பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 26.10.2023. வியாழக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: சான்றோண்மை🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்.
எந்நலத்து உள்ளதூஉம் அன்று
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
சான்றோரின் நலன் எனக் கூறப்படுவது அவர்களின் பண்புகளின் நலமே மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
விடை: கெப்ளர்
2.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
விடை: குறிப்பறிதல்
3.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
விடை:15 ஆண்டுகள்
4.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
விடை: postal index code
5.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை: 1912
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு.
🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
பொறுமைக்கு கிடைத்த பரிசு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.
மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.
பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.
இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.

.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 42% உள்ள அகவிலைப்படி 46% ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
🎯2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜனவரி 7ல் தேர்வு.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!
🎯பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்; பள்ளிக்கல்வித்துறை அரசாணை..!!
🎯டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
🎯சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் இனி ‘பாரத்’ - என்சிஇஆர்டி குழு பரிந்துரை
🎯அண்ணா பல்கலை.யில் நடப்பாண்டு 2 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்
🎯பல்கலைக்கழங்களை தவறாக வழிநடத்தும் சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
🎯 சேலம் மாவட்டத்திற்கு வரும் 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.
🎯 மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 55,000 ஆக உயர்வு.
🎯குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை
🎯ஜன.22-ல் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா - அழைப்பிதழ் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி நெகிழ்ச்சி
🎯வங்கதேசத்தை நெருங்கிய 'ஹமூன்'புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
🎯“பொதுமக்களை முன்னிறுத்துகின்றனர் ஹமாஸ் தீவிரவாதிகள்” - இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்
🎯இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் | இரு தரப்பும் போரை நிறுத்தி, அமைதி பேச்சுக்கு முன்வர வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
🎯 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறை ஆஸ்திரேலியா உலக சாதனை. 90 ரன்களில் சுருண்ட நெதர்லாந்து: 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா இமாலய வெற்றி
🎯உலகக் கோப்பையில் ஹாட்-ட்ரிக் தோல்வி: முன்னாள் வீரர்களிடம் உதவி கேட்ட பாகிஸ்தான் அணி
🎯ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில் இந்தியா 3 பதக்கங்களை வென்று அசத்தல்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Tamil Nadu government announces 4% Dearness Allowance hike for its employees, teachers
🎯 Tamil Nadu TRB notifies 2222 Teacher vacancies in Tamil Nadu; Eligibility, sub-wise list.
🎯NCERT panel suggests only ‘Bharat’ in textbooks
🎯Governor launches free breast cancer screening initiative
🎯CEO chairs meeting of political parties.
🎯Northeast monsoon to gain momentum over T.N. in a few days with twin cyclones losing strength
🎯PM Modi to attend inauguration of Ram Temple in Ayodhya on January 22
🎯A month after suspension, India resumes visas for Canadians in some categories
🎯After U.S., U.K., Australia, Five eyes member New Zealand too criticises India on order expelling Canadian diplomats
🎯AUS vs NED | Maxwell puts on a big show, rips the Netherlands apart
🎯Gill and Siraj close in on ODI top spots in ICC rankings
🎯Cricket World Cup 2023 PAK vs AFG | The Chennai crowd comes alive as it laps up a fierce rivalry.
🎯Paralympics champion Sumit Antil breaks world record, leads India's 30-medal haul in Asian Para Games
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment