Wednesday, September 6, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (07-09-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 07/09/2023       வியாழக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  நட்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.    

முகநக நட்பது  நட்பன்று நெஞ்சத்              தகநக நட்பது நட்பு                           
                                                                                🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பன்று , நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பாகும்



🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. பூக்கும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ஆஞ்சியோஸ்பெர்ம்

2. பாக்டீரியா என்பது எத்தகைய உயிரி?

விடை : ஒரு செல் புரோகேரியாட் உயிரியாகும்.

3. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறிய உயிரினம் எது?

விடை: மைக்கோ பிளாஸ்மா.

4. தாவர உலகத்தின் இரு வாழ்விகள் என்று அழைக்கப்படுவது?

விடை : பிரையோஃபைட்டுகள்

5. ஒரு உயிரினத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டு அலகு என்பது?

விடை: செல் .


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 It is not wise to talk more

🌷அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல

🌹 Freedom is my birth right

🌹 சுதந்திரம் எனது பிறப்புரிமை



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 பணிவும் துணிவும் பண்புள்ளவர்களின் செயல் என்பதை அறிவேன்.

🌷 சான்றோர்களிடத்து பணிவும் கொண்ட கடமையில் துணிவும் கடைபிடித்து வாழ்வில் என்றென்றும் வெற்றி பெறுவேன்.

 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁


பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை..*

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார். அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?' என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,'' என்றார்.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.'' என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.
ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்.
கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
""அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர்.
இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப் போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!'' என்றார்.
தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்...
.
*நீதி: பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை...*


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினைக் கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவு

🎯துணைவேந்தர் தேடுதல் குழுவில் முதல் முறையாக யுஜிசி பிரதிநிதியை சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.

🎯பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு நடந்த துணை கலந்தாய்வை அடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியீடு

🎯காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரும் தமிழக அரசின் மனு செப்டம்பர்-21-ல் விசாரணைஎன உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.

🎯 டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி நிலை குறித்து வேளாண்மை துறை ஆணையர்கள் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

🎯 குருவை பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய  முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.

🎯 ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி வாய்ப்பு . செப்டம்பர் 12ல் சென்னையில் கல்வி கண்காட்சி.

🎯 மேற்கு தொடர்ச்சி மலையோரம் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு.

🎯 திருச்சி - மானாமதுரை முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை மாற்றம்.

🎯 வார கடைசி மற்றும் முகூர்த்த நாட்களான செப்டம்பர் 8, 9, 10-ல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

🎯 முதல்வர் காப்பீட்டு திட்ட களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை அறிவிப்பு.

🎯 இனி டெபிட் கார்டு அவசியம் இல்லை ஸ்மார்ட்போனில் யுபிஐ மூலம் பணம் எடுக்கலாம் என யுபிஐ ஏடிஎம் அறிமுகம்.

🎯 நடைபாண்டில் 5.21 கோடி டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம். இந்திய உணவுக் கழக தலைவர் தகவல்.

🎯ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

🎯 சர்வதேச முக்கியமான நாடுகள் பல நகரங்களில் நடத்தப்படுகிறது. கூட்டாட்சி தத்துவத்தில் உறுதி கொண்டுள்ளோம் ஜி-20 தலைமைத்துவத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்.

🎯“நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை...” என பட்டியலிட்டு பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்.

🎯உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் விற்பனை செப்.,8-ல் துவக்கம்.

🎯 சனாதனம் குறித்து யாரும் தவறாக பேசினால் மத்திய அமைச்சர்கள் பதிலடி தர வேண்டும் என டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். எந்த மதத்தையும் இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் உறுதிபட கூறினார்.

🎯 செப்டம்பர்,3 சனாதன நாளாக கடைப்பிடிக்கப்படும் என அமெரிக்க நகர மேயர் அறிவிப்பு.

🎯 அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோஹோவிச் ,கோ கோ காஃப்.

🎯 ஆசிய டேபிள் டென்னிஸ் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கல பதக்கம்.

🎯 ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை ஷுப்மன் கில் மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்.

🎯 இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை சமனில் முடித்தது நியூசிலாந்து.




TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Asian a key pillar of 'Act East' policy Modi.

🎯 Tamil Nadu government and governor clash over vice chancellor search panels.

🎯 Tamil Nadu gets 3.9 tmcft half Kaveri water in one week.

🎯 Inflow at Mettur dam drops 3,500 cost cusecs.

🎯 NASA's Lunar Reconnalsance Orbiter captures chandrayaan 3 landing site.

🎯 Agriculture officials inspect standing kuruvai, Samba corps in Delta districts.

🎯 Trichy - rameshwaram express to be short terminated.

🎯 School noon meal scheme in Kerala hit by delay in fund release by government.

🎯 Constitution does not allow abuse of any religion : Modi

🎯 CFA institute business line to host webinar tomorrow.

🎯 New look of Delhi will live a lasting impression on G-20 guests : Minister

🎯 'India' and 'Bharat' retained to align varied views in constituent Assembly.

🎯 G 20 could pave way for crypto regulation, financial inclusion..

🎯 Pakistan secures commending win.

🎯 Hardik has a very mature head on his shoulders, says skipper Rohit.

🎯 Australia names provisional squad for World Cup.

🎯 Shelton comes up trumps over Tiafoe in a dramatic dule faces Djokovic.

🎯Vachier - Lagrave in sole lead going into last day of rapid.





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  
முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி , 
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...