பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 03.03. 2020. செவ்வாய்க்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. உ.வே.சா எத்தனை நூல்களை பதிப்பித்தார்?
விடை : 87 நூல்கள்.
2. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள் என்று கூறியவர்?
விடை : அரசில் கிழார்.
3. வெண்கலம் எதனால் ஆன கலப்புலோகம்?
விடை : காப்பர் மற்றும் டின்..
4. கம்பியில்லா தந்தி கண்டுபிடித்தவர் யார்?
விடை : குலீல்மோ மார்கோனி.
5. நெப்போலியன் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் போர்?
விடை : வாட்டர்லூ
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸God helps those who help themselves
🌸 தனக்கு உதவுவோருக்கு உதவுவான் இறைவன்
🌸 God is love
🌸 அன்பே கடவுள்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.
நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தின்ல்லி வன்முறை விவகாரம் , எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு,
🎯 மானிய கோரிக்கைகள் மீது 23 நாட்கள் விவாதம்.ஏப்ரல் 9 வரை பேரவை கூட்டத்தொடர் என தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு.
🎯 வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை.
🎯 தொடங்கியது பிளஸ் டூ பொதுத்தேர்வு : திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர் ,புதுக்கோட்டை மாவட்டங்களில் 76 ஆயிரத்து 552 பேர் முதல்நாளில் தேர்வு எழுதினர். எளிதாக இருந்ததாக பார்வைத் திறனற்ற மாணவிகள் கருத்து.
🎯 தமிழகம் , புதுச்சேரியில் நாளை முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு 8.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
🎯16 அடுக்கு மாடி கட்டிடத்தின் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி - எப் 10 'ராக்கெட் நாளை மறுநாள் ஏவப்படுகிறது.
🎯 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் விரைவில் மாணவர் சேர்க்கை.
🎯 புதிய பாடதிட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு : எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து.
🎯 கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா 19 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும்.
🎯 நாட்குறிப்பு , நாட்காட்டிகளை அச்சடிப்பதில் நிதியை வீணாக்க வேண்டாம் என அமைச்சகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.
🎯 இந்தியாவில் வேலையின்மை 7.78% அதிகரிப்பு
🎯 கரோனா வைரஸ் 3000 - ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.
🎯 டெஸ்ட் தொடரையும் (2-0) கைப்பற்றியது நியூசிலாந்து.
🎯 மகளிர் 20 உலகக் கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா , வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை.
🎯 தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯🎯 Supreme court to hear petition on Delhi violence tomorrow. we cannot stop things from happening chief justice Bobde says on the riots.
🎯 Parambalur girl to fly to NASA .
🎯 Plus two exams begin : no cases of malpractice reported in Delta region.
🎯 Government urges high court to vacate stay on purchase of unwanted temple lands.State says they will be used for building houses for the poor.
🎯Rs.3000 cr . GST evasion in state.
🎯 high court takes a different view of maternity leave for government servants.
🎯 No larger bench for article 370 case.Supreme court also Denies conflict between the 1959 and 1970 judgements.
🎯 EU raises alert as virus toll crosses 3000.Nine times more new COvID -19 causes outside China than inside; WHO; Italy toll rises to 52.
🎯 New Zealand gallops to victory and series sweep, India's abjects surrender is complete as hosts win by 7 wickets. India in New Zealand.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.

No comments:
Post a Comment