Wednesday, April 3, 2024

TNSET EXAM 2024 FOR ASSISTANT PROFESSOR

 உதவிப் பேராசிரியர் பணிக்கான 'ஸ்லெட்' தேர்வு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

             உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்) திங்கட்கிழமை ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

          தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர 'நெட்'(தேசிய தகுதித் தேர்வு) அல்லது 'செட்' (மாநில தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

          அந்த வகையில் இந்த ஆண்டு 'செட்' தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.

           அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம் உள்பட மொத்தம் 43 பாடங்களுக்கான ஸ்லெட் தகுதித் தேர்வு ஜூன் 3ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1 திங்கள் கிழமை முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் www.msutnset.com என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

          தேர்வு கட்டணம்: பொதுப் பிரிவுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.2500, எம் பி சி , டி என் சி வகுப்புக்கு ரூ.2000, எஸ் சி , எஸ் டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 3-ஆம் பாலினத்தவர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

         இந்த தேர்வுக்கு முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. தேர்வில் மொத்தம் 2 தாள்கள் உள்ளன.

            முதல் தாளில் பொது அறிவு, ஆராய்ச்சி திறன், சிந்தனைத் திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் 50 கேள்விகள் இடம் பெறும்.2-ஆவது தாளில் சார்ந்த பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம் தேர்வு முறை உள்பட விவரங்களை www.msutnset.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (முன்னதாக செட் தேர்வுக்குரிய கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது)


1 comment:

  1. தங்களின் நல் ஆதரவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...