Tuesday, October 18, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (19-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 19.10.2022.    புதன் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  குற்றம் கடிதல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?

விடை:  மும்பை–தானா

2. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?

விடை:  அலெக்ஸாண்டர் ப்ளமிங்

3. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்

விடை:  PSLV–D2

4. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை:  ஜவஹர்லால் நேரு

5. 8-வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?

விடை:  தஞ்சாவூர்

பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹What won’t bend at five will not bend at fifty 

🌹ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது



🌷Fire lasts only as long as it heats. The earth lasts only as long as it revolves. Man lasts only as long as he tries. You are man 

🌷சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன். நீ மனிதன்.



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

சேவலும் நரியும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு சேவல் ஆனதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது; நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று கத்தினால் காடே அதிரும்.

அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.

சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.

இந்தச் சேவலைத் தந்திரத்தால்தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.

"அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்னை வரக் கூடாது. பிரச்னை வந்தால் கடும் தண்டனை தரப்படும்.

""எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் ஊலல்லல்லா பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக் கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக் கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் ஞாபகத்துக்கு வந்தாய். வா, நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்,'' என்றது.

நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது.

""நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே,'' என்றது.

நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது.

""அதை விட முக்கியமான சமாசாரமா? அது என்ன.....?'' என்றது நரி.

""வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது சேவல்.

""அவை எப்படி இருக்கின்றன?'' என்று பயத்துடன் கேட்டது நரி.

""இரண்டும் நாக்கை தொங்க விட்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும், இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ... இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,'' என்றது சேவல்.

""நாசமாப் போக, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள். பார்த்தால் கடித்துக் குதறி விடும்,'' என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி.

நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯“மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கவில்லை” - கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதில்

🎯 MBBS மற்றும் BDS கலந்தாய்வு இன்று தொடக்கம்.

🎯கிராமப்பகுதியில் மருத்துவ சேவை செய்வேன்: தரவரிசையில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி விருப்பம்

🎯வரும் 25ல் சூரிய கிரகணம்: பழநி கோவில் அடைப்பு

🎯25ல் பகுதி சூரிய கிரஹணம்: சில நிமிடங்கள் மட்டுமே நிகழும்

🎯ஆதார் எண் பெற ஆணையத்திடம் அனுமதி கோர மின் வாரியம் முடிவு

🎯‘அலுவல் மொழி குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது’ - தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

🎯 தீபாவளிப் பண்டிகை கூட்ட நெரிசல் : நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம்.

🎯 தீபாவளி சிறப்பு ரயில்கள் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

🎯காங்கிரஸ் தலைவர் தேர்தல் - இன்று முடிவு வெளியீடு

🎯 இந்திய தலைமை கணக்கு அதிகாரியாக பாரதிதாஸ் பொறுப்பு

🎯T20 WC: SL vs UAE | ஹாட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்திய சென்னை வீரர் கார்த்திக் மெய்யப்பன்

🎯T20 WC | பாகிஸ்தானை வென்றால் இந்திய அணியால் உலகக் கோப்பையையும் வெல்ல முடியும் என ரெய்னா கருத்து.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯JEE (Advanced) topper selects IISc-Bengaluru for B.Tech course instead of IITs

🎯Transport department to operate 10,500 buses from the city for the Deepavali festival

🎯T.N. Assembly adopts resolution against Parliament panel report on Official Languages; DMK was born to nurture Tamil and protect it from onslaught of other languages, says Stalin

🎯Govt. decides against enhancing solatium to firing victims’ kin 

🎯Indian Railways announces the closure of Central Organisation for Modernisation of Workshops

🎯India-U.K. form Joint Working Group to further defence cooperation

🎯ICC T20 World Cup 2022 | Sri Lanka thrash UAE by 79 runs to get campaign back on track

🎯Roger Binny elected 36th BCCI President, replaces Sourav Ganguly

🎯Asia Cup 2023 will be shifted from Pakistan to a neutral venue, says Jay Shah



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

1 comment:

  1. காலை வழிபாட்டு செயல்பாடுகள்
    தினசரி பதிவு
    சாதாரண விஷயம் இல்லை
    மிகவும் கடினமான வேலை
    இதை சிறப்பாக செய்யும்
    உங்களுக்கு
    வாழ்த்துகள் சார் 💐

    ReplyDelete

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...