Wednesday, September 7, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்கள் (08/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 08.09.2022.    வியாழக் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: *பயனில சொல்லாமை*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

.சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

*விடை* : வேலூர் மாவட்டம்

2. கல்வராயன் மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

*விடை* : விழுப்புரம் மாவட்டம்

3. சேர்வராயன் மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

*விடை* : சேலம் மாவட்டம்

4. பச்சை மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

*விடை* : பெரம்பலூர் மாவட்டம்

5. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

*விடை* : நாமக்கல் மாவட்டம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*எதில் 😄மகிழ்ச்சி!!!*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு 🎈🎈பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.


எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.


உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய 🎈பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.


இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் 🎈யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.


அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.


இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.


’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.


இந்த நாள் அனைவருக்கும் சந்தோஷமாய் மலரட்டும் ..!! 😄😄I

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மாணவியரின் இடைநிற்றலை ‘புதுமைப்பெண்’ திட்டம் முழுமையாக தடுக்கும்: அன்பில் மகேஸ் நம்பிக்கை

🎯நீட் தேர்வு முடிவுகள் | மாணவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

🎯நெல்லையில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

🎯காற்று மாசுபாட்டை தடுக்க ஜனவரி 1 வரை டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க தடை

🎯ரூ.27,360 கோடியில் 14,500 பள்ளிகளை மேம்படுத்தும் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது அவசியம்

🎯டி20 உலக கோப்பைக்கு 95% நாங்க ரெடி: ரோகித் நம்பிக்கை

🎯ஆசிய கோப்பை | ஆப்கனை வீழ்த்தி இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது பாகிஸ்தான்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯4 candidates bag top rank in NEET-UG 2022

🎯Professor from Chennai to head mathematics panel

🎯Onam festivities back after COVID break

🎯ISRO, Australian Space Agency to boost bilateral collaborations in space tech

🎯India eyes IMF support ahead of G20 presidency

🎯Official portraits of former President Barack Obama and wife Michelle unveiled at White House

🎯Asia Cup, Super 4 | Pakistan beats Afghanistan by one wicket to qualify for final, India out of contention

 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...