Thursday, October 19, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (20-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 20/10/2023         வெள்ளிக்கிழமை  
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அறிவுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.

🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.X–கதிர் என்பது?

விடை : மின்காந்த அலை

2.புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் கதிர்வீச்சு?

விடை : பீட்டா கதிர்வீச்சு

3.நரம்பு மண்டலத்தின் அலகு?

விடை : நியூரான்

4.வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?

விடை : ரிபோபிளேவின்

5.லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?

விடை : 545




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Lucky man needs no counsel

🌷அதிர்ஷ்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை. 



🌹The greater the ambition the greater the low
🌹பேராசை பெருநட்டம்.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.
சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.
சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.
வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.
தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.
இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.
“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.
உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.
*நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பள்ளி கல்வித்துறையின் திட்டப்பணிகள் செயல்பாடு கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் .

🎯3% இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு.

🎯 வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது வடகிழக்கு பருவமழை இரண்டு நாளில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

🎯 நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல் தரும் 7 புதிய வாழை ரகங்கள் அறிமுகம் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அசத்தல்.

🎯 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டம் அக்டோபர் 25ஆம் தேதி நடக்கிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

🎯 ஆப்பரேஷன் சக்ரா-2 தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 76 இடங்களில் சோதனை சைபர் குற்றவாளிகள் மீது சிபிஐ நடவடிக்கை.

🎯 தடை உத்தரவால் பாதிப்பு எதிரொலி லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு ஆன்லைன் அங்கீகாரம் நடைமுறை.

🎯 தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக 1500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு என சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.

🎯 உறுப்பு தானம் செய்வதற்கு ஆன்லைனில் உறுதிமொழி மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அழைப்பு.

🎯 சுகன்யான் மாதிரி விண்கலம் டிவி -டி1 ராக்கெட்டில் நாளை ஏவப்படுகிறது.

🎯 ஆயுத பூஜையையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து 16 ஆயிரம் பேர் முன்பதிவு.

🎯 திறன் மேம்பாட்டு திட்டங்களால் நாட்டில் 1.3 கோடி இளைஞர்கள் பலன் என பிரதமர் நரேந்திர மோடி

🎯 இஸ்ரேல் பிரதமர் நெநன்யாகுவுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சந்திப்பு. காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி.

🎯 விராட் கோலி சதம் விலாசல் இந்திய அணிக்கு 4-வது வெற்றி. 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது வீழ்த்தியது.

🎯ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை .




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Over 2 million trapped in gaza as attacks continue.

🎯 Southern monsoon withdras from India.

🎯 Nagapattinam all geared to meet northeast monsoon related exigencies.

🎯 Water level in mettur dam stands 45.62 feet.

🎯 Tamil Nadu is the safest state with low crime rate

🎯 Work on civic body's model school project gathers space.

🎯 Tamilnadu CM to virtual unveils statue of freedom fighter today.

🎯 PRIMARY HEALTH CENTRES in Tamilnadu being ranked to assess performance track progress.

🎯 Modi reiterates support for Palestinians statehood.

🎯AIIMS to have integrated health study centres.

🎯 China to work with Egypt to help stabilise West Asia

🎯 India's share of growth to rise to 18%

🎯 Kohli gets into the act again as India makes light of yet another chase

🎯 Rohit's aggro gives  us a headstart: Gill.

🎯 Australia and Pakistan face of in Big ticket clash at chinnaswamy.











இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி , திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு