Sunday, October 9, 2022

இன்றைய பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (10-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 10-10-2022.    திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  கடவுள் வாழ்த்து

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தந்தியை கண்டுபிடித்தவர் யார்? 

*விடை* :மார்க்கோனி

2.உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? 

*விடை* : லண்டன் 

3.பொருளாதாரத்தின் தந்தை யார்?

*விடை* : ஆடம் ஸ்மித்

4.‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

*விடை* : ரிப்பன் பிரபு

5.சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?

*விடை* : கால்சியம் கார்பனேட்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A contended mind is a continual feet
🌹 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

🌷 A friend in need is a friend indeed
🌷 ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
விடாமுயற்சியே வெற்றி தரும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஆர்ட்டீசியன் போல் ஊற்றெடுக்கும்.

முயற்சி என்பது தொடங்கிவிட்டு முடிவு செய்வதல்ல. உயர உயர குதித்துப் பார்த்து, தன்னால் திராட்சைப் பழத்தைத் தின்ன முடியவில்லை என்றதும், அடுத்த முயற்சியைக் கைவிட்டு இந்தப் பழம் புளிக்கும் என்று கைவிடுவதல்ல முயற்சி.

தன் அலகினால் குடுவையிலுள்ள நீரினைப் பருக முடியவில்லை என்றாலும், முயற்சியால் கற்களைக் குடுவையில் சேர்த்து, நீரினை மேலேறச் செய்து, பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சி.

மேலும், ஒரு செயலைத் தொடங்கி அது முடியாமல் போனதும் கைவிடுவது அல்ல, முயற்சி. செயலினை வெற்றியாக்க நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தான் முயற்சி.

1954- ஆம் ஆண்டு வரை உலகின் ஒட்டுமொத்த கட்டுரைகளும் மனித உடலமைப்பின்படி ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடி கடக்க முடியாது என்பதை உறுதியிட்டன.

ரோஜர் பேனிஷ்டர் அவ்வாராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார். அவர் ஒரு ஓட்டப் பந்தய வீரர். குறைந்த தூரம் ஓடுபவர். தனது இலக்கினை நான்காகப் பிரித்தார். முதல் ஒரு மைல்கல்லினை ஒரு நிமிடத்திற்குள் ஓடி முடிக்க உறுதிகொண்டார்.

பல முயற்சிகளுக்குப்பின் 58 வினாடிகளில் ஓடி முடித்தார். சிறிது ஓய்வெடுத்து அடுத்த கால் மைல் கல்லினை அதே வேகத்தில் கடந்தார். வேகத்தைக் கூட்டி, ஓய்வினைக் குறைத்து கடைசியில் 3 நிமிடம் 59.6 விநாடிகளில் அந்த மைல் இலக்கினை கடந்தார்.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”

என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு ரோஜர் பேனிஷ்டர் வாழ்க்கையானார். இலக்கு தெரியாமல் முயற்சிப்பதுதான் கடினம். இலக்கினைக் கணித்து, முயற்சிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் எளிது. அது ஒரு செகண்டில் 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்து விண்ணில் செல்லும் ராக்கெட்டைப் போன்றது. தெளிவான இலக்கினை நோக்கிய வெற்றி எளிதில் விண்ணைத் தொடும்.

முயற்சிக்க மறுத்தால் மூச்சும் நின்றுவிடும்! புதிய முயற்சிதான் வரலாற்றில் தடம் பதிக்கும்!

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯விடுமுறை முடிந்தது; இன்று பள்ளிகள் திறப்பு

🎯13ம் தேதி வரை கன மழை தொடரும்!

🎯 புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

🎯மதுரை எய்ம்ஸ் 2026ல் பயன்பாட்டுக்கு வரும்: மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் உறுதி

🎯தமிழக பள்ளிகளில் கலா உத்சவ் போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

🎯முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் 125-வது பிறந்த நாள்: அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை

🎯3ம் சுற்று இன்ஜி., கவுன்சிலிங் வரும் 13ல் பதிவு துவக்கம்

🎯மின் கட்டணம் தொடர்பாக மோசடி எஸ்எம்எஸ்: டான்ஜெட்கோ எச்சரிக்கை

🎯 திருச்சி மாவட்டத்தில் நாளை மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு கூட்டம்

🎯 உலகில் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆக தயாராகும் 'ஜிஎஸ்எல்வி மார்க் - 3' என ஸ்ரீஹரிகோட்டா ஏவுதல முதன்மை பொது மேலாளர் கருத்து.

🎯 நியூசிலாந்தில் புதிய இந்திய தூதரகம்: வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

🎯IND vs SA 2-வது ஒருநாள் | ஷ்ரேயஸ் - இஷான் கிஷன் அசத்தல் ஆட்டம்: இந்திய அணி வெற்றி

🎯தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯 At ₹7.45 lakhs crore, direct tax receipt cross ohalf the target

🎯 AIIMS work will conclude in 2026, says union minister

🎯 'Awareness needed to address child sexual abuse'.

🎯 Indian Navy to join Malabar exercise and international fleet review in Japan in November.

🎯  Modi begins 3 day Gujarat visit to launch projects head of election.

🎯 China's communist party holds meet to set agenda for upcoming Congress

🎯Ind vs SA second ODI | Shreyas Iyer, Ishan Kishan set up series-levelling win for India

🎯Twenty20 World Cup preparation | Need to follow process and routine for success, says Suryakumar Yadav

🎯FIFA U-17 Women’s World Cup | Odisha stadium spruced up with state-of-the-art amenities





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...