Thursday, December 1, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (02-12-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 02.12. 2022  வெள்ளிக் கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இறைமாட்சி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
.     
                                                                                                                                                                                                                                     
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
காலம் தாக்காத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை..
     
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. மின் தூக்கியின் இயக்கம்?

விடை  :  நேர்கோட்டு இயக்கம்.

 2.  ரேடியோ மீட்டர் என்பது?

விடை : அகச்சிவப்பு கதிர் வீச்சை அறியும் கருவி.        
             
3 பைரோமீட்டர் என்பது எதை அளவீடு செய்ய பயன்படுகிறது?

விடை : உயர் வெப்பநிலை

4.ஆல்பா கதிர்கள் என்பன?

 விடை : நேர் மின்னோட்டம் தாங்கிய துகள்கள்.

5.  நீளத்தில் SI அலகு?

விடை    : மீட்டர்..


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸No news is good news

🌸 செய்தி ஏதும் இல்லை என்பது நல்ல செய்தியே

🌸 No Pains ; No Gains

🌸 உழைப்பின்றி ஊதியம் இல்லை




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                 
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்:

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.

கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிற்பி திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.

🎯 தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு(TRUST EXAM) 10-12-2022 சனிக்கிழமை நடைபெற உள்ளதால் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர் பெயர் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🎯 தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு

🎯 தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழில் கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு படிப்பு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தல்.

🎯 சிறந்த பள்ளிகளுக்கு விருது என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎯திருச்சி கோளரங்கத்தில் நேற்று (01.12.2022) முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

🎯 எஸ்சி எஸ்டி சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு.

🎯 சென்னையில் வருகின்ற சனிக்கிழமை பள்ளிகள் நடைபெறும்

🎯 சுதந்திரத்திற்குப் பின் செய்த தவற்றை மீண்டும் செய்யாதீர்கள் என பிரதமர் மோடி கருத்து

🎯தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்.

🎯 டிசம்பர் 5 இந்தியா வருகிறார் ஜெர்மனி துறை அமைச்சர்

🎯 ஐ. நா பாதுகாப்பு கவுன்சில் தலைமையை பொறுப்பில் மீண்டும் இந்தியா

🎯PAK vs ENG டெஸ்ட் | முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்தது இங்கிலாந்து அணி

🎯FIFA WC 2022 | வெளியேறியது பெல்ஜியம்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது குரோஷியா

🎯IPL 2023 ஏலம் | 277 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 991 வீரர்கள் பதிவு

🎯 ஜப்பான் ஸ்பெயின் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

🎯புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டிசம்பர் 8-ம் தேதி தமிழகத்தை நெருங்கும்

TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 School Education Minister Anbil Mahesh Poiyamozhi announced that Sculptor program will be started in all government schools.

🎯 Tamil Nadu Rural Aptitude Test (TRUST EXAM) is going to be held on Saturday 10-12-2022, so you can download the name list of students participating in the examination from today.

🎯 Tamil Language Literary Aptitude Test Result Publication

🎯 Instruction to complete and send applications for grant of scholarship for the academic year 2022-2023 to the children of teachers studying vocational education from the Tamil Nadu National Teachers Welfare Fund.

🎯 Chief Minister Stalin's announcement of award for best schools.

🎯Visitors are not allowed in Trichy Planetarium from yesterday (01.12.2022).

🎯 Minister MRK Panneerselvam announced an additional 20% subsidy for SC and small farmers.

🎯 Schools will be held in Chennai next Saturday

🎯 Prime Minister Modi's opinion that do not repeat the mistakes made after independence

🎯Indians continue to top remittances back home.

🎯 December 5 German Minister is coming to India

🎯 I. India returns to chair the UN Security Council

🎯PAK vs ENG Test | England made history by scoring more than 500 runs on the first day

🎯FIFA WC 2022 | Belgium out: Croatia through to next round

🎯IPL 2023 Auction | 991 players registered including 277 foreign players

🎯 Japan Spain qualified for knockout round.

🎯New depression: It will approach Tamil Nadu on December 8











🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் 
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...