Wednesday, September 25, 2024

இன்றைய முக்கிய செய்திகள். வியாழக்கிழமை 26/09/2024.

 இன்றைய முக்கிய செய்திகள். வியாழக்கிழமை 26/09/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 ஜம்மு - காஷ்மீர்: 56 % வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தல்.

🎯 பாராலிம்பிக்கில் பதக்கம். தமிழக வீரர்களுக்கு ரூ 5 கோடி முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

🎯 இன்று தில்லி செல்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். 

🎯 பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு. 

🎯 பள்ளி மாணவர்களுக்கு பெரும்பரப்பு, பெரிய சித்தூருக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

🎯 அரசு பணி: அமைச்சர் உதயநிதியிடம் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை.

🎯 தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும் திருச்சி உள்ளிட்ட எட்டு இடங்களில் வெயில் சதம். 

🎯 கணியாமூர் பள்ளி வன்முறை மாணவியின் உறவினர் கைது. 

🎯 மருத்துவக் கல்லூரிகளுக்கு வங்கி உத்தரவாதம் மாற்றி அமைப்பு. 

🎯 தொழில்துறை மூலம் 50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

🎯 கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள் ரொக்க பரிசுகள் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

🎯மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் பங்கேற்க சிறப்பு பயிற்சி வகுப்புகள்.

🎯ஏஐசிடிஇ திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு. 

🎯 எம்.பி.ஏ உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 14 இந்திய நிறுவனங்கள்.

🎯 இந்தியா முழுவதும் பள்ளிகள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு தடை மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற உத்தரவு. 

🎯 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி ராஜநாத் சிங் பெருமிதம். 

🎯 பால் பண்ணைத் துறையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இல்லை என அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு 

🎯 இட ஒதுக்கீட்டை வெறுக்கும் காங்கிரஸ் என பிரதமர் மோடி விமர்சனம். 

🎯 போர் நிறுத்த திட்டத்திற்கு ஆதரவு ஐநாவில் ஸெலென்ஸ்கி வலியுறுத்தல் 

🎯 செஸ் ஒலிம்பியாட் சாம்பியன்களுக்கு ரூ 3.2 கோடி ரொக்கப் பரிசு. 

🎯 ஆஸ்திரேலியாயுடனான ஒரு நாள் தொடர் இங்கிலாந்துக்கு முதல் வெற்றி.

🎯 ஐ எஸ் எல் கால்பந்து போட்டி 13வது ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு ஹாட்ரிக் வெற்றி.

Tuesday, September 24, 2024

இன்றைய முக்கிய செய்திகள் . புதன்கிழமை 25/09/2024.

 இன்றைய முக்கிய செய்திகள் . புதன்கிழமை 25/09/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 ரஷ்ய - உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு என ஸெலன்ஸ்கியிடம்  பிரதமர் மோடி வலியுறுத்தல்.

🎯 பள்ளியில் இடை நின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்க சிறப்பு முகாம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

🎯 பாரதிதாசன் பல்கலையில் பட்டம் பெற ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு. 

🎯 வேளாண் பணிகளிலும் ஆக்கிரமிக்கும் வட மாநில தொழிலாளர்கள்!.

🎯 அப்துல் கலாம் நினைவிடத்துக்கு கூடுதல் இடம்: அரசாணைக்கு இடைக்கால தடை. 

🎯 அக்டோபர் 30 தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் தென் மண்டல ஐஜி ஆய்வு. 

🎯 அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள் உயர்நீதிமன்றம் வேதனை. 

🎯 அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புத் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் என தலைமைச் செயலர் முருகானந்த உத்தரவு.

🎯 துணையும் மருத்துவ படிப்புகள்: இடம் தேர்வு இன்று நிறைவு.

🎯 தலைமைச் செயலகத்தில் தபால்கள் இனி என்மமயம்! காகித வடிவம் இல்லை. 

🎯 பிரதமரை சந்திக்க முதல்வர் தில்லி பயணம். 

🎯 சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு 

🎯 தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல். 

🎯 கவிஞர் மு. மேத்தா, பாடகி பி .சுசீலாவுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுகள்.

🎯 கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தங்க தரச் சான்று விருது. 

🎯 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா நாளை தொடக்கம். 

🎯 ஜம்மு -காஷ்மீர்: இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 26 தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டி.

🎯ஆர்டிஐ வலைதளங்கள் அமைக்கக்கூடிய மனு பதினோரு மாநிலங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🎯 இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558 ஆக உயர்வு.

🎯 இலங்கை பிரதமர் ஆனார் ஹரிணி அமர சூரிய. 

🎯 ஆசிய அமெரிக்கர்களிடையே கமலஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு. 

🎯  சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில்- ஜீவன் - விஜய் சுந்தர் இணைக்கு கோப்பை.777-இல் ஒரு சாதனை சாம்பியன். 

🎯 ராணி கோப்பை கிரிக்கெட் ரகானே தலைமையில் மும்பை. 

🎯 இந்திய செஸ் அணியினருக்கு உற்சாக வரவேற்பு.

Monday, September 23, 2024

இன்றைய முக்கிய செய்திகள். செவ்வாய்க்கிழமை 24/09/2024. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🎯 இஸ்ரேல் தாக்குதல்: லெபனானின் 356 பேர் உயிரிழப்பு 1246 பேர் காயம். 🎯 மருங்காபுரியில் ரூ 5 கோடியில் சேமிப்பு கிடங்கு. காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். 🎯 செப்டம்பர் 29 வரை சைகை மொழி வாரம் கடைபிடிப்பு. 🎯 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 6220 சாலையோர வியாபாரிகள் என கணக்கெடுப்பில் தகவல். 🎯 அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில் நுட்பநர்கள் நியமனம் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு. 🎯 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏன் முறை உபகரணம் வழங்க ரூ.1 கோடி. 🎯பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சு டிட்டோ - ஜாக் போராட்டம் ஒத்திவைப்பு. 🎯 இந்திய வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு 🎯 மனித குலத்தின் வெற்றி போர்க்களத்தில் இல்லை என ஐநாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 🎯 ஜம்மு - காஷ்மீரில் நாளை இரண்டாம் கட்ட பேரவை தேர்தல். 26 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு. 🎯 கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர் நிலையுடன் பூங்கா உருவாக்கலாம் பசுமை தீர்ப்பாயம் கருத்து. 🎯 இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக. பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 🎯3 பேருடன் பூமி திரும்பிய சோயுஸ் விண்கலம். 🎯 செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் இரு தங்கம் . சாதனை பட்டியலில் இந்தியா. 🎯 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலிடத்தில் நிலைக்கும் இந்தியா. 🎯 ஜெர்மனியில் நடைபெற்ற லேபர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஐரோப்பிய அணி 5-வது முறை சாம்பியன்.

 இன்றைய முக்கிய செய்திகள். செவ்வாய்க்கிழமை 24/09/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 இஸ்ரேல் தாக்குதல்: லெபனானின் 356 பேர் உயிரிழப்பு 1246 பேர் காயம்.

🎯 மருங்காபுரியில் ரூ 5 கோடியில் சேமிப்பு கிடங்கு. காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

🎯 செப்டம்பர் 29 வரை சைகை மொழி வாரம் கடைபிடிப்பு. 

🎯 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 6220 சாலையோர வியாபாரிகள் என கணக்கெடுப்பில் தகவல்.

🎯 அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில்  நுட்பநர்கள் நியமனம் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு.

🎯 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏன் முறை உபகரணம் வழங்க ரூ.1 கோடி.

🎯பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சு டிட்டோ - ஜாக் போராட்டம் ஒத்திவைப்பு.

🎯 இந்திய வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு 

🎯 மனித குலத்தின் வெற்றி போர்க்களத்தில் இல்லை என ஐநாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

🎯 ஜம்மு - காஷ்மீரில் நாளை இரண்டாம் கட்ட பேரவை தேர்தல். 26 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு.

🎯 கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர் நிலையுடன் பூங்கா உருவாக்கலாம் பசுமை தீர்ப்பாயம் கருத்து. 

🎯 இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக. பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

🎯3 பேருடன் பூமி திரும்பிய சோயுஸ் விண்கலம். 

🎯 செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் இரு தங்கம் . சாதனை பட்டியலில் இந்தியா. 

🎯 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலிடத்தில் நிலைக்கும் இந்தியா. 

🎯 ஜெர்மனியில் நடைபெற்ற லேபர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஐரோப்பிய அணி 5-வது முறை சாம்பியன்.

Sunday, September 22, 2024

இன்றைய முக்கிய செய்திகள். திங்கட்கிழமை 23/09/2024

 இன்றைய முக்கிய செய்திகள். திங்கட்கிழமை 23/09/2024

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 பரபரப்பான இலங்கை தேர்தல் முடிவு அதிபர் ஆனார் அனுரகுமார திசநாயக. சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மகன் படுதோல்வி.

🎯 இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை திருப்பித் தருகிறது அமெரிக்கா பிரதமர் மோடியிடம் அதிபர் பாய்டன் தகவல். 

🎯 ஸ்ரீரங்கம், லால்குடி ஜிஹெச்சில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு நோயாளிகளிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.

🎯 சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 

🎯 பிராந்திய ஒருமைப்பாடு இறையாண்மைக்கே ஆதரவு என க்கவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

🎯 திருச்சியில் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம். 

🎯 நெல்லை, தென்காசி மாவட்ட மலையடிவார பகுதிகளில் நில அதிர்வு அச்சத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

🎯 தடயவியல் துறையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க உத்தரவு. 

🎯 அமெரிக்கா - இந்தியா ராணுவத்துக்கான செமி  கண்டக்டர் தயாரிப்பு ஆலை கொல்கத்தாவில் அமைக்க ஒப்பந்தம்.

🎯 உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையம் விரைவில் ஒப்புதல். 

🎯 தமிழகத்தில் ஐந்து இடங்களில் வெயில் சதம். 

🎯 திருச்சி - பாங்காக் நேரடி விமான சேவை தொடக்கம்.

🎯 கல்வி உதவித்தொகை இரு மடங்கு அதிகரிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு.

🎯 வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்திய அபார வெற்றி. 

🎯 செஸ் ஒலிம்பியாட் 2024 இந்தியாவுக்கு 2 தங்கம்.

Friday, September 20, 2024

இன்றைய முக்கிய செய்திகள் சனிக்கிழமை 21/09/2024.

 இன்றைய முக்கிய செய்திகள் சனிக்கிழமை 21/09/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர் உதவித்தொகை இரு மடங்காக உயர்வு.

🎯 மருத்துவக் கலந்தாய்வு இரண்டாம் சுற்றில் கூடுதலாக 100 இடங்கள். 

🎯 துணை மருத்துவ படிப்புகள்: கலந்தாய்வு தொடக்கம்.

🎯 மாணவிக்கு வளைகாப்பு வீடியோ சம்பவம் : அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம். முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

🎯 'கூல் லிப்' போன்ற போதைப் பொருளை அனுமதிப்பது வேதனை அளிக்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

🎯 காலிப் பணியிடங்களை நிரப்ப முடியா விட்டால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடி விடலாம் என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

🎯 இந்து சமய அறநிலைய உதவி ஆணையர் பணியிடம் டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல். 

🎯 குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 

🎯 ஒரே தேர்தல் முறைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை இருமடங்காகும் என தேர்தல் துறை தகவல். 

🎯 விரைவில் எதிர்கால போர் பயிற்சி வகுப்பு நடைபெறும் என முப்படை தலைமை தளபதி தகவல். 

🎯 தில்லியில் பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🎯 இஸ்ரேல் மீது ஹிஸுபுல்லா ஏவுகணை மழை. 

🎯 உக்ரைன் போரில் 70 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு. 

🎯 க்வாட் கூட்டமைப்பின் தலைவராக இந்தியாவை பார்க்கிறோம் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

🎯 அரசு அனுமதியுடன் ரூ 33,420 கோடிக்கு ஐடி சாதனங்கள் இறக்குமதி.

🎯 இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டம் இழந்தது. மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம். 

🎯 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கத்தை நெருங்கும் இந்திய ஆடவர் அணி. மகளிருக்கு முதல் தோல்வி.

Thursday, September 19, 2024

இன்றைய முக்கிய செய்திகள் வெள்ளிக்கிழமை 20/09/2024.

 இன்றைய முக்கிய செய்திகள் வெள்ளிக்கிழமை 20/09/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து என ஸ்ரீநகர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி.

🎯 ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றது என முதல் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

🎯 புதிய சாக்கடை இணைப்புக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம். 

🎯 சிறு கனிமம் குத்தகை உரிமங்கள் பெற இணைய வழி இசைவு.

🎯 தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,000 மெகாவாட்டாக உயர்வு தனியாரிடம் 1000 மெகாவாட் கொள்முதல் செய்கிறது மின்வாரியம்.

🎯 யோகா - இயற்கை மருத்துவ படிப்புகள் தரவரிசை பட்டியல் வெளியீடு. செப்டம்பர் 23 முதல் கலந்தாய்வு.

🎯 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஹிந்திக்கு அடுத்து தமிழில் அதிகமாக மொழிபெயர்ப்பு என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

🎯 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு இன்று தொடக்கம்.

🎯 மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீட்டை ஏன் அமல் படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி?.

🎯 உணவு பதப்படுத்துதல் துறை வளர்ச்சிக்கு பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

🎯 போரின் விளிம்பில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா! 

🎯 வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் - ஜடேஜா அசத்தலில் மீண்டது இந்தியா.

🎯 ஹங்கேரியில் நடைபெறும் 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு தொடர்ந்து 7-வது வெற்றி.

Wednesday, September 18, 2024

இன்றைய முக்கிய செய்திகள் . வியாழக்கிழமை 19/09/2024.

 இன்றைய முக்கிய செய்திகள் . வியாழக்கிழமை 19/09/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அமைச்சரவை ஏற்பு. 

🎯 ஜம்மு காஷ்மீரில் 61% வாக்குப்பதிவு அமைதியாக நடந்த முதல் கட்டத் தேர்தல்.

🎯 திமுக மகளிர் அணி சார்பில் கருணாநிதி - 100 வினாடி வினா போட்டி.

🎯 காரைக்கால் மங்களூர் ரயில்கள் பகுதியாக ரத்து. 

🎯 ரேஷன் அரிசி இருப்பில் மாறுபாடு: தமிழக அரசு புதிய உத்தரவு.

🎯 குரூப் 4 தேர்வு அறிவிக்கையில் கூடுதல் காலி பணியிடங்களா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

🎯 ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம்: 7 நாடுகளில் நடைமுறை என ராம்நாத் கோவிந்த் குழு  அறிக்கையில் தகவல்.

🎯 2-ஆம் சுற்று மருத்துவ கலந்தாய்வு: இடங்கள் தேர்வு செய்ய மறு வாய்ப்பு.

🎯 குழந்தைகளின் ஓய்வூதியத்துக்காக பெற்றோர்கள் சேமிக்கும் 'வாத்சல்யா' திட்டம். மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைத்தார்.

🎯 பெண்களுக்கு மாதம் 2000 வீடுகளுக்கு இலவசம் மின்சாரம் ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி. 

🎯 சிந்து நதிநீர் ஒப்பந்தம் மறு ஆய்வு: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் 

🎯 மேஜர் தாக்குதலைத் தொடர்ந்து லெபனானின் மீண்டும் பயங்கரம் வாக்கி டாக்கிகள் வெடித்து 9 பேர் உயிரிழப்பு. புதிய வகையான போர்: இஸ்ரேல். 

🎯 வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முனைவர் பட்ட மாணவர் சேர்க்கை தொடக்கம்.

🎯 திருக்குறளை சைகை மொழியில் வெளியிடும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயக்குனர் இரா சந்திரசேகரன் தகவல்.

🎯 சுழல் சவாலைச் சமாளிக்குமா இந்தியா வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

🎯 சீனா ஓபன் பாட்மிண்டன்: மாளவிகா அதிரடி தொடக்கம் 

🎯 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பயர்ன் மியுனிக் சாதனை வெற்றி.

Tuesday, September 17, 2024

இன்றைய முக்கிய செய்திகள் புதன்கிழமை 18/09/2024.

*இன்றைய முக்கிய செய்திகள்* புதன்கிழமை 18/09/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தில்லி புதிய முதல்வர் அதிஷி. மூன்றாவது பெண் முதல்வர். கெஜ்ரிவால் ராஜினாமா.


🎯 மாநில உரிமைகளுக்காக சட்ட முன்னெடுப்புகள்: முதல்வர் உறுதி. 


🎯 புத்தகத் திருவிழா விழிப்புணர்வு போட்டிக்கு கட்டுரைகள் அனுப்ப செப்டம்பர் 22 கடைசி நாள். 


🎯 கால்நடை மருத்துவப் படிப்பு மூன்றாம்  பாலினத்தவரின் விண்ணப்பத்தை பரிசீலிக்க உயர் நீதிமன்ற உத்தரவு.


🎯 முதுநிலை தமிழாசிரியர் பணி. திருத்தப்பட்ட  இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிடக் கோரிக்கை.


🎯 சர்ச்சை பேச்சாளர் விவகாரம்: முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்.


🎯 மருத்துவப் படிப்பை கைவிட்டால் ரூ 10 லட்சம் அபராதம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.


🎯 நீர் நிலைகள் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு முதல்வர் விருது தமிழக அரசு உத்தரவு. 


🎯 விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். 


🎯 பிரதமர் மோடி செப்டம்பர் 21 இல் அமெரிக்கா பயணம் க்வாட் உச்சி மாநாட்டில் பங்கே இருக்கிறார்.


🎯 பிரதமர் மோடியின் 74 வது பிறந்த நாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து. 


🎯 ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் கட்ட தேர்தல். 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு.


🎯 இந்திய ,அமெரிக்க நட்புரவால் சீனா, ரஷ்யாவுக்கு கவலை என அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார்.


🎯 வறட்சியால் உணவு பற்றாக்குறை இறைச்சிக்காக 200 யானைகளைக் கொள்ள ஜிம்பாவே அரசு முடிவு.


🎯 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா ஒன்னு 1-0என  சீனாவை வீழ்த்தியது


🎯 லெஜென்ஸ் லீக் கிரிக்கெட்: தினேஷ் கார்த்திக் கேப்டன். 


🎯 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 6-வது சுற்றிலும் இந்திய அபார வெற்றி 


🎯 இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடக்கம்


🎯 தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்.

Sunday, August 18, 2024

*இன்றைய முக்கிய செய்திகள்* திங்கட்கிழமை 19/08/2024.

 *இன்றைய முக்கிய செய்திகள்* திங்கட்கிழமை 19/08/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்தியில் நிலையான ஆட்சிக்கு பங்களித்தவர் கருணாநிதி என ராஜ்நாத் சிங் புகழாரம்.


🎯 வரலாற்றில் அடிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் கருணாநிதி என பிரதமர் மோடி ராகுல் காந்தி புகார்


🎯 தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா மாற்றம். கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத் தலைவராக நியமனம். தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலராக முதல்வரின் செயலர்களில் ஒருவரான நா. முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.


🎯 யுஜிசி நெட் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு வெளியீடு.


🎯 சிறுகமணி வேளாண் அறிவியல் மையத்தில் சமுதாய வள பயிற்றுநர்களுக்கு ஐந்து நாள் வேளாண்மை பயிற்சி.


🎯 தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


🎯 பள்ளி மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர்கள் விவரம் பதிவேற்ற கல்வித்துறை உத்தரவு.


🎯 மீனவர்களை மீட்க புதிய ஒருங்கிணைப்பு மையம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் திறந்து 

 வைத்தார். 


🎯 நேதாஜி அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் பிரதமருக்கு பேரன் கடிதம்.


🎯 கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை மருத்துவமனை முன்னாள் முதல்வரிடம் மூன்றாவது நாளாக சிபிஐ விசாரணை. 


🎯 வங்கதேசம்: ஒரு மாதத்துக்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் திறப்பு.


🎯 இந்தியாவுடன் விரைவில் விரிவான பொருளாதார ஒப்பந்தம் என இலங்கை அதிபர் ரணில் அறிவிப்பு. 


🎯 மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான சின்னாடி ஓபன் அரை இறுதியில் மோதும் சின்னர் - ஸ்வெரெவ்.


🎯யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது இந்தியா


🎯 மாநில சீனியர் நீச்சல் எஸ்டிஏடி ஒட்டுமொத்த சாம்பியன். 


🎯 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வெற்றி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.


🎯 இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

Friday, April 12, 2024

பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன்(2024) மாதம் வெளியாகிறது

 பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன் மாதம் வெளியாகிறது


         பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற போட்டி எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

          தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு 41,485 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 130 மையங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்பட்டது.

         தமிழ் மொழித் திறன் அறிவுக்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெற்றது.

       அதைத் தொடர்ந்து, தேர்வுக்கான விடைக் குறிப்புகள் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது தேர்வர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி வரையில் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்பொழுது தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புகள், நடத்தப்பட்டு பணி நியமனத்துக்கு பள்ளி க்கல்வித்துறைக்கு அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


(சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024, தினமணி நாளிதழ் செய்தி)

Wednesday, April 3, 2024

TNSET EXAM 2024 FOR ASSISTANT PROFESSOR

 உதவிப் பேராசிரியர் பணிக்கான 'ஸ்லெட்' தேர்வு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

             உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்) திங்கட்கிழமை ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

          தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர 'நெட்'(தேசிய தகுதித் தேர்வு) அல்லது 'செட்' (மாநில தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

          அந்த வகையில் இந்த ஆண்டு 'செட்' தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.

           அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம் உள்பட மொத்தம் 43 பாடங்களுக்கான ஸ்லெட் தகுதித் தேர்வு ஜூன் 3ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1 திங்கள் கிழமை முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் www.msutnset.com என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

          தேர்வு கட்டணம்: பொதுப் பிரிவுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.2500, எம் பி சி , டி என் சி வகுப்புக்கு ரூ.2000, எஸ் சி , எஸ் டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 3-ஆம் பாலினத்தவர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

         இந்த தேர்வுக்கு முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. தேர்வில் மொத்தம் 2 தாள்கள் உள்ளன.

            முதல் தாளில் பொது அறிவு, ஆராய்ச்சி திறன், சிந்தனைத் திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் 50 கேள்விகள் இடம் பெறும்.2-ஆவது தாளில் சார்ந்த பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம் தேர்வு முறை உள்பட விவரங்களை www.msutnset.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (முன்னதாக செட் தேர்வுக்குரிய கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது)


Friday, March 29, 2024

”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு

 "தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

அமைந்துள்ள இடங்கள்:


இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.


வசதிகள்:


சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.


நேரம்:


இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.


கூடுதல் விவரங்களுக்கு:


தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


முழுமையான விவரங்களுக்கு:


http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெறலாம். 

For booking 


https://tnwwhcl.in/hostel- deatails




Thursday, March 28, 2024

'நெட்' மதிப்பெண்கள் மூலம் பிஎச்டி சேர்க்கை யுஜிசி அறிவிப்பு

 'நெட்' மதிப்பெண்கள் மூலம் பிஎச்டி சேர்க்கை யுஜிசி அறிவிப்பு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

புது தில்லி மார்ச் 28; 2024 - 25 கல்வி ஆண்டு முதல் தேசிய தகுதித் தேர்வு (நெட்) மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான (phd) சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது: 2024-25 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் நெட் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு பிஎச்டி பட்டத்துக்கான சேர்க்கையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்துவதை தவிர்த்து விட்டு ஒரே முறையின் கீழ் சேர்க்கை நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை நெட்தேர்வு நடத்தப்படுகிறது. இருமுறையில் ஏதேனும் ஒருமுறை பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரலாம். இந்த நடைமுறை நாட்டில் நல்ல கல்விச் சூழலை மேம்படுத்துவதோடு அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் என்றார்.


         *வெள்ளிக்கிழமை 29 மார்ச் 2024 தினமணி நாளிதழ் செய்தி (பக்கம்-10)*

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...