Sunday, October 30, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (31-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 31.10.2022.    திங்கட்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   வினைத்திட்பம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவருக்கும் எளியனவாம், சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.480 காகிதங்கள் கொண்ட ஒரு கட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?

விடை: ரீம்

2.சிறந்த இந்திய விளையாட்டுப்
பயிற்சியாளர்களுக்கு என்ன விருது
வழங்கப்படுகிறது?

விடை: துரோணாச்சாரியா விருது

3.சென்னை மாநிலம்' தமிழ்நாடு' என 
எப்போது மாற்றப்பட்டது?

விடை:1969

4.வ.உ.சிதம்பரனாருக்கு ' கப்பலோட்டிய
தமிழன்' என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

விடை:ம.பொ.சி

5.நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின? 

விடை: நெபுலாக்கள்


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Every cloud has a silver lining

🌹 தீமையிலும் நன்மை உண்டு


🌷 Every man is his own doctor

🌷 தன் நோய்க்கு தானே மருந்து

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

பொறுமையே புத்திசாலித்தனம் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு ஆமையும் இரண்டு அன்னப்பறவையும் இருந்தாங்க. நிறைய நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் கதை சொல்லிக்கிட்டே நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். அப்படியே சில வருடங்கள் போயிடுச்சு, அப்போ ஒரு வருஷம் அங்கு மோசமான வரட்சி ஏற்பட்டது. அப்போது “இந்த குளம் கிட்டத்தட்ட வற்றி போயிடுச்சு தண்ணி இல்லாம நாம எப்படி இங்க வாழுறது” என்று அன்னப் பறவை கேட்டது. 
அதற்கு ஆமை “கவலைப்படாதே நண்பா ஒரு வழி கண்டு பிடிக்கலாம்.” என்றது. உடனே மற்றொரு அன்னப் பறவை “ஒரு வழியும் இல்லை நாங்க பறந்து போனாலும் நீ இங்க தான் இருக்கணும், ஏன்னா நீ ரொம்ப மெதுவா நடப்ப இல்ல, அது மட்டும் இல்ல உன்ன நாங்க தனியா விட்டுட்டு போக மாட்டோம்.” என்று சொன்னது. 

கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ஆமை சொன்னது “ஹே! பசங்களா என்கிட்ட ஒரு சூப்பரான ஐடியா இருக்கு, முதலில் நீங்க ரெண்டு பேரும் போயி தண்ணி நிறைய இருக்கிற குளமா பார்த்து தேடிட்டு வாங்க. 
அப்படி திரும்பி வரும்போது ஒரு பெரிய குச்சியை கொண்டு வாங்க அந்த குச்சியின் நடுவில நான் பிடிச்சுக்கறேன், நீங்க ரெண்டு பேரும் உங்க காலால குச்சியின் ரெண்டு ஒரத்தையும் புடிச்சுகிட்டு என்னை புது குளத்துக்கு பறந்து கூட்டிட்டு போங்க, நம்ம வாழ இதுதான் ஒரே வழி. இது ஒரு செம்மையான ஐடியா!.” என்றது.

அதை கேட்ட அன்னப் பறவைகள் “இது நல்ல ஆலோசனை தான். ஆனா நாங்க பறக்கும் போது நீ தான் உன் வாயைத் திறக்காம பாத்துக்கணும்.. இல்லன்னா நேரா கீழே விழுந்துவிடுவ.” என்று கூறி அந்த இரண்டு அன்னப்பறவையும் பறந்து போய் நிறைய தண்ணீர் உள்ள ஒரு குளத்தை அவங்களோட புது வீட்டை தேடப் போனாங்க. 

அந்த நேரத்துல ஆமை இப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை யோசித்ததை நினைத்தும், வானத்தில் அப்படியே பறந்து போகிறதை நினைத்தும் ரொம்ப பெருமையா இருந்துச்சு. சீக்கிரமாவே அன்னப் றவைகள் ஒரு குளத்தை கண்டுபிடித்து ஒரு பெரிய குச்சியோட ஆமைய பார்க்க வந்தாங்க. ‘இதோ இதுதான் உன் குச்சி பிடிச்சுக்கோ” என்றது அன்னம். 
ஆமை எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா அதோட குட்டி கால்களை நகத்தி தன்னோட வாயால் அந்த குச்சியை புடிச்சுது. அப்போ அன்னப்பறவைகள் பட படனு இறக்கைகளை விரிச்சிட்டு சீக்கிரமா பறக்க ஆரம்பிச்சாங்க. அவங்க மேகத்துக்கு மேல் பறந்து போனாங்க, ஆமையோட ஐடியா சூப்பரா வேலை செய்தது. 

“நான் பறக்குறேன்னு என்னாலேயே நம்ப முடியல, இப்படி ஒரு ஐடியாவை யோசிச்ச நான் எவ்ளோ பெரிய புத்திசாலி” என்று ஆமை தன்னை ரொம்ப பெருமையாக நினைத்தது. அவங்க போற வழியில ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தின் மேலே  பறக்கும் போது கீழே இருந்த மக்கள் அவங்கள பாக்க ஆரம்பிச்சாங்க. 

இரண்டு அன்னப்பறவையும், ஒரு ஆமையும் பறக்குறத பாக்க ரொம்ப அழகா இருந்திச்சி. “ஹே! அங்க பாருங்க அந்த ரெண்டு அன்னபறவையும் ஒரு ஆமைய தூக்கிட்டு போகுது.” கீழே இருக்கிற மக்கள் சொன்னத கேட்டு ஆமை ரொம்ப பெருமை பட்டுச்சு. மக்களுக்கு இது ஆமையோட ஐடியானு தெரியாததுனால ஆமைக்கு கோவம் வந்திச்சு. 
“என்ன ஒரு புத்திசாலி பறவைகள் அவங்க ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்திற்கு போறாங்க போல கூட அவங்க ஃபிரண்ட் ஆமையும் கூட்டிட்டு போறாங்க பாருங்க. ஆமா இது யாருடைய ஐடியானு தெரியல, அதை யோசித்த விலங்கு ரொம்ப புத்திசாலி” என்று மக்கள் புகழ்ந்து பேசுறத கேட்ட ஆமையால் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல். அதோட வாய திறந்து கத்தி “அது என்னோட ஐடியா” என்று சொல்லிச்சு. 
ஆமை, தன்னோட வாய திறக்க கூடாது என்பதை மறந்ததனால் மேல இருந்து ரொம்ப வேகமாக கீழே விழுந்திச்சு. ஆமையோட பொறாமையான குணத்தினால அன்னப்பறவைகள் தங்களோட நண்பனை இழந்திட்டாங்க. அவங்களல எதுவும் பண்ண முடியல. அன்னப் பறவைகள் மட்டும் புது குளத்திற்கு பறந்து போனாங்க. 

நீதி: சான்றோர்களைப் போல் அமைதியாக இருக்க வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

🎯ஆன்லைன் பிஎச்.டி. படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை... மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

🎯2022-23-ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் 2022 அக்டோபர் 31 இன்றுடன் முடிவடைகிறது.

🎯 அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூபாய் மூன்று கோடியில் புத்தகங்கள் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

🎯 அரசு பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் எம். பி .பி .எஸ் பாட புத்தகங்கள்.

🎯UGC NET 2022 : உதவி பேராசிரியர்களுக்கான நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

🎯 நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க அழைப்பு.

🎯புதிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் - ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

🎯 இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு காச நோய் என உலக சுகாதார மையம் தகவல்.

🎯குஜராத்தில் ராணுவ விமான தயாரிப்பு தொழிற்சாலை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

🎯 உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்டது இந்திய பாதுகாப்பு துறை.

🎯T20 WC | சோபிக்காத பேட்ஸ்மேன்கள் - நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

🎯T20 WC | ஷார்ட் பால் வீக்னெஸ்ஸால் சரிந்த டாப் பேட்ஸ்மேன்கள் - SKY உதவியால் இந்தியா 133 ரன்கள் சேர்ப்பு

🎯T20 WC | எய்டன் மார்க்ரம்; டேவிட் மில்லர் அதிரடி - இந்தியாவை தோற்கடித்தது தென்னாப்பிரிக்கா 

🎯 இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stipend of Rs.1000 per month for college students.. You can apply from November 1!

🎯Online Ph.D. Courses are not recognized... UGC warning to students

🎯Last date to apply for National Education Scholarship 2022-23 is 31 October 2022.

🎯 Department of School Education has announced Rs 3 crore worth of books for government school libraries

🎯 Translated into Tamil for the convenience of government school students M B. B. S. Text Books.

🎯UGC NET 2022 : NET Exam Results for Assistant Professors Released!

🎯 Gram Sabha meeting on 1st November inviting all farmers to participate.

🎯Take advantage of the new opportunity - PM Modi appeals to the youth of Jammu and Kashmir

🎯 According to the World Health Center, 21.4 lakh people have tuberculosis in India.

🎯Army Aircraft Manufacturing Factory in Gujarat: PM Modi lays foundation stone

🎯 Indian Defense Department has the largest number of employees in the world.

🎯T20 WC | Unsophisticated batsmen - Pakistan beat Netherlands

🎯T20 WC | Top batsmen fall due to short ball weakness - SKY helps India add 133 runs

🎯T20 WC | Aidan Markram; David Miller in action - South Africa beat India

🎯 Heavy rain is likely in 13 districts today, according to the Meteorological Department.
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...