Monday, September 5, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (06/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 06.09.2022.    செவ்வாய்க் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இடன் அறிதல் 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்?

*விடை* : பல்லவர் கால கல்வெட்டுகள்

2. கோழி தனது குஞ்சுகளை பொரிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளும்?

*விடை* : 21 நாட்கள்

3. உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது எது?

*விடை* : வெள்ளை அணுக்கள்

4. திட கார்பன்-டை-ஆக்சைடு எனப்படுவது எது?

*விடை* : உலர் பனிக்கட்டி

5. கால தூதுவர்கள் என்று அழைக்கப்படும் ஹார்மோன்கள் எவை?

*விடை* : மெலட்டோனின்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*கெடுவார், கேடு நினைப்பார்!*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

      ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.

ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.

நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது

ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது

சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது

தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து

ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.

ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .

தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯நீட் தேர்வு விடைத்தாள் மாறிவிட்டது: சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவி வழக்கு

🎯“அண்ணா நூற்றாண்டு நூலகம்... இந்தியாவின் பெருமை” - பார்வையிட்ட கேஜ்ரிவால் புகழாரம்

🎯இந்தியாவிற்கு அகதிகளாக வந்த தமிழர்களை தாயகம் அழைத்துச் செல்ல சிறப்புக் குழு அமைத்தது இலங்கை அரசு

🎯வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலி

🎯மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவது இலவசம் அல்ல: 'புதுமைப் பெண்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

🎯‘புதுமைப்பெண்’ திட்டம் புரட்சியை ஏற்படுத்தும்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நம்பிக்கை

🎯பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு: இந்திய வம்சாவளியான ரிஷிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை

🎯பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

🎯துபாய் ஓபன் செஸ் தொடரை வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு முதல்வர் வாழ்த்து

🎯அமெரிக்க ஓபன் | நான்காவது சுற்றில் நடாலை வீழ்த்தினார் ப்ரான்சைஸ் டைஃபோ

🎯தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு



TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chief Ministers Stalin, Kejriwal compliment each other

🎯Pudhumai Penn scheme launch in Tamil Nadu | Chief Ministers Stalin, Kejriwal share dais

🎯US Fed comments infused significant volatility in global markets: RBI Governor

🎯Liz Truss to take over as U.K.’s next Prime Minister

🎯Riders on the storm: How have Virat Kohli, Rohit Sharma, and KL Rahul fared with India’s new batting approach so far?

🎯Inconsistent mavericks: Dangerous Lankans, full of individual talent, can upset Indian applecart if it’s their day

 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...