Tuesday, September 26, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (27-09-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27/09/2023      புதன்கிழைமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  கல்வி 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.   
                                                                                                                                                             
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.வந்தே மாதரம் பாடலை எழுதியவார்? 

விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி

2.புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்? 

விடை : பல்லவர் கால கல்வெட்டுகள்

3.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? 

விடை : ஒடிசா

4.காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ? 

விடை : ஒக்கேனக்கல்

5. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

விடை : 2004

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 A little learning is a dangerous thing
🌷அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

🌹 Knowledge is power
🌹அறிவே ஆற்றல்.



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂


"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"


ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்  "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர்.

"இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை  உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ  நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.

தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்  மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா  அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க  ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.

இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.

இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.

அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ?
காரணம் உண்டு. 

அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.

சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

.🎯கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினார்

🎯குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக 1,000 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

🎯வடதமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

🎯வளாக நேர்காணலில் பி.இ. படிக்கும் 85% பேருக்கு வேலை: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல்

🎯தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் பட்டய பயிற்சியில் பதிய இணைய இணைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

🎯தமிழ்நாடு அரசு வெளியிட்ட சென்னை பல்கலை. தேடுதல்குழுவை திரும்ப பெற வேண்டும்: கவர்னர் மாளிகை உத்தரவால் மீண்டும் மோதல்

🎯தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை.

🎯தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை

🎯இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது: பிரதமர் மோடி

🎯ODI WC 2023 | இந்தியா வந்தனர் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

🎯Asian Games 2023 | குதிரையேற்றத்தில் 41 ஆண்டு வேட்கை - டிரஸ்ஸாஜ் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்!

🎯ODI WC 2023 | இலங்கை அணி அறிவிப்பு: ஹசரங்கா இல்லை

🎯உலகக் கோப்பை அணியில் அஸ்வின்? - புதிர் போடும் ரோகித் சர்மா



TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chennai water board will not accept cash for tax and charges from October 1

🎯Kalaignar hospital staff will be paid on September 26: T.N. Health Minister

🎯Water released from Poondi reservoir, much ahead of NE monsoon

🎯Karnataka told to release 3,000 cusecs of Cauvery water daily to Tamil Nadu till October 15

🎯Stalin reviews law and order situation in Tamil Nadu

🎯Governor asks government to withdraw gazette notification on Madras University V-C search panel

🎯Tamil Nadu CM Stalin releases Tourism Policy 2023

🎯G-20 diplomacy and a shifting world order

🎯No signals from Chandrayaan-3’s Vikram, Pragyan: ISRO

🎯U.S. calls for ‘full and fair investigation’ into Canada’s allegations against India

🎯Hangzhou Asian Games | A 41-year old medal drought ends in equestrian gold, riding on a quartet of youngsters

🎯New Zealand skipper Williamson targets World Cup return

🎯India shine in sailing: Neha bags silver, Ali bronze

🎯India vs Australia | Ashwin has got the class and the experience, says Rohit

🎯Hangzhou Asian Games | Biswas — postman by day, Esports player by night






🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

Monday, September 25, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (26-09-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 26.09.2023.    செவ்வாய்க் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  வாய்மை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்

பொருள்:

🍀🍀🍀🍀🍀

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இரத்தத் தட்டுகள் அல்லது திராம்போ சைட்டுகளின் வாழ்நாள் எவ்வளவு காலம்?


விடை : 8-10 நாட்கள்


2. இதய சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்?


விடை : 0.8 வினாடிகள்.


3. பறவைகள் பறக்க பயன்படும் விதி எது?


விடை : நியூட்டனின் மூன்றாம் விதி


4. ஒரு குதிரை திறனின் அளவு என்ன?


விடை : 746 வாட்


5. அணுக்கரு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை : ரூதர்போஃர்டு


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷A contented mind is a continual feet
🌷போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

🌹A friend in need is a friend indeed
🌹ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
நடப்பதெல்லாம் நன்மைக்கே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

.காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.


நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.


“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழகத்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


🎯கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 6605 கனஅடியாக அதிகரிப்பு..!!


🎯பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அதிமுக: மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


🎯தமிழகம் முழுவதும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: ரூ.7,000 கோடி உற்பத்தி இழப்பு


🎯காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செப். 28, 29-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு


🎯செப் 29 முதல் அக்.1 வரை வாஷிங்டனில் ‘உலக கலாச்சார விழா’: வாழும் கலை அமைப்பு தகவல்


🎯 பிரதமர் மோடி இன்று குஜராத் வருகை.


🎯 மேற்கு வங்கத்தில்40000 பேருக்கு டெங்கு.


🎯ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அபார அஸ்வின்!


🎯ODI WC 2023 | பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வர விசா வழங்கப்பட்டது!


🎯“தங்கமே.. தங்கமே..” - இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி


🎯ஆசிய விளையாட்டு போட்டி | துப்பாக்கி சுடுதல், மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


 🎯AIADMK pulls out of NDA, snaps ties with BJP in Tamil Nadu

🎯The charm of the Himalayas and the comfort of an international stadium 
PREMIUM

🎯Government rebuffs Moody’s Aadhaar views; says a billion Indians trust it.

🎯Canada updates travel advisory; asks its citizens in India to 'stay vigilant and exercise caution'

🎯Gaganyaan mission: ISRO completes key engine test.

🎯India vs Australia | Ashwin makes the ball talk just at the right time.

🎯Hangzhou Asian Games Day 2 | Shooting stars, women’s cricket team make India proud

🎯Asian Games: Roshibina Devi assures medal in Wushu; Bhanu Pratap progresses, Baliyan crashes out

🎯Pakistan-NZ warm-up game on Sept. 29 to be a closed affair

🎯Pakistani players issued Indian visa for World Cup travel: ICC




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

Sunday, September 24, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (25-09-2023)

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 25.09.2023.   திங்கள்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கேள்வி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

           செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்
.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.முன்வேதகால முக்கிய கடவுள் எது?

*விடை* : இந்திரன் மற்றும் அக்னி

2.ஐ.நா. சபையின் முதல் பொது செயலாளர் யார்?

*விடை* : திறிகுவே இலீ

3.UNESCO என்பது?

*விடை* : ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு

4.சிந்து சமவெளி நாகரிக காலம் ?

*விடை* : கி.மு.3300 முதல் கி.மு.1900 வரை என கருதப்படுகிறது.

5.UNICEF - என்பது?

*விடை* : ஐ.நா. குழந்தைகள் நல முன்னேற்ற நிதி நிறுவனம். (நியூயார்க்)


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 No honest man ever repented of his honesty.
🌹 பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.

🌷 No rains no gains
🌷 மாரி அல்லது காரியம் இல்லை.




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

உழைப்பின் பலன் இனிது
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

மங்கூ என்றொரு குரங்கு இருந்தது. நந்தவனத்தில் வசித்த மங்கூ கூட நாள் முழுவதும் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவி குதித்து விளையாடும். அதனிடம் இருந்த கெட்டப் பழக்கம் மற்ற மிருகங்களிடம் இருந்து உணவை பறித்துத் தின்பது தான். சரியான சோம்பேறி, மற்ற மிருகங்கள் சேமித்த உணவை பறித்துத் தின்று வந்தது. எல்லா மிருகங்களும் கோபப்பட்டன. இருப்பினும் எதுவும் செய்ய முடியவில்லை. யாராலும் அதை பிடிக்க முடியவில்லை.
    
    ஒரு நாள் டிங்கூ யானைத் தோட்டத்திலிருந்து வாழையும் மரத்தைப் பறித்தது. அதன் குழந்தைகளுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும் என்பதால் டிங்கூ அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தது. வழியில் அதைப் பார்த்த மங்கூ வாழைப்பழங்களை பறித்துத் தின்ன ஆரம்பித்தது. டிங்கூ மங்கூவிடம்,"என் குழந்தைகள் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. அவர்களுக்கும் சிறிது விட்டுவை என்றது. ஆனால் மங்கூ , எல்லா பழங்களையும் சாப்பிட்டு விட்டது
டிங்குகூ துயரத்துடன் அழுது கொண்டே சென்றது.

      இதேபோல் சிங்கி குருவியையும் தொல்லைப்படுத்தி வந்தது. மரத்தில் கூடு கட்டி தன் குழந்தைகளை வளர்த்த சிங்கி அவற்றுக்கு தானியத்தை எடுத்து வந்து வைத்து விட்டு செல்லும். மரக்கிளையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் மங்கூ, அந்த தானியங்களை எடுத்து சாப்பிட்டு விடும். பலமுறை சிங்கியின் குழந்தைகளுக்கு காயமும் ஏற்பட்டது.

    நந்தவனத்தில் இருந்த எல்லா மிருகங்களும் காட்டு ராஜா சிம்பூ சிங்கத்திடம் மங்கூவைப் பற்றி புகார் செய்ய எண்ணின.  சிம்பூவிடம் கூறியதும் சிங்கம்,"சரி, நான் ஏதாவது வழி செய்கிறேன்"என்றது.

     சிம்பூ தந்திரமாக மங்கூவைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி, திட்டத்தை எல்லா மிருகங்களுக்கும் கூறியது. எல்லா மிருகங்களும் சம்மதித்தன. சிம்பூ மங்கூவிடம்,"நாளை என் வீட்டில் பெரிய விருந்து; எல்லோரும் வருகிறார்கள். நீயும் வா" என்றது.

      மங்கூவும், 'நாளை நான் அதிக உணவை சாப்பிடுவேன் பிறகு சில நாள் உணவுக்கு அலைய வேண்டாம்' என்று எண்ணியது.

    எல்லா மிருகங்களும் மங்கூவிற்கு பாடம் புகட்ட தயாராகின.

     டிங்கூ  யானை மற்றும் இதர மிருகங்கள் சேர்ந்து ஆழமான பள்ளம் ஒன்றைத் தோண்டியது. பிறகு அதில் தண்ணீர் நிரப்பின. அதன் மேல் சிங்கி குருவி மற்றும் இதர மிருகங்கள் புல்லைப் போட்டு அங்கு பள்ளம் இருப்பது தெரியாதபடி மூடி வைத்தன.

    எல்லா மிருகங்களும் மாலை நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தன. மாலையில் மங்கூ விருந்து சாப்பிட வந்தது. எல்லா மிருகங்களும் அங்கு இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தது."நண்பர்கள் எல்லோரும் வந்து விட்டார்களா? நான் விருந்துக்கு தயார், உணவு எங்கே இருக்கிறது?"என்று சிங்கத்தை கேட்டது.

       "எல்லா மிருகங்களும் முன்பே வந்து சாப்பிட்டு விட்டன. உனக்கு எதிரிலுள்ள தோட்டத்தில் நிறைய உணவு இருக்கிறது. போய் சாப்பிடு"என்றது, சிங்கம்.

       'அப்படியா?' என்ற மங்கூ தோட்டத்தை நோக்கி சென்றது. சிறிது தூரம் சென்றதும் அதன் கால் புள் மற்றும் சேறில் மாட்டிக்கொண்டது. காலை வெளியே இழுக்க முயன்ற போது தடால் என்று தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்தது.

    மங்கூவிற்கு எதுவும் புரியவில்லை. வெளியே வர முயற்சி செய்தபோது மண், தண்ணீரில் விழுந்து சேறாகி அதில் சிக்கிக் கொண்டது மங்கூ. எல்லா மிருகங்களும் அங்கு கூடிவிட்டன. மங்கூ பள்ளத்தில் விழுந்ததைப் பார்த்து தங்கள் திட்டம் பலித்ததை எண்ணி சந்தோஷப்பட்டன.

    மங்கு அழுது கொண்டே, "என்னைப் பள்ளத்திலிருந்து வெளியே எடுங்கள் மிகவும் பசிக்கிறது"  என்றது.

  சிம்பூ சிங்கம் "மங்கூ நீ எல்லா மிருகங்களையும் வருத்தமடையச் செய்தாய் . எல்லோருடைய உணவையும் பறித்து சாப்பிட்டதால் அவை பட்டினியாக இருக்க நேர்ந்தது. அதனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டோம். நீ பசியோடு இருக்க வேண்டியதுதான். நாங்கள் யாரும் உனக்கு உதவ மாட்டோம்"என்றது.

     இரண்டு நாட்கள் மங்கூ பசியோடும் தாகத்தோடும் இருந்த போது மற்ற மிருகங்களின் கஷ்டம் புரிந்தது.

    சிம்பூ சிங்கத்தின் முன்னால் காதை பிடித்துக் கொண்டு இவ்வாறு சத்தியம் செய்தது. "இனிய மற்றவர்கள் உணவை திருட மாட்டேன்" என்று. உடனே மங்குவை வெளியே எடுத்தன மற்ற மிருகங்கள். அதன் பிறகு மங்கூ உழைத்து சாப்பிட ஆரம்பித்தது. உழைப்பின் பலன் இனிமையானது என்பதை அது உணர்ந்தது.

*நீதி* : உழைத்து வாழ வேண்டும்; பிறரை உதைத்து வாழக்கூடாது.

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 நெல்லை-சென்னை எழும்பூர், விஜயவாடா-சென்னை சென்ட்ரல் உட்பட 9 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம். பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

🎯 வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள். தமிழக அரசு ஆணை வெளியீடு.

🎯 தெற்கு ரயில்வேயில் அடுத்த ஆண்டு மார்சுக்குள் 35 மேம்பாலம் 110 சுரங்கப்பாதை  அமைக்க திட்டம்.

🎯 திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்.

🎯 அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

🎯 விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணைக் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறப்பு.

🎯 தமிழ் வளர்ச்சி துறையிடமிருந்து விடுவித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து தேவை என உலகத் தமிழர் பேரமைப்பு வலியுறுத்தல்.

🎯 நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்.

🎯 பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கிராமங்களில் ஊராட்சி மணி பிரத்தியோக அழைப்பு மையம் முதல்வர் மு க ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

🎯அரசு துறைகளில் மனுக்கள் தேக்கம்: கவனிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

🎯 சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி 

🎯 அக்டோபர் 1ஆம் தேதி ஒரு மணி நேர தூய்மை இயக்கம் மக்கள் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு.

🎯மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை: முதல்வர் பைரன் சிங் அறிவிப்பு

🎯 பூமியில் பகல் இரவு சமமாக இருக்கும் புகைப்படம் ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு.

🎯 ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவுக்கு 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்கள்.

🎯 6 சதங்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை.

🎯ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 399 ரன்கள் குவிப்பு

🎯 தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Aadhaar unreliable in 'hot, humid' India: rating agency.

🎯 Multiple entry, exit option in higher studies may not suit India: house panel.

🎯 Kerala government to decide soon on census to revise OBC list.

🎯 Rousing reception to Vande Bharat express in Trichy on inaugural run.

🎯 Good response to 'purattasi' tour of vaishnava temples in Trichy, Karur.

🎯 Water level in mettur dam stands at 37.520 feet.

🎯 Defence board discusses plan for second Vikrant- like carrier.

🎯 NASA first asteroid samples land on earth after release from spacecraft.

🎯 Aravind Arjun duo adds silver sheen to India's day in the water.

🎯Ramita upstages Mehuli for bronze.

🎯 Pooja rips through Bangladesh line- up.

🎯Gill, Shreyas tons, Surya Kumar blitz give India series.

🎯Bezzecchi regions with a perfect race; Martin,Quartararo complete podium.





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

Thursday, September 21, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (22-09-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நாள்: 22.09.2023         வெள்ளிக்கிழமை 
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
  🌸திருக்குறள்: அதிகாரம் : இனியவை கூறல்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

🌸 பொருள்:
🌹🌹🌹🌹🌹🌹
முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக்
 கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்
.

🌸 பொதுஅறிவு:
💜💜💜💜💜💜💜💜

1. மனிதனில் __________ உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன?

🌸 விடை : மூன்று ஜோடி

2. மின் விளக்குகளில் அடைக்கப்படும் வாயுக்கள்?

  🌸விடை : மந்த வாயுக்கள்

3. இந்திய நேரத்திற்கும் கிரீன்விச் நேரத்திற்கும் உள்ள வித்தியாசம்?

🌸விடை : + 5 1/2 மணி நேரம்.

4. கண்ணில் பிம்பம் விழும் பகுதி?

🌸விடை : விழித்திரை

5. 49 ஆவது சார்க் நாடுகளின் இலக்கிய பெருவிழா சமீபத்தில் எங்கு நடைபெற்றது?

விடை : ஆக்

🌸பழமொழிகள் (proverbs ):
🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆
1. Variety is the spice of life.
🌸  மாற்றம் என்பது மானிடத் தத்துவம்.
2. United we stand ; divided we fall.
🌸ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

🌸 இரண்டொழுக்கப் பண்பாடு
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இரண்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.
எனவே ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து வெற்றி பெறுவேன். பிறருக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்து கொள்வேன்.

🌸  நீதிக்கதை :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும்,
பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான்  உலகில் சிறந்தோங்கி
பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்
மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!
உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி..

இன்னும் ஐந்து பேரும்
தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:

 “உலகத்தில்
ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும்
மன நிறைவோடும் வாழ முடியுமோ,
அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும்
அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ *மனநிம்மதி, மன நிறைவு*…

 நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?

 விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :

 “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,

 பத்தாவது மனிதனைப் பார்த்து :

"நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..

சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,

அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;

என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!
துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ
அது கையில் கிடைத்த பின்னும்,

 இன்னும் எதுவுமே கிடைக்காத

அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!

 தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!
அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,

அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன்,

கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே
அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்
*பத்தாவது* மனிதனா..?

இல்லை
*பத்தாது* என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..

*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.*

இனிமையான எண்ணங்களுடன்
இவ்வுலகில் மகிழ்ச்சியுற்று வாழ
பேராசை என்பதை ஒழித்து
மனநிம்மதி என்ற
விலைமதிப்பற்ற செல்வம் பெற முயலுங்கள்

வாழ்க வளமுடன்

 இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆதரவு 214 ; எதிர்ப்பு 0.

🎯காவிரி நீர் விவகாரம் | கர்நாடகா - தமிழ்நாடு பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

🎯 கல்வி அலுவலர்களுடன் மீலாய்வுக் கூட்டம் அமைச்சர் பங்கேற்பு.

🎯நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

🎯6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

🎯11 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

🎯 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் வெற்றி. சென்னையில் இருந்து 8 மணி நேரத்தில் நெல்லைக்கு வந்தது. செப்டம்பர் 24 இல் சேவை தொடக்கம்.

🎯 இன்று முதல் நான்கு நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

🎯 வாக்காளர் சேர்ப்பு, புதுப்பிக்க ஆதார் கட்டாயம் அல்ல இந்திய தேர்தல் ஆணையம்.

🎯மத்தியப் பிரதேசத்தில் ஆதிசங்கரருக்கு 108 அடி உயர பிரம்மாண்ட சிலை - முதல்வர் சிவ்ராஜ் சிங் திறந்துவைத்தார்

🎯வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக சாலைப் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

🎯மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்: மத்திய அரசு அதிரடி

🎯“தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறி வருகிறது கனடா” - ட்ரூடோவுக்கு இந்தியா பதிலடி

🎯“உலகக் கோப்பை அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார்” - ராகுல் திராவிட்

🎯 இன்று தொடங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.

🎯 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனல், பயர்ன் மியூனிக் வெற்றி.

🎯 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய மகளிர்.

Today English news:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 Women's quota Bill clear in Rajya Sabha as all members vote in support.

🎯 Disha issue service amid Canada tussle.

🎯 Supreme court refuse to entervene en Cauvery water release order.


🎯 Tamil Nadu State transport corporation to operate special buses today and tomorrow.

🎯 The national skill training institute for women extends admission date to September 23rd.

🎯 Water level in mettur dam stands 38.44 feet

🎯 Centre has now admitted that NEET has 'zero' benefit, says chief minister MK Stalin.

🎯 New pamban bridge may miss its November deadline.

🎯InOBC pitch Rahul rests Congress. hopes

🎯 China, U.S. and India option at U.N's climate ambition Summit .

🎯 The Indian space research organisation hoping to wake up Vikram and Pragyan today.

🎯 India enters last 4 with better ranking. The women in blue pile on the runs against Malaysia in a 15 over game. before unrelenting rains puts and end to the quarterfinal.

🎯chhetri's late penalty conversion keeps India's hopes alive.

🎯 Belief is the only thing that matters says Bopanna

🎯 A golden opportunity for both India and Australia to try out their combinations before the world cup.


இனிய காலை வணக்கம் ....✍     
இரா. மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி ,கோவில்பட்டி,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .                                       

Wednesday, September 20, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (21-09-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 21/09/2023          வியாழக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: மக்கட் பேறு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.


🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
      
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்
   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவிப்பட உள்ளது?

விடை : மதுரை

2.பெரியாரை "தமிழ்நாட்டின் ரூசோ" என பாரட்டியவர் யார்?

விடை : சர்.ஏ. ராமசாமி முதலியார்.

3.இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை சக்தி அமைந்துள்ள இடம்?

விடை : செட்டிகுளம்

4.தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம்?

விடை : 1979

5.தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்?

விடை : வ.உ. சிதம்பரம் பிள்ளை




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 Fully filled pot does not spill
🌷 நிறைகுடம் தளும்பாது குறைகுடம் கூத்தாடும்

🌹 A single tree does not make on orchard.
🌹 தனி மரம் தோப்பாகாது.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

நம்பிக்கையை விடவே விடாதே :

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பதென்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும்.

மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் அவற்றை சங்கிலியில் இருந்து விடுவித்து கயிற்றில் கட்டி விடுவான். யானைகளும் இனி தப்பித்து என்னாகப் போகிறது என அங்கேயே நின்றுவிடும்.

ஒருமுறை, தன் மகனுடன் வேட்டைக்கு வந்த ஒரு அரசன், ""குட்டி யானைகளை சங்கிலியிலும், பெரிய யானைகளைக் கயிற்றிலும் பிணைத்துள்ளாயே! பெரிய யானைகள் கயிற்றை எளிதாக அறுத்து விடுமே!'' என்று வேடனிடம் கேட்டான்.

""மன்னா! கயிற்றில் பிணைக்கப்பட்ட இந்த யானைகள், குட்டியாக இருந்த போது சங்கிலியில் தான் பிணைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு இவ்விடம் பழகி விட்டதால், பெரிதான பிறகும், வேறிடத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என நம்பிக்கையை இழந்து விட்டன. எனவே, கயிற்றில் பிணைத்துள்ளேன்,'' என்றான்.

இந்த யானைகளைப் போல், நம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது. இலக்கை எட்ட ஆரம்பத்தில் என்ன முயற்சி எடுத்தோமோ, அதை விட அதிக முயற்சி எடுக்க வேண்டும்.


    இன்றைய முக்கிய செய்திகள்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🎯பட்டியலின மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதும் ஒருவித வன்கொடுமையே: ஐகோர்ட்

    🎯நெல்லை - சென்னை இடையே செப்.24-ல் ‘வந்தே பாரத் ரயில்’ சேவை தொடக்கம்

    🎯சென்னை பல்கலை. துணை வேந்தர் தேடுதல் குழுவில் இருந்து யுஜிசி பிரதிநிதியை நீக்கியது தமிழக அரசு

    🎯அக்டோபர் 9-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: சபாநாயகர் அப்பாவு தகவல்.

    🎯வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று வியாழக்கிழமை கனமழை வாய்ப்பு.

    🎯மக்களவையில் நிறைவேறியது மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா!

    🎯ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் சேரலாம்..! நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு.

    🎯 முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பிய தலைமை ஆசிரியர்கள்.

    🎯 அக்டோபர் 6 -ந்தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை கரூரில் இரண்டாவது புத்தகத் திருவிழா. மாவட்ட ஆட்சியர் தகவல்.

    🎯2024 குடியரசு தினவிழாவில் பங்கேற்க ஜோபைடனுக்கு அழைப்பு

    🎯உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி இன்று வெளியீடு

    🎯ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்க ஸ்ரேயாஸ் தயார்

    🎯உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணியில் சதாப் கானுக்கு கல்தா? ஷாகின் ஷா அப்ரிடி துணை கேப்டனாகிறார்

    🎯அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலக கோப்பை...


    TODAY'S ENGLISH NEWS: 
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    🎯 Loksabha passes historic womens reservation bill.

    🎯 India issues a tit- for- tat travel advisory for Canada.

    🎯 Rejected women applications head to e- seva centres to file fresh applications.

    🎯 Tamil Nadu to resume online sale of rivers sand.

    🎯 Ask Cauvery water management authority to reconsider Cauvery water release order Karnataka to Supreme court.

    🎯 Study throws light on how gravitational instabilities affect evaluation of galaxies.


    🎯 Ignoring governor's notification, government. notifies 3- member vice chancellor search panel.

    🎯 Us considering Modi's invite to biden to be chief guest at republic Day, says envoy.

    🎯 NEET- PG, 2023 cut-off reduced to 'zero' percentile 

    🎯Champions League | Bayern beat Man United 4-3; Arsenal thrash PSV

    🎯Asian Games | Hockey captain Harmanpreet, boxer Lovlina to lead Indian contingent at opening ceremony 

    🎯Mohammed Siraj back to No. 1 in ICC ODI bowling rankings

    🎯Tim Southee to undergo thumb surgery, World Cup decision next week





    இனிய காலை வணக்கம் ....✍       
               
    இரா . மணிகண்டன்  
    முதுகலை தமிழ் ஆசிரியர்
    அரசு  மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி 
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
     அலைபேசி எண் : 9789334642.

    Tuesday, September 19, 2023

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (20-09-2023)

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

    🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
    நாள் : 20.09. 2023.      புதன்கிழமை .
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      திருக்குறள்: அதிகாரம்:   ஊக்கமுடைமை
    🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத்தனைய உயர்வு                                                                                                                                                                                                                                 🌸பொருள்:
    🌹🌼🍀🌺🏵️
    நீர்ப்பூக்களின் தாளின் நிலம் அவை நின்ற நீரின் அளவினவாகும். மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
         
    🌸 பொதுஅறிவு:
    🌹🌼🍀🌺🏵️☘️🌷💐

    1. காற்றாலை அதிகமாக பயன்படுத்தும் கண்டம்?

    விடை  : ஐரோப்பா

    2. புவியிலுள்ள மொத்த நீரில் நன்னீரின் அளவு?

    விடை : 3 சதவிகிதம்.

    3. கதிரியக்கத்தின் போது வெளிப்படும் கதிர்கள்................. எனப்படும்?

    விடை  : பெக்கொரல் கதிர்கள்.

    4.   மண்புழு எதன் உதவியால் இடப்பெயர்ச்சி செய்கிறது?

    விடை   : சீட்டாக்கள்.

    5 .   பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?

    விடை    :  கைட்டின்

    பழமொழிகள் (proverbs) :
    ❤️❤️💙💛💜🧡❤️❤️❤️
    🌸 It is no use crying over spilt milk

    🌸 சிந்திய பாலை எண்ணி பயனில்லை


     🌸    It takes two to make quarrel

    🌸    இரு கை தட்டினால் தான் ஓசை



    இரண்டொழுக்கப் பண்பாடு:
    🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
    🌸 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்பதற்கிணங்க காலத்தின் அருமையை நன்கு உணர்வேன்.                                                       🌸 எனவே எப்பொழுதும் குறித்த காலத்தில் என் வேலைகளை முடிக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன் .



     நீதிக்கதை:
    **************
    ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

    ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

    கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

    கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.



    கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

    நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

    நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

    அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

    தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

    நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

    அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

    பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


    இன்றைய முக்கிய செய்திகள் :
    ❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤ 
    .
    🎯 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகம். ஒருமனதாக நிறைவேற்ற பிரதமர் வலியுறுத்தல்.

    🎯 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029 இல் அமலாகும்.

    🎯 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றம் 'அரசியல் சாசன அவை' என அழைக்கப்படும். பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு.

    🎯 புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்தியாவின் நாடாளுமன்றம் என மக்களவை அறிவிக்கை வெளியீடு.

    🎯 அடுத்த ஆண்டுக்கான நீட், ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிப்பு.

    🎯 க்யூட் நெட் நுழைவு தேர்வுகள் தேதி அறிவிப்பு

    🎯1-5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவ தேர்வு தேதிகள் மாற்றம்.

    🎯 கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் செப்டம்பர் 28 முதல் உண்ணாவிரதம் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு.

    🎯 அரசுத் துறையை சார்ந்த வேலை வாய்ப்பு, உயர் கல்வி குறித்த வெப்பினார் தொடர். விஐடி சென்னை வளாகம் வழங்கும் 'இந்து தமிழ் திசை- தேசம் காக்கும் நேசப்பணிகள்'. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி வாரம் தோறும் இரு நாட்கள்  நடைபெறுகிறது

    🎯 திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர்- 22 இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் .

    🎯 காவிரியில் நீர் அளிக்க ஆணையத்திடம் வலியுறுத்தல். தமிழக எம்பிக்கள் குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி.

    🎯 கவிஞர் தமிழ் ஒளிக்கு தஞ்சை பல்கலையில் சிலை. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

    🎯 தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

    🎯 செப்டம்பர் 27 திருச்சி மாவட்டத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஈவேரா பிறந்த நாளை ஒட்டி மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி : கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு.

    🎯 திருச்சியில் செப்டம்பர் 23 இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

    🎯 அன்னதானத்தின் தரத்தை உறுதி செய்து பதிவேற்ற செயலி அமைச்சர் பி கே சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    🎯 சென்னை பல்கலை க்கழக துணைவேந்தர் நியமனம் ஆளுநரின் தெரிவுப் பட்டியலை நிராகரித்தது தமிழக அரசு.

    🎯புவி வட்ட பாதையில் இருந்து பிரிந்தது ஆதித்யா எல்-1

    🎯 பழனி கோயிலில் அக்டோபர் 1 முதல் கைபேசி, புகைப்பட கருவிகளுக்கு தடை.

    🎯 தமிழகத்தில் ஆறு நாட்கள் மிதமான மழை பெய்யும்.

    🎯 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டிகள் என்று தொடக்கம்.

    🎯 ஆசிய விளையாட்டு போட்டி கால்பந்தில் இந்திய அணி தோல்வி 1-5 என்ற கணக்கில் சீனவிடம் விழுந்தது.

    🎯 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்திய வாலிபால் அணி வெற்றி.

    🎯 நிரந்தர பயிற்சியாளர், உபகரணங்கள் இல்லை 15 ரன்களுக்கு சுருண்டது மங்கோலியா அணி.

    🎯 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின்.





    TODAY'S ENGLISH NEWS: 
    ❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤ 
    🎯Government introduces Understanding the significance of the Parliament ‘special session’  Explain

    women’s reservation bill in Loksabha ; PM Modi calls for consensus vote.

    🎯Census a must for women’s reservation Bill to become reality.

    🎯In their new House, MPs explore changes, maintain combative spirit.

    🎯Understanding the significance of the Parliament ‘special session’  Explained 

    🎯 At new house Modi calls for fresh chapter.

    🎯2nd of Chennai Unlimited series today, discussions to explore city and its infrastructure

    🎯 water level in mettur dam stands at 39.54 feet.

    🎯 Administrative sanction awaited for srirangam bus terminus project..

    🎯 Trichy government hospital prepares to tackle dengue.

    🎯 Continue release of 5000 cusecs to Tamil Nadu, Kaveri water management authority direct Karnataka.

    🎯 No mutations found in tested Nipha samples, says Minister.

    🎯 Centre floats new science awards.

    🎯 World health organisation releases report on global impact of high blood pressure.

    🎯 Indian hockey teams will be vying for something more precious than gold.

    🎯 Ashwin included in squad for ODI series against Australia.

    🎯 Compound archers Brighten India's medal prospects.

    🌸இனிய காலை வணக்கம் ....✍       
      ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
    இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
    அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி 
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
    அலைபேசி எண்: 9789334642 . 
                                          


    Monday, September 18, 2023

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (19-09-2023)

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

    💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
    நாள் : 19.09. 2023.       செவ்வாய்க்கிழமை
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      திருக்குறள்:அதிகாரம்:அறிவுடைமை.
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு . 
                                                                                                                                                                                                                                     
    🌸பொருள்:
    🍀🍀🍀🍀🍀

    எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
       
    🌸 பொதுஅறிவு:
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?

    விடை  :  அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)

     2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?

    விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)                 
    3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?

     விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)

    4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?

     விடை : புலாண்ட் தர்வாஸா

    5.  இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?

    விடை    : பரம்வீர் சக்ரா.

    பழமொழிகள் (proverbs) :
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

     🌸Jack of all trade is master of none

    🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

    🌸 Justice delayed is justice denied

    🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்






     இரண்டொழுக்கப் பண்பாடு:
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
     🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்
    .



     நீதிக்கதை:
    🍁🍁🍁🍁🍁🍁

    ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
    ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
    அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
    பையன் சொன்னான்”தங்கம்”
    அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
    பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
    ”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
    இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
    வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...





    இன்றைய முக்கிய செய்திகள்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🎯 நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. இன்று மசோதா தாக்கல் ஆக வாய்ப்பு.

    🎯எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்.

    🎯விவசாயிகளுக்கான கடன், காப்பீட்டுத் திட்டங்கள் - மத்திய அரசு இன்று தொடங்கி வைக்கிறது

    🎯 சின்ன வெங்காய சாகுபடிகள் அசத்தும் பெரம்பலூர். ஆண்டுக்கு 80,000 மெட்ரிக் டன் மகசூல். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி.

    🎯 வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

    🎯 வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

    🎯 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிப்பு‌ விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இ சேவை மையங்களில் ஏற்பாடு. 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை.

    🎯 அஞ்சல் சேவை குறைதீர் முகாம் புகார் அனுப்ப செப்டம்பர் 29 கடைசி நாள்.

    🎯 அசோலா வளர்க்க சிறுகமணியில் செப்டம்பர் 21 இல் இலவச பயிற்சி.

    🎯 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 29 இல் சென்னையில் பேரணி. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

    🎯 அறிவியல் தரவுகள் சேகரிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் இஸ்ரோ தகவல்.

    🎯6 முதல் 10 வகுப்புகளுக்கு இன்று முதல் காலாண்டுத்தேர்வு. பொது வினாத்தாள் நடைமுறை. இந்தத் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை .

    🎯 முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் பட்டியல் அனுப்ப உத்தரவு.

    🎯 கிராம ஊராட்சி செயலர்கள் நியமன விதிமுறைகள் வெளியீடு.

    🎯 விமானிகள் இல்லாததால் 5 விமானங்கள் திடீர்  ரத்து பயணிகள் கடும் அவதி.

    🎯 தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு.

    🎯 ஒரே நாளில் 9 இடங்களுக்கு சுற்றுலா 300 ரூபாய் போதும்... மூணாறை சுத்தி பார்க்கலாம். அரசு பஸ்ஸில் ஜாலி ட்ரிப்.

    🎯 கோழிக்கோட்டில் நிபா பரவல் எதிரொலி. பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்.

    🎯 சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பையை வெல்ல இந்தியா தயார் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

    🎯 மெக்சிகோ ஓபன் டென்னிஸ்.2-வது சொத்தில் லெய்லா.

    🎯 கால்பந்து களத்தில் இன்று இந்தியா-சீனா மோதல்.








    TODAY'S ENGLISH NEWS: 
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    🎯Union Cabinet meets amid buzz over Women’s Reservation Bill

    🎯Today in Politics: Parliament moves house, makes room for women’s quota Bill

    🎯Aditya-L1 embarks on 110-day journey to L1 point.

    🎯Growing faith of people in Parliament, its biggest achievement, says PM Modi, as MPs bid farewell to old Parliament building.

    🎯Maneka Gandhi, Manmohan Singh, Shibu Soren to speak at Central Hall function before Parliament shifts to new digs.

    🎯Tamil Nadu delegation to submit representation on Cauvery on September 18.

    🎯T3 terminal at Chennai airport to be pulled down next month.

    🎯Canada investigates Indian government link to killing of Khalistani activist, expels Indian diplomat

    🎯Ravichandran Ashwin named in India's squad for ODI series against Australia.

    🎯Mumbai City FC lose 0-2 to Nassaji Mazandaran of Iran in ACL

    🎯Bopanna eyes captain’s role in the future as he exits the Davis Cup scene.










    🌸இனிய காலை வணக்கம் ....✍     
             
    இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
    அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி 
    திருச்சி மாவட்டம் - 621305
    அலைபேசி எண் : 9789334642.
                                       


    தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

      தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...