Friday, April 12, 2024

பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன்(2024) மாதம் வெளியாகிறது

 பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன் மாதம் வெளியாகிறது


         பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற போட்டி எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

          தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு 41,485 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 130 மையங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்பட்டது.

         தமிழ் மொழித் திறன் அறிவுக்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெற்றது.

       அதைத் தொடர்ந்து, தேர்வுக்கான விடைக் குறிப்புகள் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது தேர்வர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி வரையில் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்பொழுது தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புகள், நடத்தப்பட்டு பணி நியமனத்துக்கு பள்ளி க்கல்வித்துறைக்கு அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


(சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024, தினமணி நாளிதழ் செய்தி)

Wednesday, April 3, 2024

TNSET EXAM 2024 FOR ASSISTANT PROFESSOR

 உதவிப் பேராசிரியர் பணிக்கான 'ஸ்லெட்' தேர்வு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

             உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்) திங்கட்கிழமை ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

          தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர 'நெட்'(தேசிய தகுதித் தேர்வு) அல்லது 'செட்' (மாநில தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

          அந்த வகையில் இந்த ஆண்டு 'செட்' தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.

           அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம் உள்பட மொத்தம் 43 பாடங்களுக்கான ஸ்லெட் தகுதித் தேர்வு ஜூன் 3ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1 திங்கள் கிழமை முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் www.msutnset.com என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

          தேர்வு கட்டணம்: பொதுப் பிரிவுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.2500, எம் பி சி , டி என் சி வகுப்புக்கு ரூ.2000, எஸ் சி , எஸ் டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 3-ஆம் பாலினத்தவர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

         இந்த தேர்வுக்கு முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. தேர்வில் மொத்தம் 2 தாள்கள் உள்ளன.

            முதல் தாளில் பொது அறிவு, ஆராய்ச்சி திறன், சிந்தனைத் திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் 50 கேள்விகள் இடம் பெறும்.2-ஆவது தாளில் சார்ந்த பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம் தேர்வு முறை உள்பட விவரங்களை www.msutnset.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (முன்னதாக செட் தேர்வுக்குரிய கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது)


இன்றைய முக்கிய செய்திகள்.06/03/2026

  இன்றைய முக்கிய செய்திகள்.06/03/2026 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🎯 திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் டூ ஆங்கில பாடத் தேர்வு 276 பேர...