பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 07.12. 2022. புதன்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்:அதிகாரம்: நட்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
முகம் மட்டும் மலரும் படியாக நட்புச் செய்வது நட்பன்று நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.
🌸 பொதுஅறிவு:
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
விடை:ஈரல்
2.சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?
விடை : சோடியம் குளோரைடு
3.தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ?
விடை : ராஜ்பவன்
4.நீரின் ஒளிவிலகல் எண்
விடை: 1.33
5.காசநோய்க்கான பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தை பிறந்த எத்தனை மாதங்களுக்குள் போடப்பட வேண்டும்?
விடை : 1 மாதத்திற்குள்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹There is no medicine for fear
🌹அச்சத்திற்கு மருந்தில்லை.
🌷No man can be a good ruler unless he has first been ruled
🌷அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
எதிர்பாரத விஷயங்களை எதிர்கொள்
ஒரு காட்டுக்குள்ள இரண்டு அணில்கள் நண்பர்களாக வாழ்ந்து வந்துச்சாம், ஒன்னு பேரு புத்தி, இன்னொன்னு பேரு மத்தி, புத்தி எப்போதும் கடவுள் பக்தியோட இருப்பானாம், மத்தி அதுக்கு அப்படியே எதிர்மறையான எண்ணம் உள்ளவன், அதாங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.
எப்போதும் புத்தி கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டே இருப்பான், எதாவது நன்மை நடத்தாலும் தீமை நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே-ன்னு கடவுளுக்கு நன்றி சொல்வானாம்,
எதோ ஒரு நன்மை நமக்கு இருக்குன்னு சொல்லிட்டு தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டு போய்விடுவானாம்,
நம்மையும் மீறி ஏதோன்னு நடக்குத்துன்னு புத்தி எப்போதும் நம்புவான், அதை பார்த்து மத்தி கேலி பண்ணி ஏளனமாய் சிரிப்பானாம்.
உன்னை மீறி வாழ்க்கையில என்னடா நடக்கப்போவுது, நீ என்ன நினைக்கிறியோ அதுதான் வாழக்கையிலும் நடக்கும்-ன்னு மத்தி சொல்லிகிட்டே இருப்பானாம்.
ஒரு நாள் ரெண்டுபேரும் ஒரு அழகான காட்டுக்குள்ள பழங்களை பறித்து தின்ன போனார்களாம், இங்கேயும் அங்கேயும் ஓடியாடி அந்த மரத்துல விளையாடி கொண்டிருந்தார்களாம், எதிர்பாராத விதமா புத்தி கீழே விழுந்துவிட்டான், முதுகில் பலத்த அடி, சின்னதா ஒரு காயமும் கூட, வலி தாங்காம முதுகுல தேய்ச்சுகிட்டு, எதோ ஒரு நல்லதுக்கு தான் நாம கீழே விழுந்துட்டோம், நல்லவேளை நமக்கு பெருசா எதுவும் அடி படலை... எல்லாம் நமைக்கே-ன்னு சொல்லிட்டு அடிபட்ட இடத்துல தேய்த்து கொண்டு-டிருந்தான், நன்றி கடவுளே தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சுன்னு சொல்லிட்டு மேல பார்த்தானாம்......
புத்தி விழுந்ததை பார்த்து மத்தி கெக்கே.... கெக்கே ன்னு சிரித்து கொண்டு ஏளனமாய் கேலி செய்தானாம் , நீ ஒழுங்கா மரத்தை பிடிக்காம கவனக்குறைவா விழுந்ததுக்கு ஏன்டா கடவுளுக்கு நன்றி சொல்றே.... னுக்கு கேலி செய்தானாம்......
டேய் மத்தி நான் கீழே விழுந்தவுடன் செத்து போய் இருக்கலாம், ஆனா சின்னதா அடிபட்டத்தோட தப்பிச்சுகிட்டேன், இதிலிருந்து நம்மள சுத்தி எது நடக்குதோ எல்லாம் நன்மைக்கே, நம்மளையும் மீறி ஏதோ நம்மளை இயக்குதுன்னு நான் முழுமையா நம்புறேன்.... இதைவிட சிறந்த உதாரணம் நான் உனக்கு காட்டமுடியாதுன்னு சொல்லிட்டு மத்தியை மேல நிமிந்து பார்க்குது..... அவோலோதான்.... ஒரு வினாடி தலையே சுத்திருச்சு.....
மத்தி அணிலோட பக்கத்துல ஆவோலை பெரிய பாம்பு வாயை ஆ...ன்னு பிடிக்க ஆயத்தமா இருக்கு... டேய் மத்தி மத்தி கிழே வாடா ன்னு கத்துறதுக்குள்ள லபக்குன்னு அந்த பாம்பு மத்தியை முழுங்கிடுச்சு....... ஒரு நிமிடத்துக்குள்ள எல்லாம் மாயமாய் நடந்து முடிந்தது,
அதை பார்த்த புத்திக்கு கால் எல்லாம் வெட வெட-ன்னு ஆட ஆரம்பிச்சுடுது..... என் நண்பன் என் கண் முன்னாடி இப்படி போய்ட்டேனே....ன்னு பயங்கரமா அழுக ஆரம்பிச்து புத்தி.... இவோல பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொன்னான்.
நம்மை சுற்றி நடக்குற எல்லா இன்ப துன்பங்களுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும், எல்லாம் நமைக்கே சொல்லிட்டு மத்தியை நினைத்து சோகத்துடன் காட்டுக்குள் சென்று விட்டது.
இதுபோல தான் நம்ம வாழக்கையும், திட்டமிடல் எப்போதும் இருக்கணும், அதே போல ரொம்ப கவனமாகவும் இருக்கணும், அதையும் மீறி ஏதோ ஒன்னு நம்மளை இயக்குது, எப்போவும் முன்னெச்செரிக்கையா இருக்கணும்... எதிர்பாராத விஷயங்களை கண்டிப்பா நாம எதிர்கொண்டுதான் ஆகணும்.
இப்படி நடந்து போச்சேன்னு உட்கார்ந்து வருத்தபடுவதை விட தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுன்னு எல்லாம் நன்மைக்கென்னு நமபிக்கையோட நகர்தல் நலம்.
எதிர்பாரத விஷயங்களை எதிர்கொண்டு வாழ்ந்துதான் பார்ப்போமே......
வளையும் தன்மையுள்ள ஒரு மரம் புயலில் சிக்கினாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. அதேபோல், உங்களை மீறி சில மாற்றங்கள் நடக்கும்போது உங்களாலும் அதற்கு “வளைந்து” கொடுக்க கற்றுக்கொள்ள முடியும்.
எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே கெட்டதாக இருக்கும் என்று சொல்லமுடியாது.
நாம் நினைக்கும் விதத்தில்தான் நம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனால், அப்படி நடக்கவே நடக்காது.
“மன உறுதியோடு இருக்குறது நம்ம கையிலதான் இருக்கு. இப்போ இருக்குற சூழ்நிலைமையில என்ன நல்ல விஷயங்கள் இருக்குதுனு பாருங்க”
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி பயணம்: மதுரையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார்
🎯 என்சிசி தேசிய விருது பெற்ற சென்னை மாணவருக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு
🎯 பிளஸ் டூ மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட புதிய செயல் திட்டங்கள் என பள்ளிக் கல்வித்துறை தகவல்
🎯 நேரடி பட்டதாரிகளையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
🎯சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு
🎯அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மலரஞ்சலி
🎯பனிமூட்டம் காரணமாக காலதாமதத்தை தவிர்க்க ரயிலின் வேகத்தைக் கூட்டும் இந்திய ரயில்வே
🎯ஆசிரியர் நியமன நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
🎯ரெட் அலர்ட்: தமிழகத்தில் டிச.9-ல் பரவலாக அதி கனமழைக்கு வாய்ப்பு
🎯ஒற்றை சாளர இணையதள பிரச்சினை: மனை, கட்டிடங்களுக்கு டிடிசிபி அனுமதி பெறுவதில் சிக்கல்
🎯 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம் 16 மசோதா கலை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
🎯 ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கிலோமீட்டர் வேகம் அதிகரிக்க முடிவு
🎯FIFA WC 2022 | போர்ச்சுகல் அணியின் புதிய ஹீரோ - 21 வயது வீரரின் ஹாட்ரிக் கோல் மழையால் காலிறுதிக்கு முன்னேற்றம்
🎯 செஸ் -ஆதித்யா மிட்டல் புதிய கிரான் மாஸ்டர்
🎯உலகக்கோப்பை கால்பந்து 2022: சுவிட்சர்லாந்து அணியை 1-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல் அணி
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Governor, CM appeal people to contribute to Armed Forces Flag Day Fund
🎯Online OPD registration resumes at AIIMS
🎯Final turnout in Gujarat Assembly polls stands at 64.33%
🎯Winter Session loaded with 25 Bills, no time for debate, says Opposition
🎯UPSC Civil Services Mains Results 2022 declared on December 6
🎯Cyclonic storm may bring heavy rain in north T.N. tomorrow
🎯T.N. government to receive individual representations from 10,000 contract nurses on pay increase
🎯Tamil Nadu ranks 27th in the country in providing quality education, laments Madras High court.
🎯Shall we dance? Brazil cop flak, praise for World Cup shenanigans
🎯FIFA World Cup 2022 | Ronaldo eyes quarters as Morocco dares to dream
🎯IND vs BAN, 1st ODI | Miraj and Mustafizur’s 51-run final wicket stand helps Bangladesh edge out India by 1 wicket
🎯IOC warns Afghanistan over women's sports and Olympics
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment