Monday, October 10, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (11-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 11.10.2022.    செவ்வாய்க் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  வான் சிறப்பு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.இந்தியாவில் தேசிய வருமானத்தை கணக்கீடு செய்யும் அமைப்பு எது?

*விடை* : மத்திய புள்ளியல் அமைப்பு

2.இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆனணயம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

*விடை* : 12 அக்டோபர் 1993

3.இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம்

*விடை* : சிக்கிம்

4.இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான எண்ணிக்கையில் பருத்தி நெசவுத் தொழிற்சாலைகள் உள்ளன?

*விடை* : தமிழ்நாடு

5. வெள்ளி புரட்சி என்றால் என்ன?

*விடை* : முட்டை உற்பத்தி


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
🌷Face is the index of mind.

🌹அடிக்கிற கைதான் அணைக்கும்
🌹The hand that beats alone will embrace


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

நரியும் அதன் நிழலும் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு நரி🦊 அதிகாலையில் எழுந்து மேற்கு திசை நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே இருந்து வந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் தெரிந்தது. நரிக்கே குதூகலமாயிற்று. "நான் ஆள் போல  அதுவும் இந்த காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கத்தை விடவும் பெரியவனாக இருக்கிறேன் போல"என நினைத்துக் கொண்டே வேட்டைக்கு சென்றது. செல்லும் வழியில் நரி🦊 ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ அது சற்று முன்னர்தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. நரியும் தான் மிகப்பெரியவன் என நினைத்துக் கொண்டு சிங்கம்🦁 வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. நரிக்கோ மிகவும் சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் 🦁 தன்னை கண்டு பயந்து சென்றது என நினைத்துக் கொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்கு சென்றது.


மாலை தன் குகைக்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் அழைப்பிற்கு வருகை தந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும்"இனிமேல் நான் தான் இந்த காட்டிற்கு ராஜா"என்று கூறியது. யானையோ இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்ததை கூறி 'சிங்கமே என்னை பார்த்து பயந்தது' என்றது. கூட்டத்தில் இருந்த மானோ "சிங்கத்தை உன் முன்னால் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜாவாக்குவோம்" என்றது. அடுத்த நாள்நரி 🦊 அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது. சிங்கம் வந்தவுடன் சிங்கத்தைப் பார்த்து "என் முன்னாள் மண்டியிடு"என்று நரி கூறியது. சிங்கமோ மிகவும் கோபம் கொண்டு ஏளனமாக பேசிய நரியைப் பார்த்து உன்னை மன்னித்து விடுகிறேன். உடனே இங்கிருந்து செல் என்றது. கண்டு பயந்து விட்டது என நினைத்து "முடியாது" என்று பதில் கூறிக் கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது.


அது மதிய நேரம் அல்லவா? நிழல் உண்மையான அளவில் இருந்தது. இப்போதுதான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தன்னுடைய நிழல் பெரிதாக இருந்தது என்று. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கம்🦁 ஒரே அடியினால் நரியை கொன்றது. பாவம் அந்த முட்டாள் நரி🦊.


நீதி: முட்டாள் தனமாக இருந்தால் உன் உயிரை கூட இழக்க நேரிடும்.


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

🎯 அக்டோபர் 14 - இல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

🎯 இன்று அமெரிக்கா செல்கிறார் நிர்மலா சீத்தா ராமன்

🎯தள்ளி போகிறதா புதிய பார்லிமென்ட் திறப்பு : 2023 ஜனவரி இறுதியில் கூட்டத்தொடர் நடத்த ஏற்பாடு

🎯தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: காலை 6மணிமுதல்7 மணி வரை, மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி

🎯 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மூவர்ண நிறத்தில் வரவேற்பு அளித்த ஆஸ்திரேலியா.

🎯சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த 4வது பட்டியலை இந்தியாவுக்கு வழங்கியது அந்நாட்டு அரசு

🎯தாய்லாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

🎯ஆஸ்திரேலியாவுடன் முதல் டி20 8 ரன் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து: ஹேல்ஸ் அமர்க்களம்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Villupaattu exponent Subbu Arumugam no more

🎯Veteran researchers urge UGC to rethink decision on norms for PhD

🎯PM Modi says he is walking in footsteps of Sardar Patel, targets Nehru over Kashmir

🎯What is the current global economic situation? | In Focus podcast

🎯Pakistan to join closing ceremony of SCO anti-terror exercise hosted by India

🎯Economic Sciences Nobel for trio’s research on banks and financial crises

🎯Putin vows more ‘severe’ attacks after Russian missiles batter Ukraine

🎯FIFA women’s U-17 World Cup | India opens campaign against USA

🎯Women's Asia Cup | After bundling out Thailand for 37, India finish at top of the table with 9-wicket win

🎯Sumit Kundu proves too good for Ankit Khatana in National Games boxing





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

1 comment:

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...