Tuesday, September 6, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு (07/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 07.09.2022.    புதன் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: சிற்றினம் சேராமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தந்தியை கண்டுபிடித்தவர் யார்? 

*விடை* :மார்க்கோனி

2.உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? 

*விடை* : லண்டன் 

3.பொருளாதாரத்தின் தந்தை யார்?

*விடை* : ஆடம் ஸ்மித்

4.‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

*விடை* : ரிப்பன் பிரபு

5.சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?

*விடை* : கால்சியம் கார்பனேட்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

மற்றவர்களும் நம்மைப்போலவே..

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

      ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.

அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.

கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.

அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும்,

கரு,கருவென்று இருந்தார்.

வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,

''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.

என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.

பெட்டகக் காப்பாளர் சொன்னார்,

பரவாயில்லை,கொடுங்கள்.

நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று,

உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,

சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,

அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.

உலக இயல்பு...

..........................

நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.

நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.

எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால்

நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

🎯 மாணவர்களுக்கு அக்டோபர் - 1 இல் தமிழ் 'திறனறித் தேர்வு', வெற்றி பெற்றால் மாதம் ரூபாய் 1500.

🎯 எஸ்சி , எஸ்டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய படிப்பு

🎯சித்த மருத்துவ பல்கலை. அமைக்க மாதவரத்தில் இடம் தேர்வு: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

🎯 உயர்கல்வி சேர்க்கை மாணவர்களுக்கு ஆலோசனை

🎯11 டெல்டா மாவட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

🎯 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இலக்கியவியல்’ தனித் துறை: ரூ.5 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

🎯14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

🎯46 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கினார்: தாய் மொழியில் கல்வி போதிக்க வேண்டும் - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்

🎯IND vs SL | 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி: தொடரில் இருந்து வெளியேறும் இந்தியா?

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Study: 11% of Class 3 kids lack basic maths skills, 37% have limited skills

🎯On Rohingya, Bangladesh asks India to lean on Myanmar

🎯India, Bangladesh should jointly fight anti-1971 forces, says PM Modi

🎯Medical students from Ukraine can continue in other countries: NMC

🎯Provide jobs to 54 more candidates, HC tells primary education board

🎯New UK leader, Liz Truss, promises to tackle energy crisis, economy

🎯Vedant Patel becomes first Indian-American to hold daily U.S. State Dept. press conference

🎯Quad officials discuss China concerns in the Indo-Pacific, Quad vaccine initiative

🎯Sri Lanka’s collectivism beats experimental India

 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...