இன்றைய முக்கிய செய்திகள். திங்கட்கிழமை 23/09/2024
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 பரபரப்பான இலங்கை தேர்தல் முடிவு அதிபர் ஆனார் அனுரகுமார திசநாயக. சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மகன் படுதோல்வி.
🎯 இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை திருப்பித் தருகிறது அமெரிக்கா பிரதமர் மோடியிடம் அதிபர் பாய்டன் தகவல்.
🎯 ஸ்ரீரங்கம், லால்குடி ஜிஹெச்சில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு நோயாளிகளிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
🎯 சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
🎯 பிராந்திய ஒருமைப்பாடு இறையாண்மைக்கே ஆதரவு என க்கவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
🎯 திருச்சியில் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்.
🎯 நெல்லை, தென்காசி மாவட்ட மலையடிவார பகுதிகளில் நில அதிர்வு அச்சத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
🎯 தடயவியல் துறையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க உத்தரவு.
🎯 அமெரிக்கா - இந்தியா ராணுவத்துக்கான செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலை கொல்கத்தாவில் அமைக்க ஒப்பந்தம்.
🎯 உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையம் விரைவில் ஒப்புதல்.
🎯 தமிழகத்தில் ஐந்து இடங்களில் வெயில் சதம்.
🎯 திருச்சி - பாங்காக் நேரடி விமான சேவை தொடக்கம்.
🎯 கல்வி உதவித்தொகை இரு மடங்கு அதிகரிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு.
🎯 வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்திய அபார வெற்றி.
🎯 செஸ் ஒலிம்பியாட் 2024 இந்தியாவுக்கு 2 தங்கம்.
No comments:
Post a Comment