Sunday, December 11, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (12-12-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 12.12. 2022.       திங்கட்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்:அறிவுடைமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு . 
                                                                                                                                                                                                                                  
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?
விடை  :  அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)

 2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?
விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)                 
3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?
 விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)

4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?
 விடை : புலாண்ட் தர்வாஸா

5.  இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?
விடை    : பரம்வீர் சக்ரா.

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸Jack of all trade is master of none

🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

🌸 Justice delayed is justice denied

🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்







 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சொல்லும், செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...







இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் சிலையை திறந்துவைத்தார் ஸ்டாலின்

🎯மாணவர்களிடம் மதத்தை திணிக்க நினைக்கிறார்கள்; ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை மிகவும் பேராபத்தானது: ஆசிரியர் கூட்டமைப்பு பிரசாரம்

🎯இமாச்சல பிரதேச புதிய முதல்வர் சுக்விந்தர்சிங் சுக்கு-க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து

🎯தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள திட்ட மாதிரியை பின்பற்ற வேண்டும்: மராட்டிய முதல்வருக்கு சுற்று சூழல் ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

🎯 குஜராத் முதல்வராக இன்று பங்கேற்கிறார் பூபேந்திர படேல்; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு.

🎯 உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபாங்கர் தாத்தா இன்று பதவியேற்பு

🎯நிலவுக்கு ஏவப்பட்டது ஜப்பானின் லேண்டர் கருவி

🎯இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்வு

🎯 India vs Australia மகளிர் டி20 | பரபரப்பான சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி.

🎯402 சர்வதேச போட்டிகள்... 11,778 ரன்கள்… 148 விக்கெட்டுகள் - யுவராஜ் சிங் பிறந்தநாள் பகிர்வு







TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stalin inaugurated the statue of Bharatiyar in Kashi, Uttar Pradesh

🎯They try to impose religion on students; The National Education Policy of the Union Government is very ambitious: the teachers' union campaign

🎯 Prime Minister Modi and Tamil Nadu Chief Minister M.K.Stalin congratulate the new Chief Minister of Himachal Pradesh, Sukhwindersingh Sukku.

🎯Tamil Nadu should follow the project model created by the government: Environmentalists urge the Chief Minister of Maharashtra

🎯 Bhupendra Patel will participate today as Chief Minister of Gujarat; PM Modi, Amit Shah will participate.

🎯 Dibangar Datta will take oath as Supreme Court judge today

🎯Japan's lander launched to the moon

🎯The first woman president of the Indian Olympic Association was athlete P.T. Usha exam

🎯 India vs Australia Women T20 | India win thrilling Super Over: Australia's winning streak ends.

🎯402 Internationals... 11,778 runs... 148 wickets - Yuvraj Singh Birthday Share













இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...