பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 04/09/2023 திங்கள்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: கல்வி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
கெழுமையும் ஏமாப் புடைத்து.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.வந்தே மாதரம் பாடலை எழுதியவார்?
விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி
2.புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்?
விடை : பல்லவர் கால கல்வெட்டுகள்
3.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
விடை : ஒடிசா
4.காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
விடை : ஒக்கேனக்கல்
5. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
விடை : 2004
பழமொழிகள்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.
🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 A little learning is a dangerous thing
🌷அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.
🌹 Knowledge is power
🌹அறிவே ஆற்றல்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன்.
🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"
ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர்.
"இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.
அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.
தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.
ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.
விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.
ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.
இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.
இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.
அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ?
காரணம் உண்டு.
அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.
சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 33 பேர் தேர்வு.
🎯 சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வழங்குகிறார்.
🎯 உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
🎯 கல்வி நிறுவனங்களில் தீண்டாமையை ஒழிக்க யுஜிசி யின் வழிகாட்டுதல்கள் சட்டமாக்கப்பட வேண்டும் என முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட் வலியுறுத்தல்.
🎯 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு மூன்றாம் சுற்று நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பின.
🎯 ஆதித்யா திட்ட இயக்குனர் தமிழ்ப் பெண்மணி நிகர் சாஜிக்கு முதல்வர் பாராட்டு.
🎯 சந்திரன், சூரியனைத் தொடர்ந்து சுகன்யான் பரிசோதனையை தொடங்குகிறது.
🎯 அரசு திட்டங்களின் விவரங்களை அறிய 15530 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் ஆட்சியர் தகவல்.
🎯 முதல்வர் காப்பீட்டு பயனாளிகள் பதிவு செய்ய ஒரே நாளில் 100 தொகுதிகளில் சிறப்பு முகாம்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.
🎯 விதிமுறைகளை பின்பற்றி கிராமசபை கூட்டங்களை எதிர்காலத்தில் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு.
🎯 திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 9-ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
🎯 மாநிலம் முழுவதும் நாளில் ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் என கு. பாலசுப்பிரமணியன் தகவல்.
🎯 சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை நவம்பரில் தொடங்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை.
🎯 கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு . ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை.
🎯 2047 ஆம் ஆண்டு நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
🎯 மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நியமனம். மியான்மரில் தீவிரவாதிகளை அழிக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியவர்.
🎯 ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா - நேபாளம் இன்று மோதல் மழையின் அச்சுறுத்தலில் போட்டி.
🎯 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட். இந்திய அணியில் இடம்பெறுகிறார் ராகுல் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
🎯 ஐடிஎஃப் உலக ஜூனியர் டூர் டென்னிஸ் 2 பிரிவுகளில் மாயா ராஜேஸ்வரன் சாம்பியன்.
🎯 அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி. கார்லோஸ் அல்கரஸ், சபலெங்கா முன்னேற்றம்.
🎯 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் வங்கதேச அணி 334 ரன்கள் குவித்தது. ஹசன், ஷண்டோ சதம்.
🎯 தமிழகத்தில் 4 நாட்கள் மழை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு வெளியீடு.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Fiscally imprudent plans, populism will hit the poor hard : PM.
🎯 Chennai airport to have one more domestic terminal in October giving relief to passenger.
🎯 Kharge calls meet of floor leaders of India ahead of special session.
🎯 Plan to open new bus terminus by the year end.
🎯 Madurai bench of the Madras High court has imposes cost on women who field petition to produce her husband.
🎯 Tamil Nadu government to generate additional mineral revenue of about Rs 400 core annually.
🎯 Stalin lauds ISRO scientist over Adithya L1 mission.
🎯 Students belonging to oppressed sections facing discrimination.
🎯 Teacher mood for continuous remark.
🎯 Stalin says 'one nation, one elections' a blatant attempt to undermine federal structure.
🎯 Aditya-L1 healthy in new orbit ISRO.
🎯 Centre's DIKSHA e-education platform to offer AI help.
🎯 Rohit prefers the 'happy headache'. India skipper has first- choice players to pick from against Nepal. Bumrah returns home for personal reasons, to miss Monday's game.
🎯Mehidy and Santo set up Bangladesh's comfortable win.
🎯 Zimbabwe cricket legend Heath streak passes away.
🎯 Arsenal trumps United in a thriller.
🎯Medvedev advances; pegula books fourth - round matchup with keys.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment