பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 27.10.2023. வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.என்.எச்.47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கிறது?
விடை: கன்னியாகுமரி- சேலம்.
2.நிலநடுக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள கண்டம்?
விடை : ஆப்ரிக்கா
3.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்
விடை: 12754 கி.மீ
4.இந்தியாவின் காளான் பாறைகள் எங்கு காணப்படுகிறது?
விடை : இராஜஸ்தான்
5.இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம்
விடை : 4%
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 Every cloud has a silver lining
🌹 தீமையிலும் நன்மை உண்டு
🌷 Every man is his own doctor
🌷 தன் நோய்க்கு தானே மருந்து
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
மனமே மாமருந்து
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு ரயில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் ஒரு பெரியவர் ஏறினார். தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தார்.
மூட்டையை சுமந்துகொண்டே உள்ளே வந்தார். மூட்டையை சுமந்துகொண்டே இருக்கையில் அமர்ந்தார்.
ரயில் புறப்பட்டது.
இவர் தன் தலையில் இருந்த மூட்டையை இறக்கி கீழே வைகனும்மல்ல? வைக்கவில்லை.
எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்டார், ஏங்க மூட்டைய தலை மேலேயே வெச்சிருகீங்க, கீழே இறக்கி வைக்கவேண்டியதுதானே ??
வேண்டாங்க பாவம்; தலையில் இருக்கிற மூட்டைய எறக்கி வெச்சா ரயிலுக்கு பாரம் அதிகமாயிடும், நான் தலைலயே வெச்சிருகிறேன் அப்படின்னு அந்த பெரியவர் சொன்னார்.
இந்த மாதிரி ஆட்கள பாத்தா நமக்கு சிரிப்பு தான் வரும். ஏன்னா, ரயில் இப்பவே அந்த மூட்டையையும் சேர்த்துதான் சுமந்துகிட்டு போகுது. அவர் அந்த மூட்டையை தலையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான் தரையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான். இதனால ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.
அதே மாதிரி தான் நம்மோட மனமும், இதுவும் ஒரு தேவை இல்லாத ஒரு சுமை. அனாவசியமா சுமந்த்துகிட்டு இருக்கிறோம். இதையும் கீழே இறக்கி வெச்சிட்டா வாழ்க்கை பிரயாணம் சுகமாக இருக்கும்.
ரயில் பிரயாணம் செய்யும் அந்த பெரியவர் மூட்டையை சுமக்கிறார். வாழ்க்கை பிரயாணம் செய்யும் நாம் மனதை சுமக்கிறோம். இவை இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மனதை கீழே இறக்கி வெச்சிட்டா பாரம் இல்லாமல் வாழலாம். பறவைகள் மாதிரி பறக்கலாம் குழந்தை மாதிரி கள்ளங்கபடம் இல்லாமல் வாழலாம். இந்த வெளி உலகத்தில் நாம் நிலைபெற்று வேரூன்றி இருக்கனும் அதே சமயம் நம் உள்வெளியில் பாரமில்லாமல் இருக்கனும். அப்படின்னா பறக்கனும், நதியை போல ஓடனும், மிதக்கனும் பயனம் சுகமாக இருக்கும் களைப்பு தெரியாது; கவலை தெரியாது.
ஒரு சீடன் போதி தருமரை நாடி வந்தான். குருவே நீங்கள் என்னை வெறுமையாக இருக்க சொன்னீங்க நான் இப்பொழுது வெறுமையானவன் ஆகிவிட்டேன், இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
உடனே அந்த குரு பக்கத்தில் இருந்த ஒரு குச்சிய எடுத்து சீடன் தலையில் தட்டி , போய் அந்த வெற்று தன்மையையும் வீசிவிட்டு வா என்று கூறினார்.
ஒருத்தன், இப்பொ நான் காலியா இருக்கென்னு சொன்னான்னா அவன் காலியா இல்லைனு அர்த்தம், ஏன்னா அதில் இன்னும் “நான்” என்ற சொல்(எண்ணம்) இருக்கின்றது.
எந்த சிந்த்தனையும் இல்லாமல் இருப்பது கடினம் தான் ஆனாலும் மனிதன் அதனுள் இருக்கும் நுட்டபத்தை புரிஞ்சிகிட்டானா இவ்வளவு தூரம் தூக்கி சுமந்த மனதின் முட்டாள் தனத்தை எண்ணி அவனே சிரிப்பான்.
“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இறகை போன்ற மனம் வேண்டும்”
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.🎯 பொதுத்துறை தொழிலாளர்களுக்கு 20% போனஸ்.
🎯 மாவட்டக் கலை திருவிழா போட்டிகள் தொடக்கம்
🎯 சந்திர கிரகணம்: நாளை கோயில்களில் நடை அடைப்பு.
🎯 சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இணையத்தில் பதிவது அவசியம்.
🎯 இன்று முதல் 4 நாட்களுக்கு 175 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
🎯 தமிழக சுற்றுலா திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு விருது.
🎯 352 தாழ்தள பேருந்துகளை வாங்க போக்குவரத்து கழகம் முடிவு
🎯 முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் பயிற்சி கட்டாயம்.
🎯 நீட் ரத்து கோரி மாணவரிடம் கையொப்பம் அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
🎯 சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவ படிப்புகள்: பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்.
🎯 அக்டோபர் 31 இல் தமிழக அமைச்சரவை கூட்டம்.
🎯 இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.
🎯 37- ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் கோவாவில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
🎯 வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தரமான விதிகளை பிபிஎஸ்எஸ்எல் நிறுவனம் வழங்கும் அமித்ஷா உறுதி.
🎯 கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு உளவு குற்றச்சாட்டில் கைதான முன்னாள் கடற்படை அதிகாரிகள்.
🎯 காஸாவுக்குள் புகுந்து இஸ்ரேல் பீரங்கி தாக்குதல் அரபு நாடுகள் கண்டனம்.
🎯 தென்னாப்பிரிக்காவுடன் இன்று பல பரிச்சை வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் பாகிஸ்தான். தோல்வி அடைந்தால் மூட்டை கட்ட வேண்டியதுதான்.
🎯 இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி, அரையிறுதி வாய்ப்பை இழக்கிறது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி.
🎯 சீனாவின் ஹாங்சா நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டு 82 பதக்கங்கள் என்று இந்தியா வரலாற்றுச் சாதனை.
🎯 மகளிர் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்.
🎯 தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Eight former Navy officers get death penalty in Qatar
🎯 Deepavali bonus for state public sector undertaking workers
🎯 Teachers of aided colleges demand career advancement benefits old pension scheme.
🎯 Webinar on stroke management to be held tomorrow.
🎯 Free model test for TNPSC group 4 exam.
🎯 DMK government has taken all possible steps for the release of Muslim prisoners says IUML.
🎯 North East monsoon study forecasts normal to near normal rain in state.
🎯 Israeli troops carry out ground incursion into gaza
🎯India creates history in Asian Para Games, takes tally to record 82 medals with 2 days left
🎯 Sri Lanka pills on England's misery, leaves its title Defence in tatters
🎯 Pakistan in a must win situation against an in form South Africa
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment