பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 22.08.2023. செவ்வாய்க்கிழமை .🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருக்குறள்: அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். .
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.'வருதல்' என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் ______?
*விடை* : வா
2."கலகல" வென – இலக்கணக் குறிப்பு தருக?
*விடை* : இரட்டைக்கிளவி
3.கிணற்றுத் தவளைப் போல – இவ்வுவமையின் பொருள் யாது?
*விடை* : அறியாமை
4.எந்த செல் 300 முதல் 500 நாட்களில் செல்களை புதுபிக்கின்றன?
*விடை* : கல்லீரல் செல்கள்
5.தொலைபேசிக் கம்பிகள் தயாரிக்க உதவுவது எது?
*விடை* : சிலிகோ வெண்கலம்
பழமொழிகள் (proverbs) :🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 Man proposes God disposes
🌹 நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று முடிக்கும்
🌷 Many hands make light work
🌷 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁
*மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரு நண்பர்கள்…
பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்.
அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.
விரல்களால் இப்படி எழுதினான்:
“இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!”
மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.
வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்.
நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள்.
கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. ஆஹா.. புதைகுழியில் சிக்கிக் கொண்டான் அவன்.
நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன்.
உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீதமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான்.
“இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்”
இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்..
“நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏனிப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா?”
நண்பனின் பதில்…
“ *யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!”*
.
இன்றைய முக்கிய செய்திகள் :🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் கவுன்சிலிங் நேர்மையாக நடந்தது அரசுக்கு ஆசிரியர்கள் பாராட்டு.
🎯 பருவ இறுதி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.
🎯 மதம் மாறியவர்கள் அயல்நாடு சென்று உயர்கல்வி பயில பயிற்சி என தாட்கோ மேலாண்மை இயக்குனர் தகவல்.
🎯 சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து நாக் குழு வழங்கியது.
🎯 காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
🎯 கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ 4276 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம். முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
🎯 பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை விண்ணப்பங்கள் ஆய்வுப் பணி நாளை தொடக்கம்.
🎯 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்த இணைய வழி விளையாட்டு ஆணையம் உருவாக்கம் தமிழ்நாடு அரசு தழில் வெளியீடு.
🎯 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தொழிலதிபர்களுக்கு அழைப்பு என தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் தகவல்.
🎯 சர்வதேச அளவில் இந்தியாவில் 20 கோடி பேர் பட்டினியால் பரிதவிப்பு.
🎯 ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய் மொழியில் கல்வி கற்பிக்காதது பெரும் அநீதி என பிரதமர் மோடி பேச்சு.
🎯 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
🎯 ஆசியக் கோப்பை ஒரு நாள் தொடர் இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயா, திலக் வர்மாவுக்கு வாய்ப்பு.
🎯 சின் சினாட்டி ஓபன் டென்னிஸ் மூன்றாவது முறையாக ஜோகோவிச் சாம்பியன்.
TODAY'S ENGLISH NEWS:🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🎯 No governors assent Manipur assembly session a non starter.
🎯 Ahead of big day chandrayaan 3 reveals the dark side of the moon.
🎯 Part time teachers forum stages protest in Madurai.
🎯 National research centre for banana to launch new varieties.
🎯 Governor returns file on appointments to TNPSC to government.
🎯 Universities under no obligation to follow common syllabus : governor RN Ravi adviced.
🎯NAAC awards top grade for Madras University.
🎯 Increasing number of medical seats imperative to addressing neet row.
🎯 IIT admissions government enquiry into compliants.
🎯 More jobs available people moving to higher income groups says Modi.
🎯 Pilots appointment to CWC is a show of unity.
🎯 ICSSR to develop Indian research methodology tools.
🎯 India must maintain close watch on new variants of covind -19.
🎯 India , Asian agree to review goods trade pact by 2025 to fix asymmetry .
🎯 Tamilnadu Government gears up to allot land for schwing stetter's expansion.
🎯 Praggnanandha Makes history meets carlsen in the final.
🎯 Tilak gets the nod; fit again Shreyas and Rahul back
🎯 India has got a really solid 1-2-3 combination, similar to Australia's hayden.
🎯 Let goals help Barca overcome cadiz.
இனிய காலை வணக்கம் ....✍ இரா . மணிகண்டன் முதுகலை தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment