Monday, October 17, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (18-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 18.10.2022.    செவ்வாய் க்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல் 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு

விடை:  1913

2. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்

விடை:  பெரியார் ஈ.வெ.ரா.

3. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?

விடை:  பசுபதி

4. பார்வை நரம்பு உள்ள இடம்

விடை:  விழிலென்ஸ்

5. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது

விடை:  கார்பன்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹Zeal without knowledge is fire without light
🌹அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.

🍁A little learning is a dangerous thing
🍁அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

இரண்டு முட்டாள் ஆடுகள்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்தன. ஒரு ஆடு பாலத்தில் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.

அந்த பாலத்தை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன. முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன் எனக்கு நீ தான் வழி விட வேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமானம் இன்றி ஆற்றில் விழத் தொடங்கின. ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.


நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுக் கொடுக்க வேண்டும்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மருத்துவ கவுன்சிலிங்: தரவரிசைப் பட்டியலை வெளியீடு: மதுரை மாணவர் முதலிடம்

🎯மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல்: 7.5 % இட ஒதுக்கீட்டில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடம்

🎯மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 558 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு

🎯அனைவருக்கும் வீட்டு வசதி திட்ட செயல்பாடு: விருதுகளைக் குவித்த தமிழகம்

🎯கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு: நவ.7-ல் இறுதி விசாரணை

🎯தீபாவளி | தமிழகம் முழுவதும் அரசு மருத்துமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவு - தயார் நிலையில் வைக்க உத்தரவு

🎯டிரைவிங் லைெசன்ஸ் நடைமுறையில் மாற்றம்

🎯தீபாவளிக்கு மறுநாள், 25ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

🎯தீபாவளி பண்டிகையையொட்டி விராலிமலையில் களை கட்டிய சந்தை ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

🎯கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

🎯திருச்சி அருகே பசுபதீஸ்வரர் கோயிலில் சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

🎯 இந்தியா வருகிறார் ஐ.நா. பொதுச்செயலர்

🎯உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக D.Y.சந்திரசூட் நியமனம்: குடியரசுத்தலைவர் ஒப்புதல்

🎯T20 WC வார்ம்-அப் | 2 2 W W W W - கடைசி ஓவரில் சம்பவம்‌ செய்த ஷமி; ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

🎯 கடைசி ஓவர்களில் அசத்திய ஷமி , ஹர்ஷல் படேல் . முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

🎯 இன்று 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Justice D.Y. Chandrachud appointed the 50th Chief Justice of India

🎯Textbooks for medicine, nursing, and pharmacy planned for all major Indian languages within three years

🎯Transfer of ‘education’ to concurrent list during the Emergency has upset India’s federal structure, T.N. govt tells HC

🎯Governor questions progress of harijans in education in T.N., but cites inaccurate data

🎯India to host G20 investors conference on tourism next year

🎯Russia prepares to toughen anti-gay law in conservative push

🎯Twenty20 World Cup warm-up | Shami sizzles in four-wicket over as India edge out Australia in warm-up

🎯Mamata bats for Sourav Ganguly, asks PM Modi to allow him contest ICC polls

🎯Jyothi Yarraji runs under 13 seconds in hurdles – first Indian to do so



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...