Thursday, October 20, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (21-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 21.10.2022.    வெள்ளிக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை ; புகழும் இல்லாதவை.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது?

விடை:  1964

2.உறுப்பு மயக்கமூட்டியாக பயன்படுவது?

விடை: பென்சைல் ஆல்கஹால்

3.உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது?

விடை: மண்புழு

4.இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது?

விடை: மும்பை

5.தொல்பொருளியலின் புதையல் நகரம் என்று அழைக்கப்படுவது?

விடை : புதுக்கோட்டை


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷A single tree doesn’t make an orchard.

🌷தனி மரம் தோப்பு ஆகாது


🌹Empty vessels make the most noise.

🌹நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
பேராசை பெருநஷ்டம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் ஒரு பேராசை பிடித்தவன். அவன் நிறைய வாத்துக்கள் வளர்த்து வந்தான். அந்த வாத்துகளில் ஒன்று ஒவ்வொரு நாளும் தங்க முட்டை இட்டு வந்தது. அந்த விவசாயி அந்த தங்க முட்டைகளை விற்றுப் பணக்காரன் ஆனான்.

வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை தானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாக காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும் என யோசிக்கத் தொடங்கினான்.

எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து விற்றால் ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான்.

அடுத்த நாள் விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்தான்.

வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து துடிதுடித்து இறந்தது. அதன் வயிற்றினுள் அன்றைய தினம் போட வேண்டிய ஒரே ஒரு தங்க முட்டை மட்டும் இருந்தது.

வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

விவசாயி தான் செய்த முட்டாள்தனமான செயல எண்ணி கவலைப்பட்டு வருந்தி"பேராசை பெருநஷ்டம் கொடுக்கும்"என உணர்ந்தான்.


நீதி: பேராசை பெருநஷ்டம்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

🎯ஆசிரியர் நியமனம் | உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவுக்கு 40 லிருந்து 45 ஆகவும், இதர பிரிவுக்கு 45- லிருந்து 50 ஆகவும் உயர்வு என தமிழக அரசு உத்தரவு.

🎯234 எம்எல்ஏ அலுவலகங்களில் இ-சேவை மையம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

🎯மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026ல் வருமாம்!

🎯மருத்துவ படிப்பில் கூடுதலாக 200 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

🎯தொழில் நுட்ப கல்வி இயக்கம் நவ.13-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

🎯நவ.1ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

🎯 எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீடு உயர்வு அவசர சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்.

🎯10 லட்சம் பேர் பங்கேற்கும் மெகா வேலைவாய்ப்பு மேளா : அக்.21-ல் மோடி துவக்கி வைக்கிறார்

🎯கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவு என யுஜிசி அறிவிப்பு

🎯டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டி: நமீபியா எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணி வெற்றி

🎯உலக கோப்பை டி.20 கிரிக்கெட்; பி குரூப்பில் சூப்பர் 12 சுற்று வாய்ப்பு யாருக்கு?.. வாழ்வா, சாவா நிலையில் இன்று மல்லுக்கட்டும் 4 அணிகள்.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chief Minister Stalin unveils e-Sevai centres and new buildings

🎯Tamil Nadu gets awards for implementing housing projects

🎯MBBS, BDS counselling for candidates under 7.5% quota held

🎯Counselling for veterinary courses to begin from October 29

🎯IIT Madras wins national intellectual property award

🎯AIIMS issues SOPs for treating sitting Members of Parliament

🎯Forest Conservation Rules infringe upon land rights of tribespeople: ST panel chie

🎯PM Modi to  launch drive to fill 10 lakh posts in government, PSUs

🎯Chandrayaan-3 launch in June next year: ISRO chairman

🎯ICC T20 World Cup 2022 | Sri Lanka beat Netherlands, reach Super 12’s

🎯Rozgar Mela' | Modi to  launch drive to fill 10 lakh Central posts on Saturday

🎯Chandrayaan-3 launch in June next year: ISRO chairman

🎯Army’s 4th round of emergency procurement to be from India

🎯New member of the grasshopper world named after Dravidian landscape

🎯ICC T20 World Cup 2022 | Sri Lanka beat Netherlands, reach Super 12’s
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...