Wednesday, December 7, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (08-12-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 08.12.2022.    வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?

*விடை* : கோமல் சுவாமிநாதன்

2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?

*விடை* : ஒட்டக்கூத்தர்

3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?

*விடை* : அசலாம்பிகையார்

4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?

*விடை* : தாயுமாணவர்

5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?

*விடை* : அயோத்தி தாசர்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 All covt, all loss
🌹பேராசை பெரு நஷ்டம்

🌷 Art is long and life is short
🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

கோடாரி உத்தி


மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.

நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கிடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

🎯வனப்பகுதி மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு ரூ.2,000 கோடி சிறப்பு நிதி தேவை: மாநிலங்களவையில் கனிமொழி சோமு கோரிக்கை

🎯“உலகின் மிக அழகிய மாநகராக டெல்லியை மாற்றுவோம்” - வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி

🎯 உலக சாம்பியன்ஷிப் வெள்ளி வென்ற மீராபாய் சானு

🎯வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று முதல் 3 நாள் மழை கொட்டும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

🎯 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

🎯வட தமிழகம் நோக்கி வரும் மாண்டஸ் புயல் - புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் எச்சரிக்கை!!

🎯 உலகில் அதிகாரம் மிக்க பெண் பட்டியலில் நிர்மலா சீதாராமன்

🎯 பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிவிப்பு

🎯புதிய மாவட்டத்தில் முதன்முறையாக ‘விசிட்’; தென்காசிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை: 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

🎯அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பு துவக்கம்: நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதன்முறை!

🎯குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் அல் சிசி - நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் தகவல்

🎯இந்தாண்டின் சிறந்த மனிதர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: டைம் இதழ் தேர்வு

🎯5 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்: ரோகித் போராட்டம் வீண்

🎯உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் சானு

🎯உலக கோப்பை கால்பந்து 2022: சுவிசை சுருட்டிய போர்ச்சுகல்: 21 வயது ராமோஸ் ஹாட்ரிக் சாதனை

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯UGC forms panel to work on textbooks in Indian languages

🎯Jallikattu hearing | Will be dangerous if court makes impression based on photographs, says Supreme Court

🎯Clean-up plank pays off, AAP wins landfill wards

🎯Delhi has shown that polls can be won by delivering on public services: CM

🎯Cyclone ‘Mandous’ brewing over the Bay likely to impact several parts of Tamil Nadu

🎯Put on hold the decision to withdraw minority scholarship for students of classes 1-8: Stalin to PM

🎯Central govt. to invest ₹ 2,000 cr to expand Coimbatore airport: Chamber

🎯Dropping Ronaldo purely 'strategic' says Santos

🎯Easwaran scores his second successive ton, Pujara hits fifty as India A reach 324/5 On Day 2

🎯India vs Bangladesh, 2nd ODI | Mehidy ton lifts Bangladesh to 271-7 against India

🎯Eden Hazard retires from international football after Belgium’s World Cup exit





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...