பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 05/09/2023 செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: பெருமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவார்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
விடை : அன்னை தெரசா
2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
விடை : கெப்ளர்
3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
விடை : ரஷ்யர்கள்
4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
விடை : 1860
5.நதிகள் இல்லாத நாடு எது ?
விடை : சவுதி அரேபியா
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷Look before you leep
🌷ஆழம் பார்க்காமல் காலை விடாதே
☘️Even elephants do slip
☘️ஆணைக்கும் அடி சறுக்கும்
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌹 புறந்தூய்மை நீரால் அமையும் அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் என்னும் வள்ளுவர் வாக்கை நான் நன்கு அறிவேன்.
🌹 எனவே நீரினால் உடலை அன்றாடம் செய்வது செய்வதுபோல நிறைய நூல்களை அன்றாடம் வாசித்து உள்ளத்தை தூய்மை ஆக்குவேன்.
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁
புறாவும் - கட்டெறும்பும்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
. ஒரு ஊரில் ஒரு பெரிய ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு பெரிய அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தின் கிளையில் ஒரு புறா எப்போதும் வந்து அமர்வது வழக்கம். அப்படி ஒரு நாள் அந்த மரக்கிளையில் புறா அமர்ந்து அற்றில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஆற்று நீரில் ஒரு கட்டெறும்பு சிக்கி தத்தளிப்பதைக் கண்டது.
மறுநிமிடம் அந்தப் புறாவிற்கு அந்தக் கட்டெறும்பின் மீது பரிதாபமும், இரக்கமும் பிறந்தது. மறுவினாடி அது ஏதோ சிந்தித்து விட்டு அரச மரத்தின் இலையில் ஒன்றை பறித்து எறும்பு தத்தளிக்கும். இடத்திற்கு சற்று முன்னால் போட்டது.
ஆற்று நீருடன் மெல்ல அடித்து வரப்பட்ட எறும்பு அந்த அரச இலையின் மீது பட்டதும் கப்பென அந்த இலையைப் பற்றிக் கொண்டது. இலைகள் நீரில் அமிழாது அல்லவா? எனவே, அந்த இலையின் மீது ஊர்ந்த எறும்பும் நீருக்குள் அமிழாமல் கரையோரம் இலையுடன் வந்தது.
கரையில் இலை ஒதுங்கியதும் இலையை விட்டு இறங்கியது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த புறாவிற்குத் தனது நன்றியைக் கூறியது. தினந்தோறும் எறும்பும், புறாவும் அதே மரத்திடியில் சந்தித்தன. இரண்டும் நல்ல சிநேகிதர்களாயின.
ஒரு நாள் அந்த மரத்தடிக்கு ஒரு வேடன் வந்தான். அவன் மரக்கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் கண்டான். ஆனால், வேடன் வந்ததையோ, அவன் தன்னைப் பர்த்ததையோ புறா கவனிக்கவே இல்லை.
வேடன் தன் அம்பையும், வில்லையும் எடுத்தான். மரக்கிளையில் இருந்த புறாவை நோக்கி குறி வைத்தான். ஏதும் அறியாத புறா பேசாமல் எங்கோ பார்த்தபடி இருந்தது. ஆனால், வேடனின் காலடியில் நின்ற எறும்பிற்கு வேடன் தனது நண்பனான புறாவை குறி வைப்பது வெகு எளிதில் தெரிந்துவிட்டது.
உடனே தன் நண்பனின் உயிரை காப்பது எத்தனை அவசியமானது என்பதை உணர்ந்தது.
அடுத்த நிமிடம் அந்த வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. எதிர்பாராமல் கட்டெறும்பு கடித்த வலியில் வேடனின் குறி தவறியது. அவன் எய்த அம்பு எங்கோ போய் விழுந்தது.
இப்படி ஏற்பட்ட திடீர் சத்தத்திலும், சலசலப்பிலும் கவனம் சிதறிய புறா வெடுக்கென திரும்பியது. மறுநிமிடம் தனக்கு வரவிருந்த பேராபத்தை உணர்ந்தது. தன் நண்பனான எறும்பு தன்னைக் காப்பாற்றியதையும் உணர்ந்தது. மறுபடியும் வேடன் தன்னை நோக்கி குறி வைக்கும் முன்பாக அந்த இடத்தை விட்டுப் பறந்தது.
மறு நாள் தன் நண்பனான எறும்பைப் பார்த்து நன்றி தெரிவித்தது. இரண்டும் ஒன்றின் உயிரை ஒன்று காப்பாற்றிய நன்றியில் கடைசிவரை நட்புடன் இருந்தன.
*நீதி : நாம் ஒருவருக்கு உதவினால் நிச்சயம் நமக்கு தேவைப்பட்ட சமயத்தில் உதவ யாரேனும் வருவர்.*
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 இன்று ஆசிரியர் தின கொண்டாட்டம். ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டி ஆசிரியர்கள் என ஆளுநர் தமிழிசை மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து.
🎯 தமிழ் இலக்கிய திறனறித் தேர்வுக்கு செப்டம்பர் 20க்குள் விண்ணப்பம்.
🎯 பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி விரைவில் தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அறிவிப்பு.
🎯 கேலா, தேசிய விளையாட்டு பதக்க வீர்களுக்கு ரூ 2.24 கோடி ஊக்கத்தொகை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
🎯 திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூரில் 'எங்கள் பள்ளி மிலிரும் பள்ளி' திட்டம் தொடக்கம்.
🎯 ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க 2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் முடிவு.
🎯 நிலவில் மேலெழும்பி மீண்டும் தரையிறங்கிய லேண்டர்.
🎯 மாநில அரசுகளை பழிவாங்குவதன் மூலமாக அடிப்படை கட்டமைப்பை சிதைக்க முயற்சிக்கும் பாஜக என 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' குரல் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
🎯ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கம்.
🎯 விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் கொண்டாடுங்கள் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்.
🎯 புதுகை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மானிய விலையில் 404 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள். புதுக்கோட்டையில் வறட்சி நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்.
🎯 வேளாண் துறையில் ரூ.62 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ரூ.181 கோடி. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
🎯 சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதுக்கோட்டை இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
🎯 வெளிநாடுகளுக்கு தபால், பார்சல் அனுப்பும் வசதி. அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம். காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை வெளிநாடுகளுக்கு தபால், பார்சல் அனுப்பலாம்.
🎯 கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல் முடிந்து எட்டு மாதங்கள் ஆகியும் இன்னும் பணி ஆணை வரல.
🎯 திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றம். செப்டம்பர் 13ஆம் தேதி தேரோட்டம்.
🎯 2014 முதல் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் மோடி ஆர்டிஐ மூலம் தகவல்.
🎯 இந்தியாவின் ராக்கெட் வேக வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஆட்சியின் ஸ்திரமான அரசியலே காரணம் என பிரிட்டன் நாளிதழ் பாராட்டு.
🎯 டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜிஜின்பிங் பங்கேற்கவில்லை.
🎯 அமெரிக்க அதிபர் விமானத்தை வரவேற்க தயாராகும் டெல்லி விமான நிலையம்.
🎯 ஜி 20 உச்சி மாநாட்டின் வளாகத்தை அலங்கரிக்கும் 29 நாடுகளின் பாரம்பரிய பொருள்.
🎯 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக லீக் ஆட்டத்தில் சிராஜ், ஜடேஜா பந்துவீச்சில் அசத்தல். நேபாளம் 230 ரன்களுக்கு ஆட்டம் இழப்பு.
🎯 ஒலிம்பிக் மற்றும் உலகச் சாம்பியன் இந்திய ஈட்டி எறிதல் வீரருமான நீரஜ் சோப்ராவுக்கு சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை சார்பில் பாராட்டு விழா.
🎯 ஆசிய டேபிள் டென்னிஸ் தொடர். வெண்கல பதக்கத்தை உறுதி செய்தது இந்திய ஆடவர் அணி.
🎯 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் ஓபனா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
🎯 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான நடப்பு சாம்பியன் இகாஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி.20-ம் நிலை வீராங்கனையிடம் வீழ்ந்தார்.
🎯 தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Chinese president will not attend to Delhi G20 summit.
🎯 Improve admission to government schools. Karaikal collector urges teachers.
🎯 Districts along Western Ghats to experience heavy rainfall till September- 8.
🎯 TET qualified candidates to observe 'back day' today.
🎯 University holds aquaculture training programme.
🎯 Government sanctions funds for samayapuram temple.
🎯 BJP using religion to hide its short comings, trying to destroy unity among people : CM.
🎯 State government is consistently taking steps to get water from Karnataka: official.
🎯 Navy brings out Maritime infrastructure road map.
🎯 Macron to raise risk of 'partitioning of the world' at G-20 meet.
🎯 Doctors team visit relief camps in Manipur; flags poor living conditions.
🎯Pay equal respect to all religions says Congress.
🎯 Vikram lander does a hop, to sleep; good night till September 22.
🎯 After covid-19 Russia rolls out the red carpet for Indian tourist again.
🎯 Looking forward to India trip,'disappointed' Xi is not attending G20 meet: Biden.
🎯 India breezes fast Nepal in rain-hit match, joints Pakistan in super 4s.
🎯 India's World Cup squad to be announced today.
🎯Ostapenko ends Swiatek's New York run and NO.1 reign; Djokovic cruises.
🎯'I played impulsively in some positions against carlsen.
🎯 Lewandowski penalty wins it for Barcelona in the end.
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment