பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01/09/2023 வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: நடுவுநிலைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி .
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
முன்னே தான் சமமாக இருந்து பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இந்திய தாவரவியல் ஆய்வின் தலைமையகம் எங்கு உள்ளது?
விடை: கொல்கத்தா
2. ஆயுர்வேதத்தின் தந்தை யார்?
விடை : சாரகர்
3. இந்தியாவில் நிலக்கரி படிவுகள் அதிக அளவில் எந்த மாநிலங்களில் உள்ளது?
விடை: ஜார்க்கண்ட் , ஒரிசா
4. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மூலம் இந்திய விலங்கியல் ஆய்வு எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
விடை: 1916
5. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மூலம் இந்திய தாவரவியல் ஆய்வு எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
விடை: 1887.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 Bring out the child strictly
🌸 அடித்து குழந்தையை வளர்
🌸 Beat after beat will make even a stone move
🌸 அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு
தன் நிறுவனத்தில் சில தவறுகளால்
50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.
மிகவும் சோர்ந்து போய் அருகில்
இருந்த பூங்காவிற்கு சென்று
அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர்
போல தோற்றம் உடைய ஒருவர்
இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார்.
இவர் சோகமாக அமர்ந்திருப்பதை
கண்டு
"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று
கேட்டார்.
அதற்கு இவர் "எனது தொழில் நஷ்டம்
அடைந்து விட்டேன். மிகவும் மனது
உடைந்து போய்விட்டேன் " என்றார்.
"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றால்
அவர்.
"50 கோடி ரூபாய்" என்றார் இவர்.
"அப்படியா, நான் யார் தெரியுமா?"
என்று கேட்டு அந்த ஊரின் பிரபல
செல்வேந்தரின் பெயரை
சொன்னார்.
அசந்து போனார் இவர்...
"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ
சரியாகி விடுவாயா?" என்று
கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர்
"ஆமாம் எல்லாம் சரியாகி விடும்"
என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக்
புத்தகத்தை எடுத்து
கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி
"இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ
கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக
கொடுத்திருக்கிறேன்.
எல்லாவற்றையும் சமாளி. ஆனால்
ஒருவருடம் கழித்து இந்த பணத்தை
எனக்கு திருப்பிக் கொடுத்துவிட
வேண்டும். அடுத்த வருடம் இதே
நாளில் இங்கே நான்
காத்திருப்பேன்" என்று சொல்லி
விட்டு செக்கை இவர் கைகளில்
தினித்து விட்டு சென்றார் அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர்
வேகமாக அலுவலகத்திற்கு
சென்றார். தன் அறைக்குள் சென்று
அந்த செக்கை தனது பீரோவில்
வைத்து பத்திரமாக பூட்டினார்.
பின் தனது உதவியாரை அழைத்து
அனைத்து ஊழியர்களை நிர்வாக
கூட்டத்திற்கு அழைத்து வர
ஏற்பாடு செய்ய சொன்னார்.
ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில்
அமர்ந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் பேச
ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது
நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம்
ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது
என்னிடம் 500 கோடி ரூபாய்
உள்ளது, ஆனால் அந்த பணத்தை
தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி
ஏற்பட்டது? எதனால் ஏதற்காக
ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை
களைந்து நமது நிறுவனத்தை
வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள்
அனைவரும் ஒத்துழைப்பு
கொடுங்கள்" என்று கேட்டுக்
கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக
நடந்தன. தவறுகள் கண்டுப்
பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக
சரியாக அனைத்து
ஊழியர்களையும் ஓத்துழைக்க
வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச
செயல் சிந்தனை தூக்கம் அனைத்து
அவருடைய தொழிலை பற்றியே
இருந்தது.
மிக சரியா ஒரு வருடம் கழிந்தது.
கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா
550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி
இருந்தது இவருடைய நிறுவனம்.
அடுத்த நாள் விடிய காலை அந்த
செல்வேந்த கொடுத்த 500
கோடிக்கான செக்கை எடுத்துக்
கொண்டு அந்த பூங்காவிற்கு
விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த
அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை
நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன்
காணப்பட்டது. சற்று நேரம் கழித்து
தூரத்தில் அந்த செல்வேந்தரும்
அவருக்கு அருகில் அவரை
கைகளால் பிடித்துக் கொண்டு
ஒரு பெண்மணியும் வந்தது பனி
மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில
விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த
பெண்மணி மட்டும் வருகிறார் அந்த
செல்வேந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த பெண்மணியிடம்
"எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?"
என்றார்
அதற்கு அந்த பெண்மணி
பதட்டத்துடன் "உங்களுக்கு அவர்
ஏதாவது தொந்தரவு கொடுத்து
விட்டாரா?" என்றார்
இவர் "இல்லை அம்மா, ஏன்
கேட்கிறீர்கள்?" என்றார்.
அந்த பெண்மணி "இல்லை அய்யா
அவர் ஒரு பைத்தியம் அதாவது
மனநிலை சரி இல்லாதவர், செக்கு
தருகிறேன் என்று சொல்லி இங்கு
இருப்பவர்களிடம் தனது பழைய
செக்கை கிழித்து
கையேழுத்திட்டு கொடுத்து
விடுவார்" என்றார்.
ஒரு நிமிடம் அந்த நிறுவன
தலைவருக்கு பேசமுடியவில்லை.
அப்போ நம்மால் முடியும் என்று
நினைத்தால் நிச்சயம் முடியும்.
அதுவே நம்மை காப்பாற்றி
இருக்கிறது என்று நினைத்தார்.
நம்மால் எதையும் செய்ய முடியும்
என்று முதலில் நாம் நம்பவேண்டும்.
அப்போதுதான் நாம் நமது வாழ்வில்
முன்னேற முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் மும்பை வருகை. பிரதமர் வேட்பாளர் தேர்வில் குழப்பம். ராகுல், நிதிஷ், கேஜ்ரிவால், சரத் பவர், உத்தவ் தாக்கரே என பலரும் இப்படியில் உள்ள நிலையில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
🎯 பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞானந்தா.
🎯 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பல மொழிகளில் குரல் பதிவு. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
🎯 தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
🎯 விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 18 அரசு விடுமுறை என தலைமைச் செயலர் அறிவிப்பு.
🎯 பி.எட். பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
🎯 நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள். லேண்டரின் ஆய்வில் கண்டறியப்பட்டதாக இஸ்ரோ தகவல்.
🎯 புதுக்கோட்டையில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி எம்.பி, ஆட்சியர் பங்கேற்பு.
🎯 திருச்சி, திருநெல்வேலி, சேலத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க சாத்தியக்கூறு அறிக்கை. தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பிப்பு.
🎯 இன்று முதல் 4 நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
🎯 தமிழகம் முழுவதும் உள்ள சேதமடைந்த கட்டிடங்களை கண்டறிந்து உடனே அப்புறப்படுத்துங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.
🎯 டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் பரிந்துரை உரிய விளக்கங்களுடன் அனுப்பப்பட்டது.
🎯 செப்டம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள சந்திரயான் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரபல விஞ்ஞானிகள் உரை.
🎯 செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் என மத்திய அமைச்சர் அறிவிப்பு.
🎯 நகர்ப்புற ஏழை, நடுத்தர மக்கள் வீடு வாங்க மானியம். மத்திய அரசின் புதிய திட்டம்.
🎯 அமெரிக்க ஓபன் டென்னிஸ் .காஸ்பர் ரூடு, சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி. ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் முன்னேற்றம்.
🎯மார்ஷ் , டிம் டேவிட் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி.
🎯 டி 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து.
🎯 ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு. தமிழக வீரர் கார்த்தி செல்வம் நீக்கம்.
🎯 எம் சி சி- முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி நடப்பு சாம்பியன் ஐஓசி அணி வெளியேற்றம்.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Economic grows 7.8% fastest in 4 quarters.
🎯 Congress seeks JPC probe into Adani Row.
🎯 Two corridors identified for MRTS in Trichy; DFR submitted to government.
🎯 Collectors instructed to identify weak and damaged buildings.
🎯 Stalin to launch multilingual 'speaking for India' podcasts.
🎯 Public holiday for Vinayaka chaturthi shifted to September 18.
🎯 Stalin condoms Tamil daily's report denigrating governments breakfast scheme.
🎯 Telangana official study Tamil Nadu breakfast scheme.
🎯 Karnataka invites cauvery water management authority to visit all cauvery reservoirs.
🎯 Over 400 farmers turn up at protest site in Karnataka.
🎯 Chinese President Xi yet to confirm presence at G20 summit in Delhi.
🎯 E-buses will be allotted to cities based on population.
🎯 Special session of parliament from September 18 to 22; agenda under wraps.
🎯 India sees the lowest August rainfall in a century.: IMD.
🎯 After India, Philippines, Malaysia and Indonesia protest China's map.
🎯 Chandrayan probe finds sparse plasma on moon.
🎯 Jaya Verma becomes the first woman to head railway board.
🎯 Pathirana proves too hot before the batters take Lanka home..
🎯 Kishan to replace Rahul for Asia Cup preliminary stage.
🎯Zhang sends Ruud pcking, makes history; Wozniacki marches on.
🎯'Getting past Vishy sir's current rating is special'.
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன்
(முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி ,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண் : 9789334642.