Wednesday, October 26, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் -(27-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27.10.2022.    வியாழக்கிழமை   .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   பெருமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலை செய்வதற்கு உரிய வழிகளில் செய்து முடிக்க  வல்லவர் ஆவர்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.வேளாண் வேதம்‘ எனப் போற்றப்படும் நீதி நூல் எது?
விடை : நாலடியார்
2.தமிழ்நாட்டில் காந்தி மியூசியம் எங்குள்ளது ?
விடை :மதுரை
3.ஆண்டு ஒன்றுக்கு எத்தனை வாரங்கள்?
விடை: 52 வாரங்கள்
4.உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்த
இந்திய மன்னர் -----?
விடை : அக்பர்
5.இந்தியாவின் கடைசி ஆங்கிலேய
கவர்னர் ஜெனரல் -----?
விடை : மவுண்ட்பேட்டன் பிரபு


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


🌷Authority shows the man
🌷அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.

🌹Measure is treasure
🌹அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை.

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

நீர் இறைத்த திருடர்கள்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், “அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்” என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

“அதற்கு என்ன செய்யலாம்?” என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

“வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்” என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் ‘தொப்’பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், “தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், “அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்” என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், “நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!” என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

நீதி: சமயோசித புத்தி இருந்தால் எந்த சூழலையும் சமாளிக்கலாம் 

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯TET-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு: புதிய அறிவிப்பாணை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

🎯மருத்துவ கவுன்சிலிங் இன்று நிறைவு..

🎯தமிழகத்தில் மருத்துவ துறையில் 4,308 காலியிடம் 2 மாதத்தில் நிரப்ப முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

🎯துாய்மை பணியாளருக்கு நிரந்தர பணி கிடையாது! அரசின் புது உத்தரவால் அதிர்ச்சி

🎯வாக்காளர் பட்டியல் திருத்த பணியை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

🎯 நவம்பர் 11 இல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

🎯பல மின்இணைப்புகள் உள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க மேலும் அவகாசம் - அடுத்த ஆண்டு ஏப்.10 வரை நீட்டிப்பு

🎯 தேவர் தங்க கவசம் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு

🎯ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் காந்தி, இன்னொரு பக்கம் விநாயகர் படம்: பிரதமருக்கு கேஜ்ரிவால் யோசனை

🎯அரியானாவில் நாளை முதல் 2 நாட்கள் மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

🎯இங்கிலாந்தின் துணை பிரதமராக டொமினிக் ராப் நியமனம்: ரிஷி சுனக் அதிரடி

🎯 டி20 தரவரிசை டாப் 10 மீண்டும் கோலி

🎯“பாகிஸ்தான் தான் நல்ல வேகப் பந்துவீச்சு அணி!” - அனில் கும்ப்ளே மனம் திறப்பு

🎯தமிழகத்தில் அக்.29-ல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை; அக்.30-ல் கனமழை வாய்ப்பு

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯IIT Madras and Banaras Hindu University to jointly host Kashi Tamil Sangamam

🎯MP makes plea to release AISHE report

🎯ISRO to boost NavIC, widen user base of location system

🎯Redevelopment of Egmore railway station set to begin shortly

🎯To improve India’s economy, print images of Hindu deities Ganesh, Lakshmi on currency, Kejriwal tells Modi

🎯Higher education curriculum framework on the anvil: Kerala CM

🎯No side should resort to nuclear option, Rajnath tells Russian counterpart

🎯Britain's new Prime Minister Rishi Sunak delays crunch budget plan

🎯T20 World Cup 2022 | Ireland beat England by 5 runs via D/L method

🎯Tennis players face packed home schedule till year-end
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...