Sunday, September 10, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (11-09-2023 )

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 11.09.2023 திங்கள்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஊழ்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்?

*விடை* : கல்கி

2.பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது? 

*விடை* : வேத வியாசர்

3.நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன? 

*விடை* : விண்துகள்

4.இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

*விடை* : ஞானபீட விருது

5.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?

*விடை* : சகாப்தம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலத்தின் அருமையை அறிவோம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். 

அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான். 
இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது” என்றான். 
இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார். 

மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.
நான்காவது அறிஞர், “அரசே, நம்ம பூமிக்கு வேண்டியஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது” என்றான். 
ஐந்தாவது அறிஞர், “வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயணும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது” என்றார். 
இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து, “அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்?. அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது?. பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம்?. அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்”.

ஆகவே, அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்க பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ? அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார். 
அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார். மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலை பாராட்டினார். 


*நீதி* : காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாத பொருள். காலத்தை தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனவே இளமையிலே நன்கு கற்க வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் சனிக்கிழமை துவங்கப்பட்டது. ஜோ பைடனுடன் மோடி சந்திப்பு: மேலும் 14 நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

🎯டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நிறைவு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்

🎯 பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பு ஜி20 பிரகடனத்தில் வலியுறுத்தல்.

🎯ஜி-20 உச்சி மாநாடு 2023 | மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் அஞ்சலி - வியட்நாம் புறப்பட்டுச் சென்றார் பைடன்

🎯ஜி-20 உச்சி மாநாடு 2023 நிறைவு: அடுத்த மாநாட்டுக்கு தலைமையேற்கும் அதிகாரம் பிரேசில் நாட்டிடம் ஒப்படைப்பு

🎯 தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆளுநர் ஆர் எம் ரவி கருத்து.

🎯 பொறியியல் சேர்க்கை 1.03 லட்சம் இடங்கள் நிரம்பின. 57,000 அதிகமான இடங்கள் காலி.

🎯 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

🎯பணியாற்றுவோருக்கான தொழில் படிப்புகள் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)வழிகாட்டுதல்கள் வெளியீடு.

🎯13 மொழிகளில் பாடத்திட்டம்: ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்.

🎯மதுரையில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.,) உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை விசாரணையை துவங்கியது...  

🎯 திருச்சியில் செப்டம்பர் 16ல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்.

🎯 திருச்சியில் செப்டம்பர் 23 இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

🎯தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.

🎯ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

🎯 யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒத்தையர் பிரிவில் அமெரிக்க இளம் வீராங்கனை கோ கோ கௌஃப் சாம்பியன் பட்டம் வென்றார்.

🎯 தெற்கு ஆசியாவுக்கு எதிரான 2வது ஒன்டே: 123 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய வெற்றி.

🎯அமெரிக்க ஓபன் | மேத்வதேவை வீழ்த்தி 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

🎯நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Union Home Minister Amit Shah congratulates Prime Minister Narendra Modi on G-20 success.

🎯As G-20 plans crypto regulatory framework, India may shelve plan for outright ban.

🎯This year's summit proved G-20 can still drive solutions to its most pressing issues: Biden

🎯G-20 Summit concludes; PM Modi calls for virtual review meet in November.

🎯Stalin, Biden exchange pleasantries in Delhi.

🎯Joe Biden 'very humble', says Indian priest after holding communion service for U.S. president

🎯 Tamil Nadu Chief Secretary urges district collectors to intensify monitoring of drinking water

🎯Teachers’ work has become transactional unlike role of gurus in the past: Governor 

🎯AICTE planning to establish innovation centres

🎯Pandya period rock-cut cave temple at Paraikulam declared a protected monument

🎯No relief for Chandrababu Naidu as court orders 14-day judicial remand

🎯U.P. plans to run e-buses under PM e-bus scheme across urban centres

🎯Asia Cup 2023, IND vs Pak | Rohit, Gill dazzle before rain arrives; game to continue on September 11.

🎯Asia Cup 2023 | Shreyas Iyer missed out on the match against Pakistan after he hurt his back before toss.

🎯Buchi Babu 2023 Final: Gurjar and Khejroliya help MP hold the edge; Vashisht the lone silver-lining for Delhi

🎯Dabrowski and Routliffe win U.S. Open women's doubles, beating 2020 champs Siegemund and Zvonareva

🎯U.S. Open 2023 Final | Novak Djokovic downs Daniil Medvedev to win record-tying 24th Slam




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...