இன்றைய முக்கிய செய்திகள் சனிக்கிழமை 21/09/2024.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர் உதவித்தொகை இரு மடங்காக உயர்வு.
🎯 மருத்துவக் கலந்தாய்வு இரண்டாம் சுற்றில் கூடுதலாக 100 இடங்கள்.
🎯 துணை மருத்துவ படிப்புகள்: கலந்தாய்வு தொடக்கம்.
🎯 மாணவிக்கு வளைகாப்பு வீடியோ சம்பவம் : அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம். முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
🎯 'கூல் லிப்' போன்ற போதைப் பொருளை அனுமதிப்பது வேதனை அளிக்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
🎯 காலிப் பணியிடங்களை நிரப்ப முடியா விட்டால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடி விடலாம் என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
🎯 இந்து சமய அறநிலைய உதவி ஆணையர் பணியிடம் டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்.
🎯 குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
🎯 ஒரே தேர்தல் முறைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை இருமடங்காகும் என தேர்தல் துறை தகவல்.
🎯 விரைவில் எதிர்கால போர் பயிற்சி வகுப்பு நடைபெறும் என முப்படை தலைமை தளபதி தகவல்.
🎯 தில்லியில் பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
🎯 இஸ்ரேல் மீது ஹிஸுபுல்லா ஏவுகணை மழை.
🎯 உக்ரைன் போரில் 70 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு.
🎯 க்வாட் கூட்டமைப்பின் தலைவராக இந்தியாவை பார்க்கிறோம் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
🎯 அரசு அனுமதியுடன் ரூ 33,420 கோடிக்கு ஐடி சாதனங்கள் இறக்குமதி.
🎯 இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டம் இழந்தது. மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்.
🎯 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கத்தை நெருங்கும் இந்திய ஆடவர் அணி. மகளிருக்கு முதல் தோல்வி.
No comments:
Post a Comment