பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 31/10/2023 செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: நிலையாமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: நிலையாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
.நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆனணயம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
விடை : 1993 அக்டோபர் 12
2.பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு?
விடை : 1757 ஆம் ஆண்டு.
3.எந்த கல்வி கொள்கையானது நமது நாட்டில் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை (10 + 2 + 3) அறிமுகபடுத்தியது?
விடை : தேசிய கல்விக் கொள்கை 1986.
4."தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கியவர்" என் கருதப்படுபவர் யார்?
விடை : பூலித்தேவர்
5.தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சையைக் கைபற்றியது யார்?
விடை : மூன்றாம் கிருஷ்ணர்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
.🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்
🌹HUNGER BREAKS STONE WALLS
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.
🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
🍁🍁🍁🍁🍁🍁
எண்ணங்கள் ஈடேறும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .
பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .
எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .
வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .
ஆசிரியர் அவனை கவனித்தார் .
" என்னப்பா ... இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?
" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !"
"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"
" ஒரு பசுமாடு இருக்கு ! "
என்னப்பா சொல்றே
ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார் .
என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு
ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,
தம்பி ! ஒண்ணு செய்
" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன் .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய் உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா ...!"
" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .
ஆசிரியர் நினைத்து கொண்டார்
" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "
ஒரு வாரம் கழிந்தது .
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .
அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .
அவர் அவனிடம்
" என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?
அவன் இல்லை என தலை ஆட்டினான் .
அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?
அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".
ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .
ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .
நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .
விவேகானந்தர் கூட சொல்லுவர்
" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தேர்தல் நன்கொடை ஆதாரத்தை அறிய உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது
🎯 தமிழகத்துக்கு 2600 கன அடி காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை.
🎯 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி கிடைத்த 10 பேர் கடந்த மூன்று மாதங்களாக வேலை இன்றி அலைந்து வருகின்றனர்.
🎯ரூ. 100 கோடியில் மாணவர்களுக்கு உதவி தொகை டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு.
🎯 கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணம்
🎯 போனஸ், கருணைத்தொகை தகுதியான பணியாளர்கள் விவரம் கோருகிறது கூட்டுறவு துறை
🎯 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: பார்வையாளராக 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்
🎯 பி டி எஸ் படிப்பு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு
🎯 நிலையான அரசு விரைவான வளர்ச்சி என பிரதமர் மோடி பெருமிதம்
🎯 தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு.
🎯 காஸா நகரத்தை நெருங்கியது இஸ்ரேல் ராணுவம். ரஷ்யா : யூதர்களை குறிவைத்து கலவரம்
🎯 பாகிஸ்தான்: ஆப்கான் அகதிகள் நாளை முதல் வெளியேற்றம்.
🎯 அசத்தும் ஆப்கானிஸ்தான் இலங்கையையும் வீழ்த்தியது
🎯 இன்று கடைசி வாய்ப்பு வங்கதேசத்துடன் மோதுகிறது.
🎯 பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 3-வது வெற்றியை திங்கள் கிழமை பதிவு செய்தார்.
🎯ஆசிய துப்பாக்கி சுடுதல் அனீஸ் பன்வாலாவுக்கு வெண்கலம்
🎯ஹாக்கி: இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி.
🎯 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Cauvery panel asks Karnataka to release 2,600 cusecs for Tamil Nadu
🎯Electoral bonds promote ‘clean money’ donations to political parties, AG tells SC
🎯Quarantine days of PG students’ COVID-19 service must be deducted from bond period, says Madras High Court
🎯Election Commission appoints 10 electoral roll observers for districts in Tamil Nadu
🎯ED summons Arvind Kejriwal in Delhi excise policy case
🎯Joe Biden signs sweeping order to regulate AI in U.S, days before Sunak’s AI safety summit
🎯Score a hundred: Jonathan Trott sets next target for Afghanistan batters
🎯Cricket World Cup 2023 | I’m not sure where you get ‘favourites’ from: Pakistan coach Grant Bradburn
🎯Cricket World Cup 2023 | Pakistan, Bangladesh look to bounce back from a state of despair
🎯Lionel Messi wins record-extending 8th Ballon d'Or, Bonmati takes women's award
🎯Women’s Asian Champions Trophy: India settles Asian Games score with China
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment