Thursday, August 17, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (18-08-2023 )

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 18.08.2023.    வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?

*விடை* : கோமல் சுவாமிநாதன்

2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?

*விடை* : ஒட்டக்கூத்தர்

3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?

*விடை* : அசலாம்பிகையார்

4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?

*விடை* : தாயுமாணவர்

5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?

*விடை* : அயோத்தி தாசர்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 All covt, all loss
🌹பேராசை பெரு நஷ்டம்

🌷 Art is long and life is short
🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
*முட்டாள் குரங்கும் பறவையும்* 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

முன்பொரு காலத்தில் காட்டில் குரங்கு கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குரங்குகளுக்கு, பாலைவனத்திற்கு செல்ல வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால், இந்த குரங்குகளுக்கு பாலைவனம் எங்கு இருக்கும், எப்படி இருக்கும் என்று தெரியாது. ஒரு நாள் இந்த குரங்குகள் அனைத்தும் கூட்டமாக பாலைவனம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
நாள் முழுவதும் நடந்து மதியம் வேளையில் அந்த குரங்குகள் ஒரு வறண்ட நதியின் அருகே வந்து சேர்ந்தார்கள். அந்த நதி மூன்று மைல்கள் தூரம் வரை வறண்டு இருந்தது. அந்த வறண்ட நதியை பார்த்த குரங்கு கூட்டம், இதுதான் பாலைவனம் என்று எண்ணியது. இந்தப் பாலைவனம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கு அந்த குரங்குகள் மதியம் வேளையில் அங்கும் இங்கும் நடையாய் நடந்தன.
கோடை காலமாக இருந்ததால் அந்த குரங்குகளுக்கு மிகவும் களைப்பாக ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு பெரிய மரம் இருப்பதைக் கண்ட குரங்குகள் அந்த மரத்தின் மீது ஏறி எங்கேயாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று சுற்றி பார்த்தன. சிறிது தூரத்தில் அவர்களுக்கு தண்ணீர் தென்பட்டது.
குரங்குகள் சந்தோஷமாக இறங்கி தண்ணீர் குடிக்க சென்றபோது, அருகில் சென்றவுடன் அந்த தண்ணீர் மறைந்து விட்டது. ஏமாற்றமடைந்த குரங்குகள் மீண்டும் அந்த மரத்திற்கு திரும்பி வந்தன. அப்போது அந்த மரத்தில் குருவி ஒன்று இந்த குரங்குகள் தண்ணீருக்கு படும் பாடை கண்டு, தன் கூட்டில் இருந்து வெளியே வந்து குரங்குகளிடம் சொன்னது “நண்பர்களே உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா? என்னை பின்தொடர்ந்து வாருங்கள் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்றது.

அந்த குரங்குகளும் இந்த பறவையை பின்தொடர்ந்து சென்றன. சிறிது தூரம் சென்ற பிறகு அந்த பறவை ஒரு குளத்தை, குரங்குகளுக்கு காட்டியது. அந்த குரங்குகளும், குளத்தில் இறங்கி நிறைய தண்ணீர் குடித்தன.
அந்த பறவை குரங்குகளிடம், “நண்பர்களே உங்களுடைய தாகம் தணிந்ததா?” என்று கேட்டது. அதற்கு ஒரு குரங்கு சொன்னது, “இவ்வளவு நேரம் நாங்கள் தண்ணீருக்காக படும் பாடைக்கண்டும், நீ காணாமல் இருந்து கொண்டு இப்போதுதான் எங்களுக்கு உதவி செய்கிறாயா?” என்று சொல்லி அந்த பறவையைப் பிடித்து அதன் கழுத்தை நசுக்கி கொன்றது. குரங்குகள் படும் பாடைக்கண்டு அவர்களுக்கு உதவி செய்ய சென்ற அந்த பறவை அப்படியே துடிதுடிக்க இறந்துவிட்டது.

 *நீதி* : கெட்டவர்களுக்கு உதவி செய்வதால் எந்த பயனும் இல்லை.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

🎯 மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் சிறார் இதழ்கள்; பொறுப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

🎯 ஐந்து இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச சுற்றுச்சூழல் விருது.

🎯 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் செப்டம்பர் 18 முதல் விண்ணப்பிக்கலாம்.

🎯 வாக்காளர் பட்டியல் வீடு வீடாக சரிபார்ப்பு ஆகஸ்ட் 21 இல் நிறைவு.

🎯 பெண்கள் உதவி மையத்தில் பணி செப்டம்பர் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்.

🎯தமிழகத்தில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் திட்டம் இல்லை - உயர் நீதிமன்றம் அதிருப்தி

🎯கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன: அரசு தகவல்

🎯கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பதிவு செய்யாதவர்களுக்காக இனறு முதல் வரும் 20ம் தேதி வரை சிறப்பு முகாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

🎯சந்திரயான்-3 | விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்

🎯பிரதமர் யார் என்பதை தேர்தல் நேரத்தில், இந்தியா கூட்டணி அறிவிக்கும்.

🎯வெளிநாட்டு பல்கலைகள், கல்லுாரிகளில் படித்தவர்களுக்கு அதற்கு இணையான பட்டம் வழங்குவது, அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக புதிய வரைவு வழிகாட்டு வழிமுறைகளை, யு.ஜி.சி., உருவாக்கியுள்ளது.

🎯கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் நாளை திறப்பு...

🎯 இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
🎯 11 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் பும்ரா; வீடியோ வெளியிட்ட பிசிசிஐ.

🎯தேசிய ஹாக்கி போட்டியில் கோலோச்சும் கோவில்பட்டி வீரர்கள்

🎯அயர்லாந்து-இந்தியா இடையே இன்று முதல் டி20

🎯அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Chandrayan propulsion lander modules separate

🎯 No more bulk SIM cards as  government steps into curb fraud.

🎯 Civic body to extend QR code based platform to all zones.

🎯 Review train ticket concession for senior citizens.

🎯 219 core people to be given deworming tablets in Tamilnadu.

🎯 Tamilnadu's solar power generation hits a new record.

🎯 Stalin honours 'vathal thatha' Rajendran for donating generously to spruce up corporation school.

🎯 High court seeks report from state on University for siddha medicine.

🎯 BJP announces first candidates list for Chhattisgarh MP assembly polls.

🎯 Flood forecast app launched by water commission.

🎯 China assures support for Sri Lanka's debt relief ahead of crucial IMF review.

🎯 Praggnandhaa stops Arjun in a memorable clash, makes semi finals.

🎯 Bumrah's men all set for the Ireland challenge.

🎯 Fruitful Day for India at the archery World Cup stage - 4.

🎯 Priya claims gold for India

🎯 TNCA XI  canters to an easy 10 wicket win over Kerala.





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...