Monday, December 5, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (06-12-2022)

                           பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 06.12. 2022.       செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்:.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறைஎன்று வைக்கப் படும்.
                                                                                                                                                                                                                               
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
       
         நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.

   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.ஒசோன் படலம்’ எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது ?

 விடை :புறஊதாக் கதிர்வீச்சு

2.புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு ?
 
விடை :80 சதவீதம்

3.மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் ? 

விடை: கீழாநெல்லி

4.தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?

விடை: 14.01.1969

5.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?

விடை : ஃபின்லாந்து


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌹There is no medicine for fear
🌹அச்சத்திற்கு மருந்தில்லை.

🌷No man can be a good ruler unless he has first been ruled
🌷அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது.


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
முயலின் தன்னம்பிக்கை
--------------------------------------------

ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது..

அதற்கு காரணம்?!!!.

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்....!!.


சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது.
எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.

இறுதியாக....
.
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்
.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவிகுதித்ததை முயல் பார்த்தது .

உடனே முயல் சிந்தித்தது...

அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??

என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கை கொண்டால் நாமும் வாழலாம் என்று மனமாற்றம் கொண்டது .....
“தற்கொலை செய்து கொள்வதற்கும் வலிமையான மனம் வேண்டும்" என உணர்ந்தது

அவ்வளவு வலிமையான மனமிருக்கும் நாம் ஏன் ?சாகனும்
வாழ்ந்துதான் பார்ப்போமென்று ..”காட்டுக்குள் மீண்டும் ஓடி ஒளிந்தது".


கதை சொல்லும் நீதி மரணத்தை தேடி நீ ஓடாதே !மரணம் உன்னை தேடும் வரை வாழ்ந்துவிடு ! மரணமே வந்தாலும் எதிர்க்க துணிந்து விடு !



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் மீண்டும் தேர்வு.

🎯ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக ராஜிவ் ரஞ்சன் தேர்வு.

🎯ஜி 20 மாநாடு; பிரதமர் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் துவங்கியது.

🎯ஒன்றிய அரசுப் பணியில் 27% இடஒதுக்கீடு இருந்தும் ஓபிசி-யில் 20% ஏன்?... பணியாளர் துறை ஆண்டறிக்கையில் தகவல்

🎯ஆர்வம் காட்டும் மக்கள்!: தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 54.55 லட்சம் ஆதார் எண் இணைப்பு..!!

🎯பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை உருவாக்கிய தமிழர்கள்: தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவித்த கத்தார் அரசு..!!

🎯நான்காவது முறையாக வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

🎯வானிலை முன்னறிவிப்பு: டிச.8-ல் தமிழகத்தின் சில இடங்களுக்கு ரெட் அலர்ட்

🎯ENG vs PAK | தகர்க்கப்பட்ட கணிப்பு - முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 74 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து

🎯200 மில்லியன் யூரோ ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின் Al-Nassr கிளப்பில் ரொனால்டோ இணைந்ததாக தகவல்









TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Baruch re-elected as National Conference Party President.

🎯Rajiv Ranjan elected as United Janata Dal Party President.

🎯G20 Conference; All party meeting started under the chairmanship of the Prime Minister.

🎯In spite of 27% reservation in united govt jobs why 20% in OBC?...Information in personnel department annual report

🎯Interested People!: 54.55 Lakhs Aadhaar Number Linked with Electricity Connection Number across Tamil Nadu in one week..!!

🎯Tamils created theme song for FIFA football tournament: Qatar government honored by airing it on national television..!!

🎯Viranam lake filled for fourth time: Farmers happy

🎯Weather Forecast: Red Alert for some places in Tamil Nadu on Dec.8

🎯ENG vs PAK | Prediction Shattered - England beat Pakistan by 74 runs in first Test

🎯200 million euro deal: Ronaldo reportedly joins Saudi Arabia's Al-Nassr club














🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
                                   


No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...