Thursday, September 7, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (08-09-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்


💮🦋 🦋 🦋  🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮

நாள் : 08/09/2023.   வெள்ளிக்கிழமை .

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  திருக்குறள்: அதிகாரம்: அறன் வலியுறுத்தல் 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.        


 மனத்துக்கண் மாசிலன் ஆதல்அனைத்தறன்

ஆகுல நீர பிற

                                                                                                                                                                        🌸 பொருள்:

🍀🍀🍀🍀🍀


ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும் அறம் அவ்வளவே ; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.



🌸 பொதுஅறிவு:

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


1.உலகப் பொருளாதார மன்றத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?


விடை : .டாவோஸ்


 2. 5ஜி தொலைத்தொடர்பு சேவையை வெற்றிகரமாக பரிசோதித்த நாட்டின் முதல் தொலை தொடர்பு நிறுவனம் எது?


விடை : ஏர்டெல்    

           

3. 2021- ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பில் எந்த நாட்டின் ராணுவம் பங்கேற்றது?


விடை : வங்கதேசம்


4. covid-19 செயல்திறன் குறியீட்டின் படி covid-19 தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் நாடு எது?


 விடை : நியூசிலாந்து


5. டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அலுவலகம் திறந்துள்ள மாநிலம் எது?


விடை : கர்நாடகம்


பழமொழிகள் (proverbs) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼



☘️ It is not wise to talk more


☘️ அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல


🍁 Brevity is the soul of it


🍁 சுருங்கச் சொல்லி விளங்க வை



 இரண்டொழுக்கப் பண்பாடு:

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


🌷பெற்றோரையும் பெரியோரையும் என்றென்றும் பெரிதாக மதிப்பேன்


🌷பெற்றோரை பேணுதலும் பிறருக்கு உதவுதலும் வாழ்வின் தலைசிறந்த கடமையாக உணர்ந்து செயல்படுவேன்.



 நீதிக்கதை:

🍁🍁🍁🍁🍁🍁


சிங்கமும் சிறு எலியும்      


ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது.

அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது.


இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது.






ஆனால் எலியோ! சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்”. எனக் கெஞ்சிக் கேட்டது. 


சிங்கத்திடம் “இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்” என்றது. சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?” என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.


சில நாட்களின் பின் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேடர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது.


வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது.


அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது.





சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.




நீதி: உருவத்தை யாரையும் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. 


உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம்


 கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான


 ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும்.


இன்றைய முக்கிய செய்திகள்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


🎯 ஆசியான் இந்தியா ஒத்துழைப்பை பலப்படுத்த பிரதமர் மோடி 12 அம்ச திட்டம் தாக்கல்.


🎯 கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.


🎯 லால்குடி அரசு கல்லூரியில் செப்டம்பர் 11 -ல் முதல்நிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை.


🎯 திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டையில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்.


🎯பொற்பனைக்கோட்டையில் அரண்மனை திடலைத் தொடர்ந்து கோட்டைச் சுவர் அகழாய்வு பணி தொடக்கம்.


🎯 ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை தொடக்கம். இந்தியா தலைமையால் உலக நாடுகள் பயனடையும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்.


🎯 ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு.


🎯 செல்பியுடன் பூமியின் நிலாவை படம் எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.


🎯 நவம்பர் 9, 10ஆம் தேதிகளில் சர்வதேச சிறுதானிய மாநாடு ஓடிஸா அரசு நடத்துகிறது.


🎯 அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் கால் பதித்தார் ஆல்கரஸ் . மகளிர் பிரிவில் அரினா சபலெங்கா, மேடிசன் கீஸ் அசத்தல்.


🎯 உலகக் கோப்பை நான்கு லட்சம் டிக்கெட்டுகளை இன்று வெளியிடுகிறது பிசிசிஐ.


🎯 ஐ எஸ் எல் அட்டவணை வெளியீடு. தொடக்க ஆட்டத்தில் கேரளா - பெங்களூரு அணிகள் செப்டம்பர் 21-ல் மோதல்.



.



TODAY'S ENGLISH NEWS

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯 African union to join G20 as sherpas reach a deal.


🎯 Modi presents a 12 point proposal to expand India - Asian cooperation.


🎯 Corporation formulates plan to engage permanent conservancy workers.


🎯 Vahi express to stop at srirangam station on an experimental basis from September 16.


🎯 Bengaluru - Chennai expressway to be ready in January : Gadkari.


🎯 Indian coast guard rescues 10 standard fisherman sea 


🎯 At G20 Japan backs India, not China, as bridge to global south.


🎯 India Keen on having quad leaders for republic Day parade.


🎯 The images of earth and moon beamed by Aditya L1, which were released by the Indian space research organisation on Thursday, as the mission heads to the large point 1(L1).


🎯 India gose down to Iraq in shootout after a controversial contest.


🎯 FSDL rejects Chaubey's plea for postponement of ISL-10.


🎯 India beats Nepal, enters SAFF u-16 football semi final.


🎯 More than just an ODI series for England and New Zealand.










இனிய காலை வணக்கம் ....✍       

           

இரா . மணிகண்டன் மு

துகலை தமிழ் ஆசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி

கோவில்பட்டி , 

திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.

 

அலைபேசி எண் : 9789334642.

                                    

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...