பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 13.10.2023. வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வினைத்திட்பம்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவருக்கும் எளியனவாம், சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.480 காகிதங்கள் கொண்ட ஒரு கட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
விடை: ரீம்
2.சிறந்த இந்திய விளையாட்டுப்
பயிற்சியாளர்களுக்கு என்ன விருது
வழங்கப்படுகிறது?
விடை: துரோணாச்சாரியா விருது
3.சென்னை மாநிலம்' தமிழ்நாடு' என
எப்போது மாற்றப்பட்டது?
விடை:1969
4.வ.உ.சிதம்பரனாருக்கு ' கப்பலோட்டிய
தமிழன்' என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
விடை:ம.பொ.சி
5.நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின?
விடை: நெபுலாக்கள்
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 Every cloud has a silver lining
🌹 தீமையிலும் நன்மை உண்டு
🌷 Every man is his own doctor
🌷 தன் நோய்க்கு தானே மருந்து
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
பொறுமையே புத்திசாலித்தனம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு ஆமையும் இரண்டு அன்னப்பறவையும் இருந்தாங்க. நிறைய நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் கதை சொல்லிக்கிட்டே நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். அப்படியே சில வருடங்கள் போயிடுச்சு, அப்போ ஒரு வருஷம் அங்கு மோசமான வரட்சி ஏற்பட்டது. அப்போது “இந்த குளம் கிட்டத்தட்ட வற்றி போயிடுச்சு தண்ணி இல்லாம நாம எப்படி இங்க வாழுறது” என்று அன்னப் பறவை கேட்டது.
அதற்கு ஆமை “கவலைப்படாதே நண்பா ஒரு வழி கண்டு பிடிக்கலாம்.” என்றது. உடனே மற்றொரு அன்னப் பறவை “ஒரு வழியும் இல்லை நாங்க பறந்து போனாலும் நீ இங்க தான் இருக்கணும், ஏன்னா நீ ரொம்ப மெதுவா நடப்ப இல்ல, அது மட்டும் இல்ல உன்ன நாங்க தனியா விட்டுட்டு போக மாட்டோம்.” என்று சொன்னது.
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ஆமை சொன்னது “ஹே! பசங்களா என்கிட்ட ஒரு சூப்பரான ஐடியா இருக்கு, முதலில் நீங்க ரெண்டு பேரும் போயி தண்ணி நிறைய இருக்கிற குளமா பார்த்து தேடிட்டு வாங்க.
அப்படி திரும்பி வரும்போது ஒரு பெரிய குச்சியை கொண்டு வாங்க அந்த குச்சியின் நடுவில நான் பிடிச்சுக்கறேன், நீங்க ரெண்டு பேரும் உங்க காலால குச்சியின் ரெண்டு ஒரத்தையும் புடிச்சுகிட்டு என்னை புது குளத்துக்கு பறந்து கூட்டிட்டு போங்க, நம்ம வாழ இதுதான் ஒரே வழி. இது ஒரு செம்மையான ஐடியா!.” என்றது.
அதை கேட்ட அன்னப் பறவைகள் “இது நல்ல ஆலோசனை தான். ஆனா நாங்க பறக்கும் போது நீ தான் உன் வாயைத் திறக்காம பாத்துக்கணும்.. இல்லன்னா நேரா கீழே விழுந்துவிடுவ.” என்று கூறி அந்த இரண்டு அன்னப்பறவையும் பறந்து போய் நிறைய தண்ணீர் உள்ள ஒரு குளத்தை அவங்களோட புது வீட்டை தேடப் போனாங்க.
அந்த நேரத்துல ஆமை இப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை யோசித்ததை நினைத்தும், வானத்தில் அப்படியே பறந்து போகிறதை நினைத்தும் ரொம்ப பெருமையா இருந்துச்சு. சீக்கிரமாவே அன்னப் றவைகள் ஒரு குளத்தை கண்டுபிடித்து ஒரு பெரிய குச்சியோட ஆமைய பார்க்க வந்தாங்க. ‘இதோ இதுதான் உன் குச்சி பிடிச்சுக்கோ” என்றது அன்னம்.
ஆமை எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா அதோட குட்டி கால்களை நகத்தி தன்னோட வாயால் அந்த குச்சியை புடிச்சுது. அப்போ அன்னப்பறவைகள் பட படனு இறக்கைகளை விரிச்சிட்டு சீக்கிரமா பறக்க ஆரம்பிச்சாங்க. அவங்க மேகத்துக்கு மேல் பறந்து போனாங்க, ஆமையோட ஐடியா சூப்பரா வேலை செய்தது.
“நான் பறக்குறேன்னு என்னாலேயே நம்ப முடியல, இப்படி ஒரு ஐடியாவை யோசிச்ச நான் எவ்ளோ பெரிய புத்திசாலி” என்று ஆமை தன்னை ரொம்ப பெருமையாக நினைத்தது. அவங்க போற வழியில ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தின் மேலே பறக்கும் போது கீழே இருந்த மக்கள் அவங்கள பாக்க ஆரம்பிச்சாங்க.
இரண்டு அன்னப்பறவையும், ஒரு ஆமையும் பறக்குறத பாக்க ரொம்ப அழகா இருந்திச்சி. “ஹே! அங்க பாருங்க அந்த ரெண்டு அன்னபறவையும் ஒரு ஆமைய தூக்கிட்டு போகுது.” கீழே இருக்கிற மக்கள் சொன்னத கேட்டு ஆமை ரொம்ப பெருமை பட்டுச்சு. மக்களுக்கு இது ஆமையோட ஐடியானு தெரியாததுனால ஆமைக்கு கோவம் வந்திச்சு.
“என்ன ஒரு புத்திசாலி பறவைகள் அவங்க ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்திற்கு போறாங்க போல கூட அவங்க ஃபிரண்ட் ஆமையும் கூட்டிட்டு போறாங்க பாருங்க. ஆமா இது யாருடைய ஐடியானு தெரியல, அதை யோசித்த விலங்கு ரொம்ப புத்திசாலி” என்று மக்கள் புகழ்ந்து பேசுறத கேட்ட ஆமையால் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல். அதோட வாய திறந்து கத்தி “அது என்னோட ஐடியா” என்று சொல்லிச்சு.
ஆமை, தன்னோட வாய திறக்க கூடாது என்பதை மறந்ததனால் மேல இருந்து ரொம்ப வேகமாக கீழே விழுந்திச்சு. ஆமையோட பொறாமையான குணத்தினால அன்னப்பறவைகள் தங்களோட நண்பனை இழந்திட்டாங்க. அவங்களல எதுவும் பண்ண முடியல. அன்னப் பறவைகள் மட்டும் புது குளத்திற்கு பறந்து போனாங்க.
நீதி: சான்றோர்களைப் போல் அமைதியாக இருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 காவிரியிலிருந்து 16 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்தப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.
🎯 11 கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உறுதி.இன்று நடைபெற இருந்த தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் போராட்டம் ரத்து.
🎯 உதவி வன பாதுகாப்பு அலுவலர் காலி பணியிடங்களுக்கு இன்று தேர்வு தொடக்கம்.
🎯 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை.
🎯 பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் 70 சதவீதம் நிறைவு.
🎯 'தீபாவளி கங்கா ஸ்னான'சுற்றுலா ரயில் தென்காசி- காசி இடையை இயக்கம் ஐ ஆர் சி டி சி தென்மண்டல மேலாளர் அறிவிப்பு.
🎯பணியிடங்களில் முதலுதவி பெட்டிகள் கட்டாயம் தமிழக அரசு உத்தரவு.
🎯 கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் அரசாணை வெளியீடு.
🎯 ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை.
🎯 வரையாடுகளை பாதுகாக்கும் முன்னோடி திட்டம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
🎯 புரட்டாசி மஹாலய அமாவாசையொட்டி 270 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் பயணிகளுக்கு முன்பதிவு வசதி.
🎯 அதிமுக ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் ரூ.2.15 கோடி வீண் செலவு. தணிக்கை அறிக்கையில் தகவல்.
🎯 'வாடிக்கையாளர் புக்கிங் செய்த ஒரு நாளில் கிடைக்கணும்'ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர்கள் சப்ளை ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு.
🎯 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் விரைவில் தொடக்கம்.
🎯 மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
🎯 நியூசிலாந்து- வங்கதேசம் மோதல். உலகக்கோப்பை கிரிக்கெட் காக மெட்ரோ ரயிலில் இலவச பயணம் நிர்வாகம் தகவல்.
🎯 மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை பிரியங்கா வாக்குறுதி.
🎯 கால்நடை தீவனம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய மாநிலங்களில் குழுக்களை அமைக்குமாறு மத்திய அரசு உத்தரவு.
🎯 உலகில் வலுவடையும் இந்தியாவின் குரல்: பிரதமர் மோடி பெருமிதம்
🎯 'சரஸ்வதி சம்மான்' விருது எனது வாழ்வின் அர்த்தத்தை மேம்படுத்தியுள்ளது என எழுத்தாளர் சிவசங்கரி நிகழ்ச்சி.
🎯'ஆப்ரேஷன் அஜய்' மூலம் இந்தியர்களை மீட்க இஸ்ரேல் சென்றடைந்தது தனி விமானம். 230 பேருடன் இன்று காலை டெல்லி திரும்பும்.
🎯 தடுமாறும் ஆஸ்திரேலியா. சோபிக்காத பேட்டர்கள், சோதிக்காத பவுலர்கள்.
🎯 தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்.
🎯 இன்று வங்கதேசத்தை சந்திக்கும் நியூசிலாந்து.
🎯 தேசிய தடகள போட்டிகள்: தமிழகத்தின் கிரிதரணி முதலிடம்.
🎯 சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேரளா அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
🎯 தென் தமிழகத்தில் தீவிரம் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯NGT committee to look into pollution in Ramakkal lake in Tamil Nadu
🎯Operation Ajay | Air India flight from Israel arrives in Delhi
🎯Grievances redressal camp for children held
🎯Online learning platform to train 1 lakh T.N. engineering students for free on coding
🎯UGC gives nod for NITTTR to move to deemed varsity status
🎯‘Project Nilgiri Tahr’ launched in Tamil Nadu
🎯‘Core issue’ is Canada’s safe haven for terrorists, says India
🎯India should learn lessons from unprecedented attack on Israel, says NSG Chief
🎯Defence Minister Rajnath Singh holds meeting with French counterpart Lecornu in Paris
🎯SA vs AUS: De Kock’s ton and potent attack sink Aussies
🎯Ind vs Afg ODI World Cup | I've taken a leaf out of Gayle's book: Rohit Sharma after smashing sixes record
🎯Rising Indian racer Kush Maini to be mentored by former F1 champion Mika Hakkinen
🎯ATHLETICS | Ashton Eaton lets in on how to breach the 9000 point mark in decathlon
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சி மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
திருச்சி மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment