பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 16.08.2023. புதன்கிழமை .🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருக்குறள்: அதிகாரம்: கல்வி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்த சுரப்பியின் பெயர் என்ன?
விடை : அட்ரீனல் சுரப்பி
2. மனித உடலில் தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி எது?
விடை : பிட்யூட்டரி சுரப்பி
3. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன்கள் எவை?
விடை : மெலட்டோனின்
4. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?
விடை : தைராய்டு ஹார்மோன்
5. எந்த திரவத்தில் மூளை மிதந்த நிலையில் உள்ளது?
விடை: தண்டுவடத் திரவம்
பழமொழிகள் (proverbs) :🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 A good beginning Makes good ending
🌹 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
🌷 A bad day never hath a good night
🌷 முதலில் கோணல் முற்றிலும் கோணல்
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஊக்கமும் உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது
ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.
குரங்கிடம் அப்பத்தை கொடுத்து அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நிறுத்தது.
அப்போது ஒரு அப்பத் துண்டு பெரிதாக இருந்ததினால் அந்த அப்பத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது கடித்து விட்டு மீண்டும் போட்டது.
இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.
அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.
ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.
பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.
நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் மு க ஸ்டாலின். மருத்துவர்கள் சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு.
🎯 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். காலை உணவு திட்டம் விரிவாக்கம். தியாகிகள் ஓய்வூதியம் 11,000 ஆக உயர்வு. உணவு டெலிவரி ஊழியருக்கு நலவாரியம் என சுதந்திர தின விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.
🎯 அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும் என டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு.
🎯கல்வி உதவிக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு: இயக்குநர் அறிவுறுத்தல்
🎯 திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய பணிகள் மும்முரம் விமானங்களின் சேவை அதிகரிக்கும் என இயக்குனர் தகவல்.
🎯 மருத்துவ மேற்படிப்பில் ஊக்க மதிப்பெண் அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது என ஐகோர்ட் உத்தரவு.
🎯 மாநிலத்தில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு முதல்வரிடம் விருது பெற்றார் பெயர் அன்பழகன்.
🎯 தமிழ்நாட்டுக்கு 10 டிஎம்சி காவிரி நீர் திறக்கப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் அறிவிப்பு.
🎯நாட்டில் முதல்முறையாக இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை - கோவா அரசு மருத்துவமனையில் தொடக்கம்
🎯 அமெரிக்க அதிபர் தேர்தல் மோசடி 19 பேர் மீது வழக்கு ஆகஸ்ட் 25க்குள் சரண் அடைய நீதிபதி உத்தரவு.
🎯 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து பைனலில் ஸ்பெயின்.
🎯“இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஆழம் தேவை” - ஒப்புக் கொண்ட ராகுல் திராவிட்
🎯மறக்குமா நெஞ்சம் | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
will return with a report card in 2024, Modi says at Red fort.
🎯 Pm announces new housing scheme for urban poor; low interest rate loan on offer.
🎯 CM presence 'thagaisal thamizhar' award to Dravidar kazhagam chief veeramani.
🎯 On I - Day Stalin seeks transfer of education back to state list.
🎯 Won't interfere with grant of incentive marks for PG medical courses admission.
🎯 Deputy chief minister D.K. Sivakumar on Tuesday said that Karnataka would release 10 tmcft of cauvery river water to Tamilnadu.
🎯'9,423 supreme court verdicts translated into regional languages'.
🎯 Supreme court plans expansion of infra; e - courts to offer National link.
🎯 Trump indicted for colluding to over return 2020 poll results.
🎯 Arjun over powers pragg; carlsen outwits gukesh.
🎯 Carmona's late strike seals spain's maiden final birth.
🎯 Stocks set to come out of retirement to play world cup.
இனிய காலை வணக்கம் ....✍ இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 6221305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment