Thursday, October 13, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (14-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 14.10.2022.    வெள்ளிக் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  இல்வாழ்க்கை 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.


பொருள்:

🍀🍀🍀🍀🍀

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?

விடை: ஆங்கிலம்

2. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு?

விடை: குதிரை

3. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?

விடை: இந்திராகாந்தி

4. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?

விடை: குடியரசுத் தலைவர்

5. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?

விடை: 1927


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹There is no medicine for fear
🌹அச்சத்திற்கு மருந்தில்லை.

🌷No man can be a good ruler unless he has first been ruled
🌷அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது.


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
மனஉளைச்சலே_உடல்நலத்திற்குத்தீங்கு* ..!!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

.உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து

ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.*

ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.

ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

_அதைப் போல் உறுதியான *சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி*....அதே *மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.

மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து* முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...

*#மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம்,* *#மனஉளைச்சல்  தான்!

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழகத்தில் படிப்பறிவு பெற்றவர்கள் 85.4 சதவீதமாக அதிகரிப்பு - பெண்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு

🎯10ம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று பள்ளிகளில் பெறலாம்

🎯டெட் தேர்வு இன்று துவக்கம்

🎯இந்தியாவில் முதல்முறை | தமிழகத்தில் அமைகிறது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

🎯பல்பொருள் அங்காடிகளாக மாறும் ரேஷன் கடைகள் ரூ.10 மதிப்பில் மளிகைப் பொருட்கள் விற்க நடவடிக்கை

🎯 பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகள் காவல்துறை விதிப்பு

🎯மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க முடியுமா? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

🎯 அனைத்திந்திய சட்ட அமைச்சர்கள் மாநாடு என்று தொடக்கம்

🎯ஐ.நா. அரங்கில் காஷ்மீர் பிரச்சினை: அற்பமாக நடப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

🎯அமெரிக்காவில் பல்வேறு நாட்டு அமைச்சர்களுடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

🎯மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வி: ஆறுதல் தந்த அஸ்வின், ராகுல்

🎯மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை

🎯17 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Children in government schools learn to critically appreciate films at monthly screening

🎯Hijab ban to continue in Karnataka schools and PU colleges: Minister

🎯ISRO’s Next-Gen Launch Vehicle may assume PSLV’s role

🎯European Union sees highest number of irregular crossings since 2016: border agency

🎯T20 World Cup 2022 | Shaheen Shah Afridi is 90% ready: PCB chief Ramiz Raja

🎯Women's IPL set to take place in March 2023 with 5 teams, maximum 5 overseas players in playing XI




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...