Thursday, September 8, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (09/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 09.09.2022.    வெள்ளிக் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இன்னா செய்யாமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?

*விடை* :1972 ஆம் ஆண்டு

2.தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?

*விடை* :1958

3.தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?

*விடை* :செங்காந்தள் மலர்

4.தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?

*விடை* : மேலக்கோட்டை

5.தமிழ்நாட்டில் பல்கழைகழகங்களின் வேந்தர் யார் ?

*விடை* : கவர்னர்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

துன்பத்தை உதறித் தள்ளு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.
கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.
தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.
தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மதுரை தமுக்கத்தில் 2.47 ஏக்கரில் பிரமாண்ட பல்நோக்கு மாநாட்டு மையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

🎯புதுச்சேரியில் தலைமை பொறுப்பில் இருந்தாலும் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும்' என பள்ளி கல்வித் துறை கிடுக்கிபிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

🎯புத்தகங்கள், உரைகள் இரண்டும் நமது கல்வி போதனையின் அடிப்படை கூறுகள் -என பிரதமர் மோடி கருத்து.

🎯“நாடு அடிமைத்தனத்தின் மற்றொரு சின்னத்திலிருந்து விடுபட்டுவிட்டது” - ‘கடமைப் பாதை’ திறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு

🎯70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு

🎯பிரிட்டன் மன்னராகிறார் இளவரசர் சார்லஸ்

🎯தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

🎯ஆசிய கோப்பை | 1019 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி சதம் - புவனேஷ்வரின் அட்டாக்கில் வீழ்ந்த ஆப்கன்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Queen Elizabeth II, longest-reigning monarch of U.K., dies

🎯Rajpath, a symbol of slavery, erased: PM Modi

🎯PGI issues showcause notice to chemist after sedative reacts

🎯India, China troops begin disengagement from Gogra-Hotsprings in Ladakh

🎯Eye on China, Japan and India to boost defence ties

🎯Hockey World Cup | Tricky draw for India

🎯Asia Cup 2022 Super 4: Ind vs Afg | Virat Kohli ends long wait for a hundred as India signs off campaign with big win

 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...