைப்பாட்டியலின் படிநிலை வகைகள் எத்தனை?

விடை : ஏழு

5. மனிதனின் அறிவியல் பெயர் என்ன?

விடை : ஹோமோ செப்பியன்ஸ்.


 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்

🌹HUNGER BREAKS STONE WALLS 
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும் 





இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

காலத்தின் அருமை அறிதல்

*************************

வியாபாரி ஒருவர். எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் சரியாக திட்டமிட்டு செயல்படாததால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. கவலையில் ஆழ்ந்திருந்த அவர், வீட்டுக்குப் போக விரும்பாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த, தொலைதூர ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கே ஆற்றின் மணலில் மெல்லிய நிலவொளியில் அமர்ந்து தன் நினைவுகளை ஓட விட்டான். தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட துயரம் அவனை வாட்டியது. கூட்டாளிகள் தன்னைக் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணி வேதனையில் மூழ்கினார்.

மறுபுறம், எப்படி வியாபாரம் செய்யப் போகிறோம்… குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் என எதிர்காலக் கவலைகள் எழுந்தன. இந்தச் சிந்தனையினாலேயே அவனுடைய வலது கை அவனை அறியாமல் ஆற்றின் மணலை துழாவி அவன் கையில் தட்டுப்பட்ட சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.

விடியல் தொடங்கியது! வெளிச்சம் பரவியது. ஆற்றில் எறிய கற்கள் தீர்ந்தன. கடைசியாக கையிலிருந்த கல்லைப் பார்த்து வியந்தான். காரணம் – அது சாதாரண கூழாங்கல் அல்ல. வைரம்


கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்துச் சென்ற விலைமதிப்பற்ற வைரங்களைத் தவறவிட்டு ஓடியுள்ளனர். அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.

சிந்தனை தூண்டும் சிறு கதைகள் உங்களுக்கு கற்பிக்கும் பாடம்: ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நம்மை சிறப்பாக வரவேற்கும்

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை. செப்டம்பர் 7ஆம் தேதி நேரில் ஆய்வு.

🎯 சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர்-2ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா- எல்1. மக்கள் நேரில் பார்க்க ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ ஏற்பாடு. 

🎯நிலவில்நாலு மீட்டர் பள்ளம் பாதையை மாற்றியது ரோவர்.

🎯 நிலவின் தென் துருவ பகுதியில் செப்டம்பர்-3 வரை லேண்டெர், ரோவர் ஆய்வு நடத்தும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

🎯 வேகம் எடுத்த பொருளாதார வளர்ச்சி; தேசிய அளவை விட குறைவான விலைவாசி. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சம் ஆக உயர்வு என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

🎯 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎯 வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றம் வெளி மாநில பக்தர்கள் குவிந்தனர். 7-ந்தேதி தேர் பவனி.

🎯 உலகம் முழுவதும் புகழ் பெற்ற தஞ்சை நெட்டி கலைப் பொருட்கள் தமிழர்களின் 1000 ஆண்டு பெருமைக்கு சான்று.

🎯 நெல் ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ 7 உயர்வு என முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவு.

🎯 நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலங்களும் சென்னையில் விடுமுறை அறிவிப்பு. ஆளுநர் முதல்வர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

🎯 மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை 8000 ஆக உயர்த்தி அரசாணை. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறும்.

🎯 இன்ஜினியரிங் துணை கலந்தாய்வுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

🎯 திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்டோபர் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு.

🎯 அரியலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு.

🎯 'யுபிஎஸ்' போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தமிழகம் வருவது நல்லாட்சிக்கான அடையாளம் முதலீடுகளை இருப்பதில் முன்னணி மாநிலமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

🎯 கோயில் அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

🎯 திருச்சி மதுரை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா செந்தாமரைக்கண்ணன் செய்தி வெளியீடு.

🎯 மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பதால் நீட் ,ஜேஇஇ மையங்களில் தேர்வு நடத்த தடை. ராஜஸ்தான் கோட்டா, மாவட்ட நிர்வாகம் உத்தரவு. கோட்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை 23ஆனது.

🎯 ரோஸ் கர் மேளா திட்டத்தின் கீழ் 51000 பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார்.

🎯 ஜி 20 மாநாட்டிற்கு வர முடியவில்லை பிரதமர் மோடியிடம் பேசினார் அதிபர் புடின். வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைப்பதாக வாக்குறுதி.

🎯 உலக தடகள சாம்பியன்ஷிப். ஈட்டி எறிதலில் தங்கம். நீரஜ் வரலாறு சாதனை.

🎯 உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தின் வாயிலாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த டிக்கெட் கலெக்டர் ராஜேஷ் ரமேஷ்.

🎯 முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி கர்நாடகாவை வீழ்த்தியது ஐஓசி.

TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 ISRO to launch Aditya- L1 on September 2 to study the sun.

🎯 Article 35A denied rights to many : CJI.

🎯 Chief ministers opens UPS tech centre in Chennai.

🎯 Water level in mettur dam stands at 52.52 feet.

🎯 'State is witnessing geographically equitable growth'finance minister thangam thennarasu addressing the media in Chennai on Monday.

🎯'Let Karnataka release 5,000 cusecs to Tamil Nadu. The cauvery water management authority will decide on the recommendation of the cauvery water regulation committee on Tuesday.

🎯514 researches to get ICSSR funding to study impact of Centrally sponsored schemes.

🎯 At Rozger Mela, Modi stresses need for yoga, physical fitness. Prime Minister hands out 51 appointments letter to recruits who will be joining the paramilitary forces, Narcotics control Bureau. And Delhi police.

🎯 Moon mission gained from crash analysis: LPSC chief.

🎯 Kota district administration stops coaching centre from conducting practice test.

🎯 Pragyan rover encounters crater during moonwalk.

🎯 Gladiators then, conquer now: not next for Neeraj?
Having won everything possible in his sport. The golden boy of javelin now looks for ways to sustain himself. Aas he eyes the fabled 90m mark.

🎯 Everyone knows Neeraj Chopra then again no one really dose!

🎯swiatek demolishes Peterson begins here title defence in style.

🎯Vlahovic's strike earns Juventus a draw .

🎯 IOC downs a spirited hockey Karnataka.







🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...