பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 13/12/2022 செவ்வாய்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் ளெல்லாம் உளன்*
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?
விடை: அக்னி
2. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?
விடை: கோயம்புத்தூர்
3. ஜனநாயகம் என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : ஆபிரகாம் லிங்கன்
4. பரிணாமக் கோட்பாட்டின் தந்தை யார்?
விடை : சார்லஸ் டார்வின்
5. மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
விடை : 1761
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷Whatever you do , do it properly
🌷 செய்வதைத் திருந்தச் செய்
🌹 Alternatively known as a drop unknown is an ocean
🌹 கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 வாய்மையும் தூய்மையும் வாழ்வின் அணிகலன்கள் என்பதை அறிவேன்
🌷 வாழ்நாளில் தனி ஒழுக்கத்திலும் புற ஒழுக்கத்திலும் நேர்மையோடும் உண்மையோடும் என்றென்றும் வாழ்வேன்.
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁
காலம் பொன் போன்றது.*
🍁🍁🍁🍁🍁🍁
👨ராமு, 👦சோமு இருவரின் வீடுகளும் அருகில் உள்ளது. இருவரும் நண்பர்கள், ஒரே பள்ளியில் கல்வி பயில்கின்றனர். ராமு தினமும் பள்ளியில் கற்ற கல்வியை வீட்டிலும் படிப்பவன், ஆனால் சோமு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் படிக்க விருப்பமில்லாமல் விளையாடுவான். பள்ளித் தேர்வு நாள் வருவதற்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராமு சோமுவிடம் "சோமு தேர்வு நாள் வருவதற்கு சில நாட்களே உள்ளது , அதனால் தேர்விற்கு படிக்கலாம்" என்று கூற, அதற்கு சோமு " நான் விளையாடச் செல்கிறேன் பின்பு படித்துக் கொள்கிறேன்" என்று படிப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தான். காலம் கழிந்தது தேர்வு நாள் மறுநாள் என்றானது. ராமு காலையிலிருந்து படிக்க ஆரம்பித்தான். சோமு தேர்வை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த ⚡இடி இடித்தது, 💨💨காற்று வீசியது, ⛈️மழை வரப் போகிறது என்பதை உணர்ந்து ராமு சோமுவிடம் " ராமு மழை வரப் போகிறது போலுள்ளது, மழை பெய்தால் 🌌🌒இரவில் 💡மின்சாரம் தடையாக வாய்ப்பு உள்ளது, எனவே விளையாடாமல் படிக்க வா சோமு" என்று கூற, சோமுவோ "⛈️மழை ஒன்றும் வராது "என்று கூறி விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த காற்றுடன் ⛈️மழை பெய்ய இரவு நேரத்தில் 💡மின்சாரம் தடையானது. அப்போது தான் சோமு "நான் படிப்பதற்கு காலம் தாழ்த்தியது தவறு, ராமுவைப்போல் தினமும் படித்திருந்தால் நாளை தேர்வில் தேர்ச்சி பெறுமளவிற்காவது படித்திருந்திருக்கலாம், நான் நாளை தேர்வில் எப்படி படிக்காமல் தேர்ச்சி பெறுவது?, என்னால் படிக்க இயலவில்லையே!" என்று அழுது வருந்தினான். ராமு "அழாதே சோமு மெழுகுவர்த்தி ஏற்றி படி நானும் நான் கற்றதை உனக்கு கற்பிக்கிறேன்" என்று சோமுவிடம் கூறி ராமு படிப்பதற்கு உதவி செய்தான். மறுநாள் காலையில் இருவரும் பள்ளியில் தேர்வு எழுதினார்கள். பின் வீடுதிரும்பும் வழியில் ராமு "நான் இனிமேல் தினமும் படிப்பேன் காலம் தாழ்த்த மாட்டேன், அன்றன்றைக்கு இருக்கும் படிப்பை, வேலையை அன்றைக்கே செய்து முடிப்பேன், காலமும் நேரமும் சென்றால் சென்ற காலமும் நேரமும் திரும்பப் பெற முடியாது என்பதை அறிந்தேன் , காலத்தின் அருமையை நான் உணர்ந்தேன்" என்று கூறி அவ்வாறே நடந்து ராமு, சோமு இருவரும் இன்பமாக வாழத் தொடங்கினார்கள்.
நீதி- " *காலம் பொன் போன்றது",* என்பதுபோல் காலத்தை சரியாக பயன்படுத்தி கிடைத்த நேரத்தில் ராமு படித்திருந்தால் தேர்வின் முந்தைய நாள் இரவில் அழ வேண்டியிருந்திருக்காது. ஆகவே நமக்கு கிடைத்த நேரத்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எதற்கும் அஞ்சாமல் துணிந்து வாழ்வில் வெற்றி பெறுவோம்
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவியேற்பு: கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்
🎯பழைய ஓய்வூதியத் திட்டம் 6 மாநிலங்களில் அமல்; தமிழகத்தில் எப்போது? - ராமதாஸ் கேள்வி
🎯7வது வந்தே பாரத் ரயில் பிப்., 15க்குள் முடிக்க திட்டம்
🎯‘திருக்குறளால் மட்டுமே இளைஞர்களை சரியான பாதைக்கு அழைத்து செல்ல முடியும்’ - உயர் நீதிமன்றம் கருத்து
🎯அனைவருக்கும் வீடு திட்டம் | தமிழகத்திற்கு இதுவரை ரூ.11,260 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்
🎯 பாலாற்றில் வெள்ளம். 30 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை.
🎯 26 மாவட்டங்களில் என்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
🎯 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு என மத்திய அரசு தகவல்
🎯 பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதுமில்லை மத்திய அரசு நிதித்துறை இணைஅமைச்சர் தகவல்.
🎯 நிலவிலிருந்து பூமி திரும்பியது நாசாவின் ஆய்வுக்களம்
🎯உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவாகிறது இந்தியா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கருத்து
🎯நிச்சயமாக எங்களது ஆக்ரோஷ ஆட்டத்தை பார்ப்பீர்கள்: கே.எல்.ராகுல் உறுதி - ட்ரோல் செய்த ரசிகர்கள்
🎯ரஞ்சிக் கோப்பை இன்று தொடக்கம்: சென்னை, கோவையில் ஆட்டம்
🎯இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி: 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி
🎯உலக கோப்பை கால்பந்து: முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா-குரோஷியா இன்று பலப்பரீட்சை
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Chepakkam - Tiruvallikeni MLA. Udhayanidhi Stalin to be sworn in as minister tomorrow: Governor RN Ravi will administer the oath of office
🎯Old pension scheme to be implemented in 6 states; When in Tamil Nadu? - Ramadoss Question
🎯7th Vande Bharat train scheduled to be completed by Feb. 15
🎯' Only Tirukural can lead the youth to the right path' - High Court opined
🎯House for All Project | 11,260 crore allocation for Tamil Nadu so far: Central Govt
🎯 Flooding in Bala. Flood warning in 30 villages.
🎯 Heavy rain will fall in 26 districts, according to Meteorological Department
🎯 Central government information that 41.5 crore people have been rescued from poverty
🎯 There is no plan to re-introduce the old pension scheme, Union Finance Minister said.
🎯 Earth returned from the moon is NASA's probe
🎯India is becoming a powerful country in the world: UN. Russia's opinion on the Security Council
🎯You will definitely see our aggressive play: KL Rahul assured - trolled fans
🎯Ranji Trophy Starts Today: Matches in Chennai, Coimbatore
🎯2nd Test match between England and Pakistan: England team won by 26 runs
🎯World Cup Football: Argentina-Croatia in the first semi-final is a test today
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment