Wednesday, October 19, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்(20-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 20.10.2022.    வியாழக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  வெகுளாமை 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவில் மிகப்பெரிய கொடி பறக்கும் அளவு என்ன? 

விடை : 48 " X 72" அடி

2. எவரெஸ்ட் மலை மீது இந்திய கொடி ஊன்றியது எப்போது? 

விடை : 1953 29 மே 

3. நமது தேசிய கொடி நீளம் 12 அடி என்றால் அதன் அகலம் என்ன? 

விடை : 8 அடி

4. எந்த நிறத்துடன் கலந்து காவி நிறம் பெறப்படுகிறது? 

விடை : மஞ்சள் மற்றும் சிவப்பு

5.யோகா தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? 

விடை : ஜூன் 21


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


🌷Look before you leap.
🌷ஆழம் பார்க்காமல் காலை விடாதே.

🌹Even elephants do slip.
🌹யானைக்கும் அடி சறுக்கும்.

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

அறிவுடைய அறிஞர் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்.


அப்போது, அவர் அறியாமல் அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். அங்கு இருக்கும் ஒரு அரக்கன் கோபமடைந்து, அவரைப் பார்த்து யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா? என்றான்.


தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்! என்றார். இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை! என்று அந்த அரக்கன் கூறிவிட்டு, அடுத்த கணம், அந்தக் அறிஞரை குரங்காக மாற்றிவிட்டான்.


அவர் மிகவும் வருத்தத்துடன் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் சாப்பிட்டார். பிறகு அவர் ஒரு நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பக்கத்து பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.


குரங்கை வெளியே அனுப்புங்கள் இல்லை கொன்றுவிடுங்கள்! என்று கத்தினார்கள். ஆனால், கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டு, வேண்டாம் அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.


அந்தக் குரங்கு கப்பலின் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. அவர்கள் செல்லும் நகருக்குள் ஒரு செய்தி பரவி இருந்தது. அங்கு அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.


அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்! என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது. அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார்.


குரங்கும் நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.


எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்? என்றனர். அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வியான, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்காக இருக்காது. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள்.


அரக்கர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை இளவரசி படித்துள்ளார். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்து அறிஞரை பழைய நிலைக்கு கொண்டுவந்தார். பிறகு அவர் இளவரசிக்கு நன்றியுடன் இருந்தார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்.


நீதி :

அறிவுடையோர் எந்த உருவத்தில் இருந்தாலும் மதிக்கப்படுவார்கள்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பள்ளிகளுக்கு ரூ.1,050 கோடியில் 7,200 புதிய வகுப்பறைகள்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

🎯78 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியீடு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல் 

🎯பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோரி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் நவ.3ல் தர்ணா

🎯பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து பிரதமர் ஆய்வு

🎯கல்வியை 5ஜி மேம்படுத்தும்: பிரதமர் மோடி பெருமிதம்

🎯 மருத்துவ கலந்தாய்வு சிறப்பு பிரிவில் 65 இடங்கள் ஒதுக்கீடு

🎯 ரூபாய் 500 கோடியில் புதிய ஆயிரம் பேருந்துகள் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎯 காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 7897 வாக்குகளுடன் வெற்றி. தரூருக்கு 1072 வாக்குகள்

🎯14 ஆண்டு கனவு நனவானது பாகிஸ்தான் எல்லையில் புதிய விமானப்படை தளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

🎯தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை: டெல்லி அரசு எச்சரிக்கை

🎯மரபணு மாற்றப்பட்ட புதிய வகை நெல் விதை வருகிறது; ஒரு முறை நடவு செய்தால் போதும்... நிரந்தர மகசூல்: சீன விஞ்ஞானிகளின் புது கண்டுபிடிப்பால் அரிசி உற்பத்தியில் புரட்சி

🎯சையத் முஷ்தாக் அலி கோப்பை டி20 தொடரில் பம்பரமாக சுழன்று ரன் குவித்து வரும் புஜாரா

🎯 மேற்கிந்திய தீவுகளுக்கு முதல் வெற்றி 'சூப்பர் 12' நம்பிக்கையை தக்க வைத்தது

🎯 உலக துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் ரமீதா

🎯 யு -23 மல்யுத்தம் பன்வாலா சாதனை

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Stalin writes to PM, seeks emergency support for garment sector in State

🎯CM Stalin announces funds to improve infra in govt. schools, buy new buses 

🎯Indian Embassy in Kyiv asks nationals to leave Ukraine at the earliest

🎯Profit-minded educational institutions cannot claim Income Tax exemption: SC

🎯Challenges aplenty for Congress president-elect Mallikarjun Kharge

🎯Stalin congratulates Mallikarjun Kharge

🎯People who buy and burst firecrackers in Delhi during Deepavali will be fined ₹200 and could face imprisonment up to six months.

🎯India beat Kuwait 2-1 win but could not qualify for next year's AFC U-20 Asian Cup

🎯Stephen Curry, Warriors celebrate championship, beat Lakers



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...