Thursday, September 1, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (02/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 02.09.2022.    வெள்ளிக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கடவுள் வாழ்த்து
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்? எந்த ஆண்டு?

*விடை* : ஜான் கூட்டன்பர்க்(1453 -ஆம் ஆண்டு)

2. இந்திய கல்வி வளர்ச்சியின் மகா சாசனம் என்று போற்றப்படுவது எது?

*விடை* : சார்லஸ் வுட்  அறிக்கை (1854 -ஆம் ஆண்டு)

3. சீருடைமுறை, தாய்மொழி வழி கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது எது?

*விடை* : ஹண்டர் கல்வி குழு

4. உ .வே. சாமிநாதர் யாருடைய மாணாக்கர்?

*விடை* : மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

5. தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?

*விடை* : 1911


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Every cloud has a silver lining
🌹 தீமையிலும் ஒரு நன்மை உண்டு

🌷 Every man hath his hood
🌷 ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*அகந்தை*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

       உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குடிசை போட்டுத் தங்கி நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்ய தொடங்கினார்.
     
     மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியை பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவி விட்டது.

    இந்த விஷயம் நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.

     உடனே சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு துறவியின் இருப்பிடத்திற்கு சென்றார்.

    அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.

   உடனே மன்னன், "துறவி மகானே ! நான் மன்னன் வந்திருக்கிறேன் !"என்றார்.

துறவி திரும்பாமல், " போ!"என்று சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.

    மன்னனுக்குக் கோபம் வந்தது.

     "துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கின்றீரே!"என்று கத்தினால்.

    துறவி மீண்டும் திரும்பாமல், "மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்!" என்றார்.

    மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதை கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.

    மன்னன் சிரமப்பட்டு, தன் கோபத்தை அடக்கினான்.

     "துறவி மகானே! இப்போது நான் போகிறேன். மறுபடியும் எப்போது நான் வரட்டும்?"என்று கேட்டான் மன்னன்.

     "நான் செத்த பிறகு வா!"என்றார் துறவி.

     அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.

     "நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படி பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது?"என்று கேட்டான் மன்னன்.

    துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.

    "நான் செத்த பிறகு என்றால் என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தம் அல்ல.... நான் குறிப்பிட்ட 'நான்'என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு , ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!"என்றார் துறவி.

      *தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன்.*

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 122 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிக மழை பதிவு.

🎯 ஆதார் எண் வாக்காளர் பட்டியல் 1.66 கோடி பேர் இணைப்பு

🎯 செப்டம்பர் 4-இல் சிறப்பு தடுப்பூசி முகாம். பூஸ்டர் தவணைக்கு முன்னுரிமை

🎯மாணவிகளுக்கு 5ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🎯தென்மேற்கு பருவமழை 88 சதவீதம் அதிகம் - 4 நாட்கள் கனமழை பெய்யும்

🎯கனமழை, வெள்ள பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் - பொதுமக்கள் ஒத்துழைப்பு தர அமைச்சர் வேண்டுகோள்

🎯ரூ.90 கட்டணம்: கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

🎯தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம் - பினராயி விஜயனை சந்திக்கிறார்

🎯தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம் - பினராயி விஜயனை சந்திக்கிறார்

🎯செப்.15 - விஷ்வேஸ்வரய்யா பிறந்த தினம்: ‘பொறியாளர் தினமாக’ கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை

🎯இந்தியாவில் இருந்து உணவுப் பொருள் இறக்குமதி - பாகிஸ்தான் அரசு திட்டம்

🎯டி 20 உலகக் கோப்பை ஆஸி. அணியில் டிம் டேவிட்

🎯அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நுழைந்தார் செரீனா

🎯ஐஎஸ்எல் கால்பந்து தொடர் - அக்.7-ல் தொடக்கம்



TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chennai power cut today: These areas will face a power cut in Chennai

🎯Eight districts of Tamil Nadu receive heavy rainfall

🎯Tamil Nadu gets a record quantum of Cauvery water in August

🎯Jayalalithaa’s death | Arumughaswamy Commission report to be made public, says CM Stalin

🎯IMF agreement gives us confidence, grateful to India: Sri Lankan envoy

🎯PM to commission Vikrant, unveil Naval Ensign ‘Nishaan’ on Friday

🎯Vostok-2022 commences in Russia with India, China participating

🎯US Open 2022 | Serena Williams into third round after beating Anett Kontaveit

🎯ISL 2022-23 season to begin on October 7 with Kerala Blasters vs East Bengal

🎯Asia Cup 2022 | Flexible Suryakumar Yadav ready to bat anywhere


 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...