Sunday, September 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயற்பாடுகள் ( 05/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 05.09.2022.    திங்கட்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கடவுள் வாழ்த்து
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?  
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்?

*விடை* : 2200 முறை

2.உலகின் மிகப்பெரிய கடல் எது?

*விடை* : பசிபிக் பெருங்கடல்

3.இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்று அழைக்கப்படும் இடம் எது?

*விடை* : அசாம்

4.இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? 

*விடை* : கர்நாடகம் 

5.வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்? 

*விடை* : பங்கிம் சந்திர சட்டர்ஜி


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Every cloud has a silver lining
🌹 தீமையிலும் ஒரு நன்மை உண்டு

🌷 Every man hath his hood
🌷 ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும்*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

       மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார். பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி முடித்தார்.

.
கதை நீதி : துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம்  தளராமல் இருக்க வேண்டும்
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯ஆசிரியர்கள் தினம்: தலைவர்கள் வாழ்த்து

🎯வ.உ.சி 151-வது பிறந்தநாள் | செக்கிழுத்த செம்மலின் தியாக வரலாற்றைப் போற்றுவோம்: வைகோ, ராமதாஸ் புகழாரம்

🎯காமராஜர் பல்கலை.யில் மாத சம்பளம் வழங்குவதில் இழுபறி? - பேராசிரியர்கள், அலுவலர்கள் தவிப்பு

🎯தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுடன் இன்று பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடல்

🎯”ஆக., 31 வரை ரூ. 1.14 லட்சம் கோடி ரீபண்ட்” : வருமான வரித்துறை தகவல்

🎯உலகப்புகழ்பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி: ஆலப்புழாவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

🎯இந்தியாவில் ஒரே நாளில் 6,809 பேருக்கு கொரோனா... 26 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

🎯 சென்னையில் 8 ஆண்டுகள் வரை நிறுத்தப்படும் விக்ராந்த் கப்பல்

🎯 அடுத்த சீஸனிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார்.

🎯ஆசிய கோப்பை டி-20: 5 விக்கெட்டில் பாக்., அணி வெற்றி




TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯A teacher’s wish for schooling this Teachers’ Day

🎯Omandurar hospital gets new radiation therapy equipment

🎯Teachers’ organisations to boycott awards fete

🎯Brainwashed into becoming No.1: Serena Williams’ childhood coach Rick Macci traces her journey from nine-years old to World No.1

🎯Agnipath high on the agenda of Army Chief’s visit to Nepal

🎯United Kingdom to get a new Prime Minister on September 5

🎯India post 181 for 7 against Pakistan in Asia Cup Super 4 match


 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...