பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 05.03. 2020. வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 05.03. 2020. வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. முதலாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு?
விடை : 1914 முதல் 1918 வரை.
2. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு?
விடை : 1939 முதல் 1945 வரை..
3. தேசிய சமதர்மவாதக் கட்சியை நிறுவியவர்?
விடை : ஹிட்லர்.
4. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர்?
விடை : பூலித்தேவர்.
5. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1930 நவம்பர் .
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸The pen is mightier than the sword
🌸 பேனாவின் முனை வாள் முனையிலும் வலிமையானது
🌸 Take time by the fore lock
🌸 காற்றுள்ள போதே தூற்றிக் கொள் .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.
நீதி : மனதில் உள்ள பயத்தை நீக்குதல் வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 இந்தியாவில் 29 பேருக்கு கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம். வெளிநாடுகளில் 17 இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு.
🌸 பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது.
🌸 பராமரிப்பு பணி : திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்.
🌸 கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடம் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.
🌸 காவிரி - கோதாவரி திட்டம் : தமிழகத்துக்கு 200 டிஎம்சி நீர் கிடைக்கும் என முதல்வர் அறிவிப்பு.ஆந்திரம், தெலுங்கானா முதல்வர்களை சந்திக்க முடிவு.
🌸 அரியலூர் , கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரிகள் அரசாணை வெளியீடு.
🌸 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 வாரங்களுக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு.
🌸 நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என அமைச்சர் எம். சி. சம்பத் தகவல்.
🌸 குடிநீர் ஆலை தொடங்க விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி : தமிழக அரசு அறிவிப்பு.
🌸 பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
🌸 500 ஆண்டுகள் பழமையான போர் பதக்கம் கண்டெடுப்பு.
🌸 ஐ. சி. ஏ. ஆர் நுழைவுத் தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி.
🌸 ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்புவது திடீர் ஒத்திவைப்பு.
🌸 முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழையுமா இந்தியா? பலம் வாய்ந்த இங்கிலாந்துடன் இன்று மோதல்.
🌸 பிசிசிஐ புதிய தேர்வுக்குழு தலைவரானார் சுனில் ஜோஷி, உறுப்பினராக ஹர்விந்தர் சிங் தேர்வு.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 COVID - 19 cases rise to 29 in India. Paytm employee test fasting in gurugram : all international passengers to be screened.
🌸 River linking CM writes to Andhra government.
🌸 States outreach to neighbours raises river - linking expectation, CM keen on clinching consensus with A.P ,Telangana on Kaveri - Godavari project.
🌸 Not a bumper sambar,but increase in area coverage offsets loss of yield. we will achieve production target for Trichy district this year : officials.
🌸 Anna varsity's decision worries guest faculty
🌸 IIT - M launches probe into hacking of server . Institution says an e-mail server was 'down', no data lost.
🌸 COVID -19 : government for universal screening. Testing facilities to be opened at district level.
🌸 Supreme court order cryptocurrency will offer only temporary relief. Government's draft law proposes to ban private currencies.
🌸 India seeks maiden spot in the final. After a string superlative performances, women in blue meet England last for clash. T20 world cup.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment