பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 16.10.2023. திங்கள்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: ஊக்கமுடைமை🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும். அதுபோல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே ஆகும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.எந்தக் கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்?
விடை : புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி
2.தொலைநோக்கியால் மட்டுமே காணக்கூடிய கோள்கள் எவை?
விடை: யுரேனஸ், நெப்டியூன்
3.பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருகிறது?
விடை : மேற்கிலிருந்து கிழக்காக
4.மிகுந்த வெப்பம் கொண்ட கோள்கள் எவை?
விடை : வியாழன், புதன்
5.சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும், மாலையில் சூரியன் மறைந்த பின்பும் தோன்றும் கோள்கள் எவை?
விடை: புதன், வெள்ளி
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு.
🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
உதவி செய்து வாழ்வதே சொர்க்கம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்..
அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்..
ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது..
தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது..
ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்..
அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்.._
அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன..
அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது..
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது..
ஆனால், அந்தோ பரிதாபம்..
அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை..
எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.. அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது..
அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை..
ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்..
கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா..
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது..
கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்..
.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு லட்சம் மாணவர்கள் எழுதினர்.
🎯 சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் முறையீடு. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வடமாநில இளைஞர் கைது. 'ப்ளூடூத்' பயன்படுத்திய 30 பேர் மீது வழக்கு.
🎯 ஆன்லைன் சான்றால் 15000 ஏற்றுமதியாளர் பயன்.
🎯காவிரி விவகாரத்தை முன்னெடுக்க தமிழக அரசு சட்ட வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு.
🎯 தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை 92வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
🎯 தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு.
🎯 தமிழகத்தில் 6 டெமு, 2 விரைவு ரயில்களுக்கு பதிலாக நவம்பர் 1 முதல் மெமு ரயில்களை இயக்க முடிவு.
🎯 மீட்டர் கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செயலி முன்பதிவு வாகனங்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம்.1.20 லட்சம் ஆட்டோ, கார் ஓடாது என அறிவிப்பு.
🎯 இந்தியா வர அழைப்பு விடுத்ததற்காக பிரதமருக்கு பிரான்ஸ் விண்வெளி வீரர் நன்றி.
🎯 விதவை முதியோர் மாத உதவித்தொகை ரூ.5,016-ஆக உயர்த்தப்படும் என தெலுங்கானாவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் சந்திர சேகர ராவ்.
🎯 கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.
🎯 பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் முப்படை தாக்குதலுக்கு இஸ்ரேல் தயார். நூற்றுக்கணக்கான பீரங்கிகளுடன் 10 வீரர்கள் தயாராக உள்ளனர். போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு ஹமாஸ் கமாண்டர் உயிரிழந்தார்.
🎯 ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 2 விமானத்தில் 471 இந்திய நாடு திரும்பினர்.
🎯2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் விரைந்தது.
🎯 இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி.
🎯 முதல் வெற்றியை பெறப் போவது யார்? முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய, இலங்கை இன்று மோதல்.
🎯 இந்திய கிரிக்கெட் அணி இடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கருத்து.
🎯 பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கிவிட்டார் ரோஹித் என முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பாராட்டு.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Candidates preparing for civil service must also try TNPSC group-1 exam former DGP.
🎯Literary reviews of Tamil language were written by lakhs of students.
🎯 Stalin unveils statue of Abdul Kalam on Anna Univarsity campus
🎯 Sri Lankan Navy arrest 27 fisherman from Tamilnadu.
🎯 New investments slowed again in Q2 of 2023 24 survey.
🎯 Israel readies for attack as a million people evacuate.
🎯MEMU trains to soon become operational in certain sections in Delta region
🎯 Water level in mettur dam stands at 41.610 feet.
🎯Vizhinjam port welcomes its first vessel.
🎯 Study estimates count of UAVs required for the three services.
🎯U.S. warns of the prospect of Iran getting engaged in war.
🎯 Azerbhajan president raises national flag in karabakh capital.
🎯 Gritty Afghanistan leaves England shell-shocked.
🎯 Afghanistan tastes its second success in World cups.
🎯 Life has come a full circle for Rohit.
🎯 Australia, Sri Lanka seek to reboot flagging compaign.
🎯 Bindra hopes India gets to host Olympics in near future.
🎯 Italy coasts to an easy inwin over Malta.
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன்
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment